A கதை -இரா.த.சக்திவேல் (19)

ss

astory

(19) அமைச்சரம்மா அப்படி... இளவரசி இப்படி..! -இது எப்படி இருக்கு?

ணாக்கத்திற்கு எதிராக சீறியெழும் பெண்களை "புதுமைப் பெண்கள்' என்றார்கள்... என்பார்கள்!

உலகில் இரண்டு நிகழ்வுகள் பேசு பொருளாக இருக்கிறது.

ஒன்று... பாலின சமத்துவத்தை வ-யுறுத்திய சம்பவம்.

இன்னொன்று... பாலின ஆதிக்கத்தை எதிர்த்த சம்பவம்.

நார்வே நாட்டின் CULTURE and EQUALITY -கலாச்சாரம் மற்றும் பாலின சமத்துவத் துறையின் அமைச்சரான 43 வயது லூப்ன ஜாஃப்ரிக்கு (LUBNA JAFFERY) பாலின சமத்துவ அமைப்பு ஒன்றின் சார்பில் விருது கொடுத்து கௌரவிக்கப

astory

(19) அமைச்சரம்மா அப்படி... இளவரசி இப்படி..! -இது எப்படி இருக்கு?

ணாக்கத்திற்கு எதிராக சீறியெழும் பெண்களை "புதுமைப் பெண்கள்' என்றார்கள்... என்பார்கள்!

உலகில் இரண்டு நிகழ்வுகள் பேசு பொருளாக இருக்கிறது.

ஒன்று... பாலின சமத்துவத்தை வ-யுறுத்திய சம்பவம்.

இன்னொன்று... பாலின ஆதிக்கத்தை எதிர்த்த சம்பவம்.

நார்வே நாட்டின் CULTURE and EQUALITY -கலாச்சாரம் மற்றும் பாலின சமத்துவத் துறையின் அமைச்சரான 43 வயது லூப்ன ஜாஃப்ரிக்கு (LUBNA JAFFERY) பாலின சமத்துவ அமைப்பு ஒன்றின் சார்பில் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டார். இந்த விழாவில் பல்வேறு சமூக பிரபலங்களும் கலந்துகொண்டிருந்தனர்.

astory

விழா மேடையேறி, "பாலின சமத்துவம்' பற்றி பேசினார். "ஆம்பள ஒடம்புக்கும், பொம்பள ஒடம்புக்கும் வித்தியாசம் இருக்கலாம். அதுக்காக பெண், தன்னோட உரிமையை விட்டுக் கொடுக்க முடியுமா?' என பேசினார்.

பேச்சு... பேச்சா இருக்கும்போதே... தன்னோட மேல்சட்டை முடிச்சுக்களை அவிழ்த்து உள்ளாடை அணியாத தன் மார்புகளை, ஆட்டியபடியே வட்ட வடிவில் சுற்றி வந்து... பார்வையாளர்களுக்கு காட்டினார்.

"அமைச்சரா இருந்துக்கிட்டு அந்தம்மா அப்படி பண்ணலாமா?'' என எதிர்ப்பு ஒரு புறமும்; "அமைச்சரா இருந்துக்கிட்டு அந்தம்மா அப்படி பண்ணிருக்கே?'' என ஆதரவு ஒரு புறமும் பெருகிக்கொண்டிருக்கிறது.

அமைச்சரின் செயல் RIGHT or WRONG?

இதை எந்த அளவுகோலில் தீர்மானிப்பது?

அடுத்த கதைக்கு வருவோம்!

துபாயின் (ஐக்கிய அரபு எமிரேட்) இளவரசி SHAIKHA MAHRA BINT MOHAMMED BIN RASHID AL MAKTOUM (ஸ்ஸ்ஸ்... அப்பாடா) சுருக்கமாக சைகா மெஹ்ரா. "இளவரசி' என்பதற்கேற்ப "பார்பி பொம்மை' போல் பார்க்க மிக அழகாக இருக்கும் இளவரசி, அதிரடியாக ஒரு காரியம் செய்திருக்கிறார்.

astory

இளவரசிக்கும், தொழிலதிபர் ஷேக்மனா பிப் முஹம்மதுபின் ராஷித்திற்கும் கடந்த ஆண்டு மே 2023ல் திருமணம் நடந்தது. மே 2024ல் இந்த அழகிய தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில்... சில தினங்களுக்கு முன் தன் கணவரை விவாகரத்து செய்துள்ளார் இளவரசி.

பொதுவாக இஸ்லாத்தில் "முத்தலாக்' எனப்படும் "விவாகரத்து செய்கிறேன்' என மூன்று முறை சொன்னால் ஒரு கணவன், தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

ஆண்களின் இந்த நடை முறையிலேயே தனது "எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் "நான் உங்களை விவாகரத்து செய் கிறேன்' என மூன்று முறை குறிப்பிட்டுள்ளார் இளவரசி. அத்துடன் மிக அக்கறை யுடன் "கவனமாக இருங்கள் -இப்படிக்கு உங்கள் முன்னாள் மனைவி' எனவும் குறிப்பிட்டுள்ளார்.

துபாய் இளவரசி தன் கணவரை விவாகரத்து செய்ய என்ன காரணம்?

"நீங்கள் பலருடன் தொடர்பில் இருக்கிறீர்கள்; அதனால் விவாகரத்து செய்கிறேன்'' என காரணத்தையும் தெரிவித்துள்ளார் இளவரசி.

ஆணாதிக்க கணவருக்கு அடிபணியாத இளவரசியின் துணிச்சலான செயலை பலரும் பாராட்டியுள்ளார்கள்.

ஒன்று மட்டும் உண்மையோ... உண்மை!

"வண்டியையே கொண்டு போகிற ஓடம் நான்' என்கிற ஆணவம் கூடாது.

ஏனெனில்...

ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்!

nkn240724
இதையும் படியுங்கள்
Subscribe