ழுங்கீன செயல்களால் கண்டிக்கப்பட்ட மாணவர் தற்கொலை செய்துகொள்ள, சாலை மறியல், பள்ளி வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுவீச்சு என கலவர பூமி யாக மாறியுள்ளது நெல்லை மாவட்டம் வீரவநல்லூர்!

வியாழக்கிழமை இரவு ஆம்புலன்ஸில் கொண்டுவந்த சடலத்துடன் வீரவநல்லூர் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர் மானாபரநல்லூர் கிராமத்தினர். சம்பவ இடத்திற்கு உடனே விரைந்த சேரன்மகாதேவி டி.எஸ்.பி. சத்யராஜ், அம்பை டி.எஸ்.பி. சதீஷ்குமார் ஆகியோர் மறியல் செய்தவர் களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். "என்னுடைய மகன் சபரிக்கண்ணனை ஆசிரியர்கள் திட்டியதாலேயே களைக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டான். தற்கொலைக்குக் காரணமான அந்த ஆசிரியை கள், தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீதும் வழக்குப்பதிவு செய்து நட வடிக்கை எடுத்தால் மட்டுமே சாலை மறியலை கைவிடு வோம்'' என்றார் தற்கொலை செய்துகொண்ட சபரிக் கண்ண னின் தந்தை சங்கரகுமார். 

20 நிமிடங்களாக நீடித்த சாலை மறியலில் அதிகாரிகளின் தொடர் பேச்சுவார்த்தை காரணமாக  சாலை மறியலை கைவிட்டு, உடலை தகனம் செய்ய அங்கிருந்து அகன்றனர். சாலை மறியல் பரபரப்பு அடங்குவதற்குள் வீரவநல்லூர் -வெள்ளாங்குளி செல்லும் பிரதான சாலையை ஒட்டிய வாறு நிறுத்தப்பட்டிருந்த  பள்ளிக்குச் சொந்தமான வாகனங்கள் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீச, வாகனங்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கின. அடுத்த        சில நிமிடங்களில் சேரன்மகாதேவி தீயணைப்புப் படையினரும், காவல் துறையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

Advertisment

"மானாபரநல்லூரை சேர்ந்த விவசாயி சங்கரகுமாரின் மகன் சபரிகண்ணன், வீரவ நல்லூரில்  செயின்ட் ஜான்ஸ் பள்ளியில்  10ஆம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 4ஆம் தேதி அன்று பள்ளியில் நடந்த ஸ்போர்ட்ஸ் மீட் விழாவின்போது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் சபரிக் கண்ணனின் வகுப்பாசிரியை உட்பட 3 ஆசிரியைகளும், தலைமை ஆசிரியரும் சபரிக்கண்ணனை கண்டித்தனர். அதுதவிர 7ஆம் தேதி, சபரிக்கண்ணன் பெற்றோர் பள்ளிக்கு வந்து பார்க்க வேண்டுமென்று கூறி அனுப்பி வைத்தனர். இதைப் பற்றி வீட்டில் கூறினால் பிரச்சனை ஆகும். அதேவேளை பள்ளிக்கு பெற்றோர் வர வில்லையென்றால் பள்ளி நிர்வாகம் கடுமையாகத் தண்டனை கொடுக்கும் எனும் சூழலில் 7ஆம் தேதி வழக்கம்போல் பள்ளிக்கு வந்தவன், பள்ளி வாசலருகே கையில் கொண்டு வந்த களைக்கொல்லியை குடித்து விட்டு, பள்ளி பிரயேரில் கலந்துகொள்ள, அங்கேயே மயங்கி விழ, அவனை சிகிச்சைக் காக சேரன்மகாதேவி அரசு மருத்துவ மனைக்கு கொண்டுசென்றனர். ஒழுங்கீனமாக நடந்துகொண்டால் கண்டிப்பதில் தவறில் லையே? அவனது பெற்றோரை அழைத்ததும் இதைச் சொல்லத்தான். ஆனால் இவன் இந்த முடிவை எடுப்பானென்பது தெரியாதே'' என்கிறார் பள்ளியின் ஆசிரியை ஒருவர்.

veravanallur1

கடந்த 7ஆம் தேதி களைக்கொல்லியைக் குடித்து தற்கொலைக்கு முயன்ற சபரிக்கண்ணன், முதலில் அங்குள்ள சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அதன் பின்னரே அவரது பெற்றோருக்கு தகவல் கூறப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மாணவனை திருநெல் வேலியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், அதன் பிறகு மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கும் கொண்டுசென்று சேர்த்து சிகிச்சை எடுத்துள்ளனர். பல நாட்கள் சிகிச்சையிலிருந்த மாணவன், வியாழனன்று சிகிச்சை பலனின்றி மதுரையிலேயே உயிரிழந்திருக் கிறான்.

Advertisment

வீரவநல்லூர் காவல் அதிகாரி ஒருவரோ, "பள்ளி வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்ட விவகாரத்தில், பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் மீது 435 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தும், சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் அடிப்படையாகக்கொண்டும் விசாரணை நடத்தி வருகின்றோம். தீ வைத்து எரிக்கப்பட்ட இடத்திற்கு தடய அறிவியல் நிபுணர்கள் வருகைதந்து ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர். இதனடிப்படையில் அரிகேசநல்லூர் பகுதியை சேர்ந்த ஹரிகரனையும், உப்பு வாணியமுத்தூர் பகுதியை சேர்ந்த அருணையும் கைது செய்து விசாரித்து வருகின்றோம். இருவரும் ஆழ்வார்குறிச்சியிலுள்ள தனியார் கல்லூரியில் படித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதே வேளையில், அசம்பாவித சம்பவங்கள் மேலும் நிகழாமல் தடுக்கும் வகையிலும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையிலும், சம்பவப்பகுதி மற்றும் பள்ளி வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது'' என்றார்.

இதனிடையில், வெள்ளிக்கிழமையன்று பள்ளிக்கு விடுமுறை அளித்தது பள்ளி நிர்வாகம். சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விரிவான அறிக்கை கோரப்பட்டு, மெட்ரிக் பள்ளி மாவட்ட அலுவலர் மூலம் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள் ளது மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம்.

ஆசிரியர் கண்டிப்பால் மாணாக்கர்கள் தற்கொலையை தடுக்க விரிவான கவுன்சிலிங் இருவருக்கும் தேவை. அதேபோல், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் கண்காணிப்பதன் அவசியத்தையும் உணர்ந்தால் மட்டுமே இது போன்று அசம்பாவிதங்கள் நடக்காது.

-நா.சண்மதி