Advertisment

மன அழுத்தம்... டார்ச்சர்... போலீஸ் தற்கொலை! -செங்கோட்டை சோகம்!

ss

30 வயதேயான மூர்த்தி தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டை நகர காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தவர். பிப்ரவரி 19 இரவு, தென்காசியின் ஆயிரப்பேரிபுதூரிலுள்ள தனது வீட்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

Advertisment

தங்களது மகன் தூக்கிட்டுத் தொங்குவதைக் கண்டு பெற்றோர் கதறியிருக்கிறார்கள். தகவல் போய் உடனடியாக ஸ்பாட்டுக்கு வந்த தென்காசி டி.எஸ்.பி. நாகசங்கர் அந்த வீட்டினைப் பார்வையிட்டு ஆய்வு செய்து உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அனுப்பிவிட்டு விசாரணையை மேற்கொண்டிருக்கிறார்.

police

திருமணமாகாத இளவயது போலீஸ்காரரான மூர்த்தியின் தற்கொலை அந்தக் காலனிவாசிகளை திகைப்பிலும் வேதனை யிலும் தள்ளவே.. அவரது உறவினர்களும், காலனிவாசிகளும் திரண்டு அங்குள்ள சாவடியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். "மூர்த்திக்கு சக போலீஸ்காரர்களால் டார்ச்சர் தரப்பட்டிருக்கு. அந்த மன உளைச்சல், மன அழுத்தம் காரண மாகவே விரக்தியடைந்த மூர்த

30 வயதேயான மூர்த்தி தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டை நகர காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தவர். பிப்ரவரி 19 இரவு, தென்காசியின் ஆயிரப்பேரிபுதூரிலுள்ள தனது வீட்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

Advertisment

தங்களது மகன் தூக்கிட்டுத் தொங்குவதைக் கண்டு பெற்றோர் கதறியிருக்கிறார்கள். தகவல் போய் உடனடியாக ஸ்பாட்டுக்கு வந்த தென்காசி டி.எஸ்.பி. நாகசங்கர் அந்த வீட்டினைப் பார்வையிட்டு ஆய்வு செய்து உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அனுப்பிவிட்டு விசாரணையை மேற்கொண்டிருக்கிறார்.

police

திருமணமாகாத இளவயது போலீஸ்காரரான மூர்த்தியின் தற்கொலை அந்தக் காலனிவாசிகளை திகைப்பிலும் வேதனை யிலும் தள்ளவே.. அவரது உறவினர்களும், காலனிவாசிகளும் திரண்டு அங்குள்ள சாவடியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். "மூர்த்திக்கு சக போலீஸ்காரர்களால் டார்ச்சர் தரப்பட்டிருக்கு. அந்த மன உளைச்சல், மன அழுத்தம் காரண மாகவே விரக்தியடைந்த மூர்த்தி தற்கொலை செய்துகொண்டிருக் கிறார். அதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மீது தீண்டாமை வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்யவேண்டும். மூர்த்தியின் மரணத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு தரவேண்டும். குடும்பத் தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படவேண்டும். அதுவரை யிலும் உடலை வாங்கப்போவ தில்லை' என்ற கோரிக்கையோடு இரண்டாவது நாளாக அழுத்த மான போராட்டத்தில் ஈடு பட்டவர்களிடம் அதிகாரிகளின் சமரசப் பேச்சு எடுபடாமல் போயிருக்கிறது.

Advertisment

காவலர் மூர்த்தியின் தற்கொலைக்கான நோக்கம் பற்றிய காவல்துறையின் மேல் மட்ட விசாரணை ஒருபுறம் தீவிரமான நிலையில், இன்னொருபுறம் அவரது மன அழுத்தம் பற்றியும் ஏரியாவாசிகளிடம் பேசப்பட்டு வரவே, அதுகுறித்து போராட்டத்திலிருப்பவர் களிடம் பேசினோம்.

dd

செங்கோட்டைக் காவல்நிலையத்தில் பணிபுரிந்துவந்த மூர்த்தி, மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம் காரணமாக விடுப்பு எடுத்தவர், விடுப்பு முடிந்த பிறகும்கூட மூன்று மாதமாகப் பணிக்குத் திரும்பவில்லையாம். வீட்டில் பெற்றோர் அவருக்குத் பெண் பார்த்து பேசிவந்துள்ளனர். கிட்டத்தட்ட அது உறுதி செய்யப்பட்ட நிலையில் திடீரென எதிர்பாராத விதமாக ஏதோ ஒரு காரணம் பொருட்டு அது தடைப்பட்டிருக்கிறது. இந்தத் தகவல் ஊருக்குள் பரவிய நிலையில் இந்த நிகழ்வுகள் காவலர் மூர்த்தியைக் கடுமையாகப் பாதித்திருக்கிறது. இத்துடன் வேறு பல காரணங் களாலும் சில மாதங்களுக்கு முன்பு விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

செங்கோட்டை காவல்நிலை யப் பணியிலிருந்த மூர்த்திக்கு கம்ப்யூட்டர் தொடர்பான பணிகள் தெரியும் என்பதால் தென்காசி உட் கோட்ட முகாம் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டி.சி.ஆர்.பி. ரிப்ளை பணி தரப்பட்டிருக்கிறதாம். அங்கு பணியாற்றிய மூன்று பேர் மூர்த்தியிடம் அடிக்கடி மது அருந்துவதற்கும், ஆடைகள் எடுப்பதற்கும் பணம் கேட்டிருக்கிறார்கள். மூர்த்தியும் அவர்களின் தொடர் நெருக்கடிகளுக்குப் பயந்து பணம் கொடுத்திருக்கிறார். கூடுதல் தொகை தரப்பட்டதில் ஒருசில பகுதி தொகையை திருப்பியும் தந்திருக்கிறார்கள். சுடுகாடு மற்றும் குளக்கரை போன்ற இடங்களுக்கு மூர்த்தியை அழைத்துச்சென்று மது குடிப்பதற்கு வற்புறுத்தியிருக்கிறார்கள்.''

மேலும் "மூர்த்தியின் பைக்கை அவர்கள் அடிக்கடி எடுத்துச் சென்றுவிடுவதால் நேரத் திற்கு வீட்டிற்கு வரமுடியாமல் தவித்திருக்கிறான். மூர்த்தியின் திருமணப் பேச்சு சம்பந்தமாகவும் அவரிடம் அடிக்கடி பேசியிருக்கிறார்கள். இதனால் மூர்த்தி மனவேதனையிலிருந்தான். இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று மாவட்ட எஸ்.பி.யிடம் மனு கொடுத்திருக் கிறேன்''” என கண்களில் நீர்முட்டச் சொன் னார் மூர்த்தியின் தந்தை இசக்கி.

இசக்கியின் புகார் குறித்தும், மற்ற காரணங்கள் குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் விசாரணை அதிகாரி ஒருவர்.

திருமணம் திடீரென தடைப்பட்டுப் போனது பற்றியும் பலர் பல மாதிரியாகப் பேசுகிறார்கள். மனசுக்கு ரொம்ப சங்கட மாயிருக்கு என்று காலனியில் தனக்கு வேண்டப்பட்டவர்களிடம் சொல்லி மனம் வருந்தியிருக்கிறார் மூர்த்தி. இது அவரின் மனதை மிகவும் பாதிச்சதுமில்லாமல் அந்த சிந்தனையிலேயே இருந் திருக்கிறார். அதனாலதான் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

நாம் தென்காசி மாவட்ட எஸ்.பி.யான சுரேஷ்குமாரிடம் கேட்டதில், "காவலர் மூர்த்தியை அவருக்குப் பழக்க மான மூன்று போலீஸ் காரர்கள்தான் கேம்ப் ஆபீசுக்கு கூட்டிவந்திருக்கிறார்கள். இது எட்டாவது மாதம் நடந்தது. நண்பர்கள் பேசுவது போல்தான் அவர்களுக்குள் சகஜமாக பேசியிருக்கிறார்கள். வேறு மிரட்டலோ, நெருக்கடியோ தரப்படலை. அதனை நன்றாக விசாரணை செய்தாகிவிட்டது. மூர்த்தி வேறுவகையான மன உளைச்சலில் இருந்திருக்கிறார். ரொம்பநாள் அவர் பணிக்கு திரும்பாமலிருந்ததால் டிபார்ட்மெண்ட்டில் அதற்கான நோட்டீசும் தரப்பட்டிருக்கு. சம்பவம் நடந்துவிட்டது. அந்தக் குடும்பச் சூழ்நிலையைக் கருதி அவரது தம்பிக்கு என்னுடைய சொந்த ரிஸ்க்கில் ஒரு வேலைக்கான ஏற்பாட்டினைச் செய்து கொண்டிருக்கிறேன்''’என்றார்.

-செய்தி & படங்கள்: ப.இராம்குமார்

nkn280224
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe