திருவள்ளூர் நாடாளுமன்ற தனித் தொகுதியில் சுமார் 21 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். திருவள்ளூர், கும்மிடிப் பூண்டி, பொன்னேரி தனி, மாதவரம், ஆவடி, பூந்தமல்லி தனி ஆகிய சட்டமன்றத் தொகுதி களை உள்ளடக்கியது இத்தொகுதி.
கடந்த முறை தி.மு.க. கூட்டணி பலத்தால் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார் அபார வெற்றி பெற்றார். இம்முறையும் அவருக்கே சீட் கிடைக்குமென எதிர்பார்த்த நிலையில், உளவுத்துறை ரிப்போர்ட்டில் மக்களிடையே அவருக்கு செல்வாக்கு இல்லையென்பது தெரிந்தது. அதேபோல, கடந்த 15 ஆண்டு களாகக் கூட்டணிக்கே ஒதுக்கப்பட்ட நிலையில் இம்முறை தி.மு.க.வுக்கு இத்தொகுதி யை ஒதுக்க வேண்டுமென அறிவாலயத்தில் உடன்பிறப்புகள் குரலெழுப்பினர். ஆனால் காங்கிரஸ் தலைமை கேட்டுக்கொண்டதால், மீண்டும் காங்கிரஸுக்கே ஒதுக்கப்பட்டது. இம்முறை காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சசிகாந்த் செந்தில் போட்டியிடுகிறார். இவர் சமீபத்தில் நடந்த கர்நாடக மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக சிறப்பாக பணியாற்றி மாபெரும் வெற்றியை தேடித் தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. தி.மு.க. கூட்டணியில், தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சியினரின் களப்பணியால் இவர் முன்னிலை வகிக்கிறார். இருந்தபோதும், இவர் தி.மு.க.வை எதிர்த்து பேசிவரும் சவுக்கு சங்கரின் சகோதரியை திருமணம் செய்துள்ளதை சுட்டிக்காட்டி விமர்சனங்களும் எழுகின்றன. எனினும், மும்முனைப் போட்டி யில் மற்ற இரு வேட்பாளர்களும் பலமற்றிருப் பது இவரின் வெற்றியை உறுதி செய்யும்.
அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான நல்ல தம்பிக்கு ஒதுக்கப்பட்டது, அ.தி.மு.க. கூட் டணிக்கு சற்று பின்னடைவு எனக் கூறலாம். இதற்குமுன் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முன்னாள் எம்.பி.யான வேணுகோபாலுக்கு இந்தமுறை தொகுதியை ஒதுக்கியிருந்தால் போட்டி கடுமையாக இருந்திருக்கும். தொகு திக்கு சம்பந்தமில்லாத, பணப் பசையுமில்லாத வேட்பாளர் என்பதால் பரபரப்பின்றி காணப்படுகிறது. மேலும், அ.தி.மு.க. கூட்டணி யிலுள்ள புரட்சி பாரதத்திற்கு கணிசமான வாக்குகள் இருப்பதால் அக்கட்சிக்கு இத்தொகுதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்த்து, ஒதுக்கப்படாததால் அவர்களின் அதிருப்தியும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
பா.ஜ.க. - பா.ம.க. கூட்டணியிலும் தொகுதிக்கு சம்பந்தமேயில்லாத, பரமக்குடி யை சேர்ந்த பொன்.பாலகணபதிக்கு ஒதுக்கப் பட்டது விமர்சனத்தை எழுப்பியுள்ளது. இவர் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இச்சமூகத்தினர் இத்தொகுதியில் மிகவும் குறைவு என்பதால் இந்த மக்களவைத் தேர்தலில் திருவள்ளூர் தனி தொகுதியைப் பொறுத்தவரை தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் தான் பலமிக்கவராக வலம் வருகிறார்.