பா.ஜ.க.வில் எம்.பி. சீட்டை ஏலம்போட்டு விற்கும் முயற்சி நடந்துவருகிறது. இந்த ஏலமும், கர்நாடகாவில் ஏற்பட்ட தோல்வியும் என இரண்டும், இனிப்பும் கசப்பும் கலந்த குளிர்பானத்தைப் போல மாறி, அதில் கசப்பே அதிகமாக கவர்னர் ஆர்.என்.ரவியுடன் கூட்டணி அமைத்து அண்ணாமலையை வீழ்த்தத் தயாராகி வருகிறார்கள் தமிழக பா.ஜ.க. தலைவர்கள்.
கர்நாடக தேர்தலுக்குப் பிறகு அண்ணாமலையின் சவுண்டையே காணோம். திருச்செந்தூரில் ஒரு பூஜை நடத்திவிட்டு கர்நாடக கோவில்களில் பூஜைகள் நடத்தக் கிளம்பிவிட்டார் அண்ணாமலை. அவர் தலைமையில் பா.ஜ.க. மகளிரணி, தி.மு.க. ஆட்சிக் கெதிராக நடத்திய ஆர்ப்பாட்டம் பிசுபிசுத்துவிட்டது. இதையடுத்து, மாவட்டம்தோறும் நடைபயணம் மேற்கொண்டால் பத்துபேர் கூட அண்ணாமலையுடன் வரமாட்டார்கள் என நடைபயணத்தை பஸ் பயணமாக மாற்றிவிட்டார் அண்ணாமலை.
இந்நிலையில், அண்ணாமலையால் பாதிக்கப்பட்ட கே.டி.ராகவன் வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு காலை ஏழு மணிமுதல் இரவு வரை பா.ஜ.க.வினர் தி
பா.ஜ.க.வில் எம்.பி. சீட்டை ஏலம்போட்டு விற்கும் முயற்சி நடந்துவருகிறது. இந்த ஏலமும், கர்நாடகாவில் ஏற்பட்ட தோல்வியும் என இரண்டும், இனிப்பும் கசப்பும் கலந்த குளிர்பானத்தைப் போல மாறி, அதில் கசப்பே அதிகமாக கவர்னர் ஆர்.என்.ரவியுடன் கூட்டணி அமைத்து அண்ணாமலையை வீழ்த்தத் தயாராகி வருகிறார்கள் தமிழக பா.ஜ.க. தலைவர்கள்.
கர்நாடக தேர்தலுக்குப் பிறகு அண்ணாமலையின் சவுண்டையே காணோம். திருச்செந்தூரில் ஒரு பூஜை நடத்திவிட்டு கர்நாடக கோவில்களில் பூஜைகள் நடத்தக் கிளம்பிவிட்டார் அண்ணாமலை. அவர் தலைமையில் பா.ஜ.க. மகளிரணி, தி.மு.க. ஆட்சிக் கெதிராக நடத்திய ஆர்ப்பாட்டம் பிசுபிசுத்துவிட்டது. இதையடுத்து, மாவட்டம்தோறும் நடைபயணம் மேற்கொண்டால் பத்துபேர் கூட அண்ணாமலையுடன் வரமாட்டார்கள் என நடைபயணத்தை பஸ் பயணமாக மாற்றிவிட்டார் அண்ணாமலை.
இந்நிலையில், அண்ணாமலையால் பாதிக்கப்பட்ட கே.டி.ராகவன் வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு காலை ஏழு மணிமுதல் இரவு வரை பா.ஜ.க.வினர் திரண்டுவந்து அவருக்கு ஆதரவு தெரிவித்தது அண்ணாமலையை அதிர்ச்சி யடையச் செய்திருக்கிறது. அண்ணாமலை யும் அந்த விழாவிற்கு செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டது. அவ்விழாவின் கதாநாயகராக இருந்தவர் கவர்னர் ஆர்.என்.ரவி. ஆர்.என்.ரவியும், பொன்.இராதாகிருஷ்ணனும் சந்தித்துப் பேசி இருக்கிறார்கள். கர்நாடக தோல்வியினால் அண்ணாமலையின் குருவான பி.எல்.சந்தோஷ் மீது கடும் கோபத்தில் இருக்கும் அமித்ஷாவும், மோடியும் மோடி அரசின் ஒன்பது ஆண்டுகால வெற்றியை தென் மாநிலங்களில் கொண்டாடும் விழாக்கமிட்டித் தலைவராக பொன். இராதாகிருஷ்ணனை நியமித்திருக்கி றார்கள்.
பி.எல்.சந்தோஷ்தான் தென் மாநில பா.ஜ.க. ஒருங்கினைப்பாளர். அவரது சிஷ்யர்களான அண்ணாமலை, சி.டி.ரவி, கேரள சுரேந்தர் ஆகியோரில் ஒருவரை நியமிக்க பி.எல்.சந்தோஷ் பரிந்துரைத்தார். அதை மீறி பொன்.இராதாகிருஷ்ணனுக்கு இந்தப் பதவி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அஜித் தோவல் மூலமாக பொன்னாருடன் இணைந்து பணியாற்றுமாறு கவர்னர் ரவிக்கு டெல்லியிலிருந்து உத்தரவு வந்துள்ளது.
இந்தக் கூட்டணியில் தமிழக அரசியலில் கால்பதிக்க ஆசைப்படும் தமிழிசையும் இணைந்து கொண்டார். இந்த மூவர் கூட்டணிதான் 2?24ல் பாராளுமன்ற உறுப்பினர்களை தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு கொண்டுவர வியூகம் அமைக்கப் போகிறார்கள் என்கிறது பா.ஜ.க. வட்டாரங்கள். இந்நிலையில் மத்திய அமைச்சராக இருக்கும் முருகனின் செயல்பாடு சரியில்லாததால் அடுத்து அமையும் பா.ஜ.க. ஆட்சியில் தமிழகத்தி லிருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் மத்திய அமைச்சர் ஆக வேண்டுமென அமித்ஷா விரும்புகிறார். வானதி சீனிவாசன், கே.டி.ராகவன், பொன்.இராதாகிருஷ்ணன் ஆகியோரை இந்த ரேஸில் களமிறக்க பா.ஜ.க. தலைமை தீர்மானித் துள்ளது.
எம்.பி.க்களைத் தேர்ந்தெடுக்கும் பா.ஜ.க.வின் தேசிய பாராளுமன்ற குழுவின் உறுப்பினராக இருக்கக்கூடிய வானதி சீனிவாசன், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு எடப்பாடி ஆதரவுடன் கோவை தொகுதியில் போட்டியிட முயற்சி செய்து வருகிறார். கே.டி.ராகவன் தென்சென்னை தொகுதியை நிர்மலா சீதாராமன் ஆதரவோடு பெறுவதற்கு முயல்கிறார். தனியாகப் போட்டியிட்டாலும் ஜெயிக்கக்கூடிய அளவிற்கு செல்வாக்கு பெற்றுள்ள நாகர்கோவில் தொகுதியை பொன்னார் குறிவைக்கிறார்.
ஆனால் அண்ணாமலையின் கணக்குகள் வேறாக இருக்கிறது. பிரபல மென்பொருள் நிறுவன அதிபரான ஸ்ரீதர் வேம்புவிடமும், ரஜினியின் நெருக்கமான நண்பராக இருந்த அர்ஜுன மூர்த்தியிடமும் “"நீங்கள்தான் தென்சென்னை வேட்பாளர்கள். உங்களில் யார் ஐநூறு கோடி ரூபாய் வசூல் செய்து தருகிறீர்களோ அவர்களுக்கே சீட்'” என அண்ணாமலை அறிவித்துள்ளார். கோவை சீட்டில் வானதி நிற்பதை அண்ணாமலை விரும்பவில்லை. கோவை முருகானந்தத்திடம் "நீங்கள்தான் எம்.பி., அதற்கு நூறு கோடி ரூபாய் செலவாகும்' என கலெக்ஷன் செய்ய உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணகிரி பாராளுமன்றத் தொகுதியை அமர்பிரசாத் ரெட்டிக்கு "நீதான் எம்.பி.'' என ஒதுக்கி கோடிக்கணக்கில் கலெக்சன் செய்ய உத்தரவிட்டுள்ளார். வேலூர் தொகுதிக்கு ஏ.சி.சண்முகத்திடம் ஒரு பெரிய தொகையை அட்வான்சாகவே வாங்கிவிட்டார். விருதுநகர் தொகுதிக்கும் ஒரு வேட்பாளரை முடிவுசெய்து கல்லா கட்டிவிட்டார் அண்ணாமலை. அண்ணாமலையின் இந்த கலெக்சன் மேளாவை அவரது பி.ஏ.வான ஸ்ரீகாந்த் என்பவர் கட்சித் தலைமையிடம் போட்டுக் கொடுத்துவிட்டார். இவர் பொன்னார், தமிழிசை போன்றவர்கள் தலைவர்களாக இருந்தபோது அவர்களுக்கு உதவியாளராக இருந்தவர்.
இந்நிலையில் பா.ஜ.க. மொத்தமாக கலகலத்துப் போய் நிற்கிறது. பா.ஜ.க.வின் துணைத் தலைவரான வழக்கறிஞர் பால் கனகராஜும், இந்து முன்னணித் தலைவர் காடேஷ்வர சுப்பிரமணியமும் வெளிப்படையாகவே அறிக்கைகள் விட்டு மோதிக்கொண்டிருக்கிறார்கள். மறுபடியும் பா.ஜ.க.வை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றால் பொன்னாரை மாநிலத் தலைவராக்க வேண்டுமென மத்திய தலைமையிடம் கோரிக்கைகள் சென்றுள்ளது. அதை ஏற்கும் விதத்தில்தான் ‘கவர்னர் -பொன்னார் கூட்டணி’ மற்றும் ‘பொன்னாருக்கு தேசிய அளவில் முக்கியத்துவம்’ ஆகியவை கிடைத்துள்ளது என்கிறது கமலாலய வட்டாரங்கள்.