னிதகுலத்தின் வாழ்விய லில் பின்னிப் பிணைந்திருந்தன நாட்டுப்புறக் கலைகள். பல கலைஞர்கள் இந்தக் கலைகளால் வாழ்ந்தனர். இன்று பல்வேறு காரணங்களால் அவர்களின் கண்முன்னே, தாம் வாழ்ந்த, தம்மை வாழ்வித்த கலைகள் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கின்றன.

ff

இந்தக் கலைகளை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டு, தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் சிறுசிறு குழுக்களாக நாட்டுப்புறக் கலைஞர்கள் பிரிந்து கிடக்கின்ற னர். அவர்களை ஒரே குடையின் கீழே கொண்டுவரும் முயற்சியில், ஒவ்வொரு ஆண்டும் "வீதி விருது' விழா’ நடைபெறுகிறது.

அதன்படி, இந்தமுறை ஏழாவது ஆண்டு விழாவை ‘மக்கள் ஒற்றுமை பறைசாற்றும்’ விழாவாக சென்னை லயோலா கல்லூரி, மாற்று ஊடக மையம் இணைந்து நடத்தின. தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் நலச்சங்கக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில், சென்னை லயோலா கல்லூரியில் ஜன வரி 11, 12 தேதிகளில் நடை பெற்ற விழாவிற்கான ஏற்பாடு களை காட்சித் தகவலியல், வரலாறு, தமிழ்த்துறை மாணவர்கள் செய்திருந்தனர்.

Advertisment

கூத்துப்பாவலர் முகில் பரமானந்தம் நினைவரங்கில் பரிவட்ட ஊரழைப்பு வாயிலாக வந்தவர்களை வரவேற்றனர். லயோலா கல்லூரி முதல்வர் தாமஸ் தலைமையிலான தொடக்க நிகழ்வில், தமிழக தொல்லியல் துறை ஆணையர் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். "கீழடி நம் தாய்மடி'’ என்ற தலைப்பில், சிறப்புக் கருத்துரை நிகழ்த்தினார். விழாவில் கலந்துகொண்ட நமது நக்கீரன் ஆசிரியர் நாட்டுப்புறக் கலைஞர்களை வாழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து விழா வின் முதல் அமர்வை, திரைப்பட நடன இயக்குனர் சாண்டி நடன மாடி தொடங்கிவைத்தார். உல கப் ffபுகழ்பெற்ற நடனக் குழந்தை குவைத் தனஸ்ரீ, பாலகரகம் சூடி கரகாட்டத்தின் பல்வேறு நுணுக் கங்களை ஆடிக்காட்டியது பிரம்மிப்பூட்டியது. முரசுப்பறை, ஒயில் தப்பு, மரக்கால் சாகசம், மல்லர் கம்பம் என நகரவாசிகள் காணாத பல கலைகள் மேடை யில் அரங்கேறின. பார்வையற்ற, மனநலம் குன்றிய மாணவர்களின் சிலம்பாட்டம், கிராமியக் கலைகள் மற்றும் மாற்றுத் திறனாளி இளைஞர்களின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அழிவின் விளிம்பில் இருக்கும் பூத கபால ஆட்டம், அதை ஆடத்தெரிந்த கடைசி ஏழு பேரால் நிகழ்த்திக் காட்டப்பட் டது. பறையிசையின் அதிர்வுகள் அரங்கமெங்கும் நிறைந்திருந்தது.

மூன்றாவது அமர்வில், பத்து நூல்கள் மூத்த பத்திரிகை யாளர் மதுக்கூர் ராமலிங்கத்தால் வெளியிடப்பட்டன. நான்காவது அமர்வில், சமூகத்தின் மனசாட்சி யைப் பேசவைக்கும் படங்களை சமீபத்தில் இயக்கிய வெற்றி மாறன், அதியன் ஆதிரை, பார்த்திபன் உள்ளிட்ட ஐந்து இயக்குனர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. சமூகம் உணர்ந்த இந்தத் திரை ஆளுமை களுக்கு இயக்குனர் சேரன் விருது வழங்கி கவுரவித்தார்.

Advertisment

விழாவின் இரண்டாவது நாளான 12-ந் தேதி காலை, வள்ளுவர் கோட்டத்தில் இருந்து லயோலா கல்லூரி வரை கலைஞர்களின் அணிவகுப்புப் பேரணி நடைபெற்றது. 37 மாவட்டங்களில் இருந்து வந்தி ருந்த நாட்டுப்புறக் கலைஞர்கள், தங்கள் கலைகளை நிகழ்த்திக் காட்டினர். கிட்டத்தட்ட 10 ஆயிரம் கலைஞர்கள் இதில் கலந்து கொண்டதாகவும், இன்னும் பல லட்சக்கணக்கான கலைஞர்கள் தமிழகம் முழுவதும் பரவிக்கிடப்பதாகவும் பேசிய பேராசிரியர் காளீஸ்வரன், “""வீதி விருது விழாவின் மூலமாகவே சிதறிக்கிடந்த நாடகக் கலைஞர் கள், ஒரே கூட்டமைப்பாக ஒருங்கிணைந்தனர். நலிந்த நாடகக் கலைஞர்களுக்கு அரசிடமிருந்து கிடைக்க வேண் டிய நலத்திட்ட உதவிகளைப் பெற்றுத்தருவது, கலைஞர்களின் பிள்ளைகள் உயர்கல்வி பெறு வதை உறுதிசெய்வது இந்த விழாவின் நோக்கமாக இருக் கிறது'' என்றார். நாட்டுப்புறக் கலைஞர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில உதவியவர் களுக்கு, கல்வியாளர் வசந்திதேவி நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.

இந்த விழாவின் வழியாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் நாட்டுப்புறக் கலைக்குழுக்கள், கலைஞர்களைப் பதிவுசெய்ய வழிவகை செய்யவேண்டும். நாட்டுப்புறக் கலைகளை ஆவணப்படுத்த வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் நாட்டுப்புறக் கலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்... உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை அரசிடம் முன்வைத்தனர் கலைஞர்கள்.

fest

விழாவில் கலந்துகொண்டு, 70 மூத்த கலைஞர்களுக்கு ரூ.10 ஆயிரம் பணமுடிப்பு வழங்கி மரியாதை செலுத்திய, கலை பண்பாட்டுத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், “""கலைவடிவம் மாறிக்கொண்டே வருகிறது. அதனால், கலைகளைத் தரம் பிரிப்பது அரசுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இதனால் கலைமாமணி விருது வழங்குவதிலும் பல்வேறு சிக்கல் களை அரசு எதிர்கொள்கிறது. எனவே, நாட்டுப்புறக் கலைகளை வகைப்படுத்த இந்த ஆண்டு ஒரு முயற்சியை தமிழ்ப் பல்கலைக் கழகம் மற்றும் இசை மற்றும் கவின் கலைக்கல்லூரி வாயிலாக முன்னெடுக்கவிருக்கிறோம்.

உங்கள் கோரிக்கைகளுக்கு அரசு நிச்சயம் செவிசாய்க்கும். கலைக்குழுக்களின் தலைவர் களுக்கு மேலாண்மை பயிற்சி வழங்கும் நோக்கம் பாராட் டுக்குரியது. அதற்கு அரசு அனைத்து உதவிகளையும் செய் யும்'' என்று உறுதியளித்தார்.

தொடர்ந்து, 650 கலைஞர்களுக்கு நினைவுக் கேடயமும், 80 கலைக்குழுக் களுக்கு விருதுகளும் வழங்கப் பட்டன.

நாட்டுப்புறக் கலைஞர்கள் தங்கள் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கும் விதமாக ஜொலித்தது வீதி விருது விழா.

-ச.ப.மதிவாணன்

படங்கள்: அசோக்குமார்