நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் நான்கரை ஆண்டுகள் எம்.பி.பி.எஸ். படித்து முடித்ததும் ஓராண்டு அதே மருத்துவக்கல்லூரியில் இன்டர்ன்ஷிப் செய்யும் பயிற்சி மருத்துவர்களாக, உள்மருத்துவர்களாக பணியாற்ற வேண்டும். அப்படி பணியாற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு உதவித்தொகை வழங்கவேண்டும். புதுச்சேரியில் 9 மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. அதில், 7 தனியார் மருத்துவக்கல்லூரிகள். இங்கு பயிற்சி மருத்துவர்களுக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கவேண்டுமென 2024, செப்டம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்தது புதுச்சேரி சுகாதாரத்துறை. அதேபோல் முதுகலை படிக்கும் மருத்துவ மாணவ, மாணவிகளுக்கு, முதலாமாண்டுக்கு 43 ஆயிரம், இரண்டா மாண்டுக்கு 45 ஆயிரம், மூன்றாமாண்டுக்கு 47 ஆயிரம் வழங்க வேண்டுமென்று உத்தரவிடப்பட்டது. அந்த உத்தரவை கடந்த ஒரு வருடமாக தனியார் கல்லூரிகள் செயல்படுத்தாமல் உள்ளன.
இந்நிலையில், செப்டம்பர் 19ஆம் தேதி முதல் புதுச்சேரி மகாத்மாகாந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் பயி
நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் நான்கரை ஆண்டுகள் எம்.பி.பி.எஸ். படித்து முடித்ததும் ஓராண்டு அதே மருத்துவக்கல்லூரியில் இன்டர்ன்ஷிப் செய்யும் பயிற்சி மருத்துவர்களாக, உள்மருத்துவர்களாக பணியாற்ற வேண்டும். அப்படி பணியாற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு உதவித்தொகை வழங்கவேண்டும். புதுச்சேரியில் 9 மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. அதில், 7 தனியார் மருத்துவக்கல்லூரிகள். இங்கு பயிற்சி மருத்துவர்களுக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கவேண்டுமென 2024, செப்டம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்தது புதுச்சேரி சுகாதாரத்துறை. அதேபோல் முதுகலை படிக்கும் மருத்துவ மாணவ, மாணவிகளுக்கு, முதலாமாண்டுக்கு 43 ஆயிரம், இரண்டா மாண்டுக்கு 45 ஆயிரம், மூன்றாமாண்டுக்கு 47 ஆயிரம் வழங்க வேண்டுமென்று உத்தரவிடப்பட்டது. அந்த உத்தரவை கடந்த ஒரு வருடமாக தனியார் கல்லூரிகள் செயல்படுத்தாமல் உள்ளன.
இந்நிலையில், செப்டம்பர் 19ஆம் தேதி முதல் புதுச்சேரி மகாத்மாகாந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிற்சியி லுள்ள இளநிலை மருத்துவ மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 23 ஆண்டு களாக இயங்கும் இந்த மருத்துவக்கல்லூரியில் தற்போது 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்துவருகின்றனர். இதில் 250 மாணவ, மாணவிகள் இளங்கலை பயிற்சி மருத்துவர்களாக உள்ளனர். போராட்டத்திலுள்ள மாணவர்களிடம் பேசியபோது, "நாங்கள் நான்கரை ஆண்டுகள் படித்துமுடித்துவிட்டு ஐந்தாமாண்டு பயிற்சி மருத்துவர் களாக உள்ளோம். எங்களுக்கு மாதம் 20 ஆயிரம் வழங்க வேண்டு மென புதுச்சேரி அரசு கடந்தாண்டு உத்தரவிட்டது. அந்த உத்தரவை எங்கள் மருத்துவக்கல்லூரி நிர்வாகம் நிறைவேற்றவில்லை. மாதம் 2,500 ரூபாய் தான் உதவித்தொகை தரப்படுகிறது.
நாங்கள் இதுகுறித்து மருத்துவ மனை நிர்வாகிகளிடம் முறையிட்ட போதும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இப்போது போராட்டத்திலுள்ள எங்களில் சிலரை, மருத்துவராக பதிவு செய்யவிடமாட்டோமென மிரட்டுகிறார்கள். வீட்டுக்கு போன் செய்து பெற்றோர்களையும் அச்சுறுத்தி மிரட்டியிருக்காங்க. எங்க சேர்மன், வைஸ்சேர்மன் யாரும் எங்ககிட்ட இதுவரை பேசல. அவர்களுக்கு கீழுள்ள நிர்வாகிகள் மட்டுமே பேசறாங்க. இந்த மருத்துவக் கல்லூரியில் மட்டுமல்லாது, வேறு கல்லூரிகளிலும் இந்த பிரச்சனை இருக்கு'' என்றார்கள். மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் இறங்கியபின் புதுவை சுகாதாரத்துறை 23ஆம் தேதி விசாரணைக்குழு அமைத்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி மாநில மாணவர் -பெற்றோர் நலச்சங்க தலைவர் வை.பாலாவிடம் பேசியபோது, "புதுச்சேரியில் ஜிப்மர், இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லூரிகள், அறுபடை வீடு, விநாயகா மிஷன், மகாத்மாகாந்தி, லட்சுமிநாராயணா நிகர்நிலை பல்கலைக் கழகமாகவும், மணக்குள விநாயகர், பிம்ஸ், வெங்கடேஸ்வரா என 7 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் பயிற்சி மருத்துவர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும். அரசு உத்தரவு போட்டது முதலே அரசு கல்லூரிகள் மற்றும் பிம்ஸ் மருத்துவக் கல்லூரியை தவிர மற்ற தனியார் மருத்துவக் கல்லூரிகள் அந்த உத்தரவை கடைபிடிக்கவில்லை. இளங்கலை மட்டுமல்ல, முதுகலை, பல் மருத்துவம் பயிலும் மாணவ, மாணவிகளும் உதவித்தொகை கிடைக்காமல் பாதிக்கப்படறாங்க. தனியார் கல்லூரிகள் அதிக கட்டணம் வாங்கி கொள்ளை யடிக்கிறாங்க. இது குறித்தெல்லாம் புகார் தந்திருக்கு.
மருத்துவக் கமிட்டி நிர்ணயிச்ச உதவித்தொகையை தருவதில்லை என மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியாவுக்கு புகார் தந்தோம். தமிழ்நாட்டில் ஒரு தனியார் கல்லூரி குறித்து மாநில அரசிடம் புகார் தந்ததும் உடனடியாக நட வடிக்கை எடுத்தது. புதுச் சேரியில் ஒரு தனியார் கல்லூரி மீது புகார் தந்தபோது, ஒன்றிய அரசு, சி.பி.ஐ., மத்திய விஜிலென்ஸ் கமிட்டி, புதுவை அரசு என யாரும் கண்டு கொள்ளவில்லை. சுகா தாரத்துறை நினைத்தால் மாணவர்களின் நலனைக் காக்கமுடியும். ஆனால், புதுச் சேரி சுகாதாரத்துறை அமைச்சகம், தனியார் கல்லூரிகளின் அலுவலகம் போல் செயல்படுகிறது'' என்றார் குற்றச்சாட்டாக.
இதுகுறித்து புதுச்சேரி மாநில மாணவர் -பெற்றோர் -ஆசிரியர் நலச்சங்க தலைவர் நாராயணசாமியிடம் கேட்டபோது, "தனியார் மருத்துவக் கல்லூரிகள் நான்காண்டு படிப்புக்கு 5 ஆண்டு கல்விக் கட்டணம் வாங்கறாங்க. அரசு நிர்ணயித்த கட்டணத்தைத் தாண்டி கூடுதல் கட்டணம் வாங்கறாங்க. அப்படி வாங்கியும் மாணவ - மாணவிகளுக்கு தரவேண்டிய சலுகைகளை, உதவிகளை செய்வதில்லை.
இந்த உதவித்தொகையைக்கூட உச்சநீதி மன்றத் தீர்ப்பின்படி இந்திய மருத்துவ கவுன்சில் வழங்கவேண்டும் என உத்தரவு போட்டி ருக்கு. அதன்படி தந்துதான் ஆகவேண்டும். கடந்தாண்டு ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி மீது மாணவர்கள் எம்.என்.சி.க்கு புகார் அனுப்பினார்கள், ஒன்றிய அரசின் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தி அவர்களுக்கு உதவித்தொகை கிடைக்க வழி செய்தார்கள். அந்த குழு, மற்ற கல்லூரிகளில் நடப்பது குறித்து கண்டுகொள்ளவில்லை. புதுச்சேரி அரசு இந்த விவகாரத்தில் கண்மூடிக்கொண்டு இருக்கிறது. இதனால் மருத்துவ மாணவர்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள்'' என்றார்.
இக்குழு, அனைத்து கல்லூரிகளிலும் விசாரணை நடத்தி பயிற்சி மருத்துவர்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை வைக்கப்படுகிறது. நடக்குமா?
-தமிழ்குரு