Advertisment

மாணவர் மரணம்! அலட்சிய டாக்டர்கள்! கைதான மாணவியின் தாய்!

ss

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் நேரு நகரில் வாடகை வீடு ஒன்றில் குடியிருந்து வருகிறார்கள் ராஜேந்திரன், மாலதி தம்பதியர். இவர்களின் இரண்டாவது மகன் பாலமணிகண்டன். அதே பகுதியில் உள்ள சர்வைட் என்கிற தனியார் ஆங்கிலப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான்.

Advertisment

படிப்பில் மட்டுமின்றி பல்வேறு கலைகளிலும் நம்பர் ஒன் மாணவனாகவே இருந்துள்ளான். அதோடு, பள்ளியில் எல்லோருக் கும் மிகவும் பிடித்தமானவனாகவே இருந்து வந்துள்ளான். அவனது நற்புண்புகளாலும், படிப்பில் காட்டும் ஆர்வத்தாலும் ஆசிரியர்கள் அவனிடம் காட்டும் அன்பும், அரவணைப்பும் சக மாணவர்களுக்கே பொறாமை ஏற்படும் வகையில் அமையுமாம்.

cc

இந்த நிலையில், பாலமணிகண்டனோடு ஒரே வகுப்பில் படிக்கும் மாணவி மேரியும் ஓரளவு படிக்கக்கூடியவள். எனினும் பாலமணிகண்டனைப் படிப்பில் மிஞ்சமுடியவில்லையே என்ற எண்ணம், அவளை ஆட்டிவைத்துள்ளது. இதற்காக அவள் பலமுறை மணிகண்டனுடன் வகுப்பறையிலேயே சண்டை போட்ட சம்பவங்களும் நடந்திருக்கிறது. இது குறித்து அவள் தன் அம்மா சகாயராணி விக்டோரியாவிடமே, "இனிமேல் நான் ஸ்கூல் போக மாட்டேன், பாலமணிகண்டன் என்

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் நேரு நகரில் வாடகை வீடு ஒன்றில் குடியிருந்து வருகிறார்கள் ராஜேந்திரன், மாலதி தம்பதியர். இவர்களின் இரண்டாவது மகன் பாலமணிகண்டன். அதே பகுதியில் உள்ள சர்வைட் என்கிற தனியார் ஆங்கிலப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான்.

Advertisment

படிப்பில் மட்டுமின்றி பல்வேறு கலைகளிலும் நம்பர் ஒன் மாணவனாகவே இருந்துள்ளான். அதோடு, பள்ளியில் எல்லோருக் கும் மிகவும் பிடித்தமானவனாகவே இருந்து வந்துள்ளான். அவனது நற்புண்புகளாலும், படிப்பில் காட்டும் ஆர்வத்தாலும் ஆசிரியர்கள் அவனிடம் காட்டும் அன்பும், அரவணைப்பும் சக மாணவர்களுக்கே பொறாமை ஏற்படும் வகையில் அமையுமாம்.

cc

இந்த நிலையில், பாலமணிகண்டனோடு ஒரே வகுப்பில் படிக்கும் மாணவி மேரியும் ஓரளவு படிக்கக்கூடியவள். எனினும் பாலமணிகண்டனைப் படிப்பில் மிஞ்சமுடியவில்லையே என்ற எண்ணம், அவளை ஆட்டிவைத்துள்ளது. இதற்காக அவள் பலமுறை மணிகண்டனுடன் வகுப்பறையிலேயே சண்டை போட்ட சம்பவங்களும் நடந்திருக்கிறது. இது குறித்து அவள் தன் அம்மா சகாயராணி விக்டோரியாவிடமே, "இனிமேல் நான் ஸ்கூல் போக மாட்டேன், பாலமணிகண்டன் என்னைய அடிக்கடி தோற்கடிச்சி அவமானப்படுத்தறான். அப்பா இருந்திருந்தா எனக்கு இப்படியெல் லாம் அவமானம் நடக்காதுல்ல''’என அழுது தீர்த்திருக்கிறாள்.

அப்பா இல்லாத குறையே தெரியாமல் வளர்ந்த ஒரே குழந்தை அழுவதைக் கண்டு ஆத்திரத்தில் புத்திகெட்டுப்போன அவள் அம்மா, பாலமணிகண்டனை பழிவாங்கத் திட்டமிட்டு, எலிபேஸ்ட் மருந்தை குளிர்பானத்தில் கலந்து பள்ளிக்கே சென்று வாட்ச்மேன் மூலம் கொடுத்துக் குடிக்க செய்திருக்கிறார்.

தன் அம்மா கொடுத்தனுப்பியதாக கொடுக்கப்பட்டதால், அதைக்குடித்த பாலமணிகண்டனுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட, காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான் அவன். அங்கு சிகிச்சை பலனின்றி பாலமணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தான். தகவல் காவல்துறைக்குப் போக, விஷம் கொடுத்த சகாயராணி விக்டோரியாவை கைது செய்து சிறையில் அடைத்த னர். அதோடு அவரது வீட்டையும் சிலர் அடித்து நொறுக்கினர்.

Advertisment

cc

அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் பாலமணிகண்டனை வைக்காமல், பொதுவார்டில் வைத்து அரைகுறையாக சிகிச்சை அளித்ததால்தான் அவன் மரணமடைந்தான் என்றும், குற்றவாளி யார் என சி.சி.டி.வி. காட்சியில் தெளிவாகத் தெரிந்தும் பள்ளியின் பெயருக்கு களங்கம் வராமல் இருக்க நிர் வாகத்திடம் கையூட்டு பெற்றுக்கொண்டு காவல் துறையினர் விசாரணையை முறையாக கையில் எடுக்கவில்லை என்றும் ’பலரும் குமுறுகின்றனர்.

மருத்துவர்களையும், காவல்துறையையும் கண்டித்து கடை அடைப்பு, அமைதிப் பேரணி என தன்னெழுச்சியாக மக்கள் திரண்டு மாவட்டத்தையே ஸ்தம்பிக்கச் செய்ததோடு புதுவை அரசாங்கத்தையே திகைக்க வைத்தனர்.

பேரணியின் முடிவில் காரைக்கால் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனுவையும் அளித்த னர். மாவட்ட ஆட்சியரும், முதற்கட்ட சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இருவர் மீது உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியோ, மாணவனின் இறப்பு குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட மருத்துவக் குழுவை அமைத்திருக்கிறார். அந்த குழு கொடுத்த அறிக்கையின்படியே விஜயக்குமார், பாலாஜி ஆகிய இரண்டு மருத்துவர்களைப் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். பாலமணிகண்டனின் பெற்றோரான ராஜேந்திரன், மாலதி ஆகியோ ரிடம் நாம் இது குறித்துக் கேட்டபோது...

"ஏழையா இருந்தாலும் கூலிவேலை செய்து பிள்ளை களை நல்லபடியா படிக்க வைத்தோம்.

சம்பவத்தன்னைக்கு மாலை ஸ்கூல்விட்டு வீட்டுக்கு வந்தவன் எதார்த்தமா, "என்னம்மா கூல்டிரிங்ஸ் குடிச்ச மதியத்தில இருந்து வயித்தப் பெரட்டிகிட்டே இருக்கு, வாந்தி வாந்தியா வருது''ன்னு சொன்னான். "நாங்க எதுவும் கொடுத்துவிடலயே தங்கம்'னு சொல்லும்போதே மூன்றுமுறை வாந்தி எடுத்த படியே என் மடியில சாய்ந்துட்டான். மருத்துவ மனையில் போலீஸ் மற்றும் சிலர் வந்து விசாரிக்கும் பொழுது, கேட்ட கேள்விக்கெல்லாம் நல்லா பதில் பேசிக்கிட்டு இருந்த புள்ள, இரவு 10 மணிக்கு திடீர்னு இறந்துட்டான்யா''’என்று கதறினார்.

cc

இதுகுறித்து சமூக ஆர்வலரும், காரைக்கால் மாவட்ட வி.சி.க. தொகுதிச் செயலாளருமான விடுதலை கனலிடம் கேட்டபோது, " அந்த மாணவனுக்கு முறையான சிகிச்சையே கொடுக் கலை. உரியமுறையில் டாக்டர்கள் கவனித்திருந் தால், அவனைக் காப்பாற்றி இருக்கலாம். பாலமணிகண்டனின் இறப்பிற்கு பிறகு அனைவரது கவனமும் சாக்கடையாக இருந்துவரும் அரசு மருத்துவமனையின் பக்கம் திரும்பியிருக்கு. தினசரி இறப்பு நடந்துக்கிட்டுதான் இருக்கு. இதைத் தலைமை மருத்துவமனை என கூறுவதைவிட, தலைமை சவக்கிடங்கு என்று கூறுவதே சரியாக இருக்கும். இதைத் தாண்டி அந்த மருத்துவமனையில் அதிகம் நடப்பது சிசுக்கொலைகள் தான். அந்த மருத்துவமனையில் வேலை பார்க்கிற ஒவ்வொரு டாக்டரும் தனியா கிளினிக் வச்சிருக்காங்க. இங்க கருவுற்று வர்றவங்களைத் தங்களோட கிளினிக் குக்கு வரச்சொல்லி மருத்துவம் கொடுக்கிறாங்க. அதனால் அவர்களின் கவனம் மருத்துவமனையின் மீது செல்வதே இல்லை''’என்றார் காட்டமாக.

புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திரபிரியங்கா கூறுகையில், ’"பாலமணிகண்ட னுக்கு முதல் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதோடு சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் இருந்துவந்த பால மணிகண்டனின் பெற்றோருக்கு குடிசை மாற்றுவாரியத்தில் வீடு ஒன்று கொடுத்துள்ளோம்''” என்கிறார்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூரோ "விரைவில் பாண்டிச்சேரியில் டெபுடேச னில் பணிபுரிபவர்கள் உடனே இங்கு பணிக்கு வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம். மருத்துவ மனையை சீரமைக்கும் பணிகள் நடக்கிறது''’ என்கிறார். என்னதான் இருந்தாலும் மாணவனின் இழப்பை எதைக் கொண்டும் ஈடுசெய்ய முடியாது.

nkn170922
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe