Advertisment

மாணவர்களைத் தேடிச் செல்லும் வீதிப் பள்ளிகள்! -தேசிய நல்லாசிரியர் விருது பின்னணி!

ss

கொரோனா பெருந்தொற்று காரணமாகக் கொண்டுவரப்பட்ட ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படாமல் போனதில், கல்வியின் எதிர்காலம் கேள்விக்குறியானதோடு, மாணவர்களின் மனநிலையையும் மோசமாகப் பாதித்துள்ளது. மாணவர்களின் இயல்பான நடத்தையிலும் மாற்றங்களை ஏற்படுத்தி, அவர்களிடம் விரக்தியையும் வலுவாக விதைத்துள்ளது.

Advertisment

கடந்த 2 ஆண்டுகளாகப் பள்ளிகள் இயங்காமல், மாணவர்கள் -ஆசிரியர்கள் - பெற்றோர்கள் இடையே நல்ல புரிதலே இல்லாமல் இணையதளம் மூலம் மட்டுமே வகுப்புகளை நடத்தியது, எந்த அளவுக்கு மாணவர்களைக் கற்றலில் தேர்ந்தவர்களாக மாற்றியுள்ளது என்பது தெரியவில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், கற்றலைத் தடையின்றி தொடர்வதற்காக தங்களுடைய பள்ளியின் மூலம் "வீதிப் பள்ள

கொரோனா பெருந்தொற்று காரணமாகக் கொண்டுவரப்பட்ட ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படாமல் போனதில், கல்வியின் எதிர்காலம் கேள்விக்குறியானதோடு, மாணவர்களின் மனநிலையையும் மோசமாகப் பாதித்துள்ளது. மாணவர்களின் இயல்பான நடத்தையிலும் மாற்றங்களை ஏற்படுத்தி, அவர்களிடம் விரக்தியையும் வலுவாக விதைத்துள்ளது.

Advertisment

கடந்த 2 ஆண்டுகளாகப் பள்ளிகள் இயங்காமல், மாணவர்கள் -ஆசிரியர்கள் - பெற்றோர்கள் இடையே நல்ல புரிதலே இல்லாமல் இணையதளம் மூலம் மட்டுமே வகுப்புகளை நடத்தியது, எந்த அளவுக்கு மாணவர்களைக் கற்றலில் தேர்ந்தவர்களாக மாற்றியுள்ளது என்பது தெரியவில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், கற்றலைத் தடையின்றி தொடர்வதற்காக தங்களுடைய பள்ளியின் மூலம் "வீதிப் பள்ளிகள்' என்ற புதிய திட்டத்தை ஆரம்பித்து அதன்மூலம் மாணவர்களுக்குக் கற்பித்தலை நேரடியாகச் செயல்படுத்தியுள்ளனர் அரசு பள்ளி ஆசிரியைகள்.

schoolteacher

இந்த வீதிப் பள்ளித் திட்டம்தான் நடப்பாண்டில் மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதுபெறக் காரணமாக அமைந்துள்ளதாக மனம் திறந்தார் திருச்சி மாவட்டம் பிராட்டியூர் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியின் தலைமை ஆசிரியை ஆஷாதேவி. இப்பள்ளியில், கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக இத்திட்டம் மிகச்சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது.

Advertisment

இந்த திட்டத்தின் மூலம் எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து அப்பள்ளியின் ஆங்கில பட்டதாரி ஆசிரியை கலாராணி கூறுகையில், "பெரும்பாலான மாணவர்களுக்கு செல்போன் வசதியில்லாததால் கற்பித்தலை முழுமையாகச் செயல்படுத்த முடியவில்லை. எனவே நாங்கள் எடுத்த புதிய முயற்சிதான் இந்த வீதிப் பள்ளிகள். எங்களுடைய பள்ளியின் மூலம் 5 வீதிப் பள்ளிகளைத் தொடங்கி, நேரடியாக மாணவர் களுக்குக் கற்பித்தலைச் செயல்படுத்துகிறோம். தற்போது நாங்கள் துவங்கியுள்ள வீதிப்பள்ளி கள், 100 சதவீதம் அரசு வழிகாட்டு நெறிமுறை களைப் பின்பற்றி நடத்தப்படுகின்றன. வீதிப் பள்ளிகளில் பாடம் கற்பிக்கும் அனைத்து ஆசிரி யர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த வீதிப் பள்ளிகளில் 5 தெருக்களில், 5 விதமான வகுப்புகளை நடத்திவருகிறோம். 1 மற்றும் 2-ம் வகுப்புகளுக்கு ஒரு வீதியில் எழுத்து அறிமுகம், அடிப்படைச் செயல்பாடு கள் குறித்து கற்றுத்தரப்படுகிறது. 3, 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்னொரு வீதியில் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களில், மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி அறைகளில் கற்பிக்கப்படுகிறது. அதேபோல் வீதி நூலகங் களையும் அமைத்துள்ளோம். 6 வீடுகளில் இந்த நூலகங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 6 வீதிகளிலும் 600 புத்தகங்கள் சுழற்சி முறையில் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நூலகங்களை எங்கள் பள்ளி மாணவர்களே மிகவும் பாதுகாப்பாகப் பராமரித்து வருகிறார்கள்'' என்றார்.

scc

நல்லாசிரியர் விருதுபெற்ற தலைமை ஆசிரியர் ஆஷாதேவி கூறுகையில், "எங்க ளுடைய பள்ளியில் தற்போது 816 மாணவர்கள் பயிலுகிறார்கள். அதில் சுமார் 300 மாணவர்கள் இணையதளம் மூலம் கல்வி கற்கிறார்கள். இவர்களைத் தவிர்த்து, பொருளாதாரத்தில் பின்தங்கிய 500 மாணவர்களுக்காக நாங்கள், வீதி நூலகம், வீதிப் பள்ளி, கள ஆய்வு ஆகிய வற்றைச் செயல்படுத்துகிறோம். பிராட்டியூரி லுள்ள எல்லா வீதிகளிலும் நூலகங்கள் உண்டு. மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம். வீட்டிற்குக் கொண்டுசென்றும் படிக்கலாம்.

இந்த வீதிப் பள்ளியின் நோக்கமே, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர் களுக்கும் கற்றலைத் தொடர்வதாகும். மாணவர்களின் கற்றல் திறனுக்கு ஏற்ப எங்களுடைய கற்பித்தல் உள்ளது. இந்த ஆண்டின் தேசிய நல்லாசிரியர் விருதை மத்திய அரசு எனக்கு வழங்கியுள்ளது. அதில் கிடைக்கும் சந்தோசத்தைவிட, எங்கள் வீதிப் பள்ளியால் மாணவர்களின் கற்றல் நன்முறையில் தொடர்வதுதான் பெருமகிழ்ச்சியைத் தருகிறது'' என்றார் பெருமிதத்துடன்.

nkn250921
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe