A Story

"என்னம்மா இப்படி...?''

Advertisment

"ஆணென்ன பெண்ணென்ன; நீயென்ன நானென்ன எல்லாம் ஓரினம்தான்''

"அதுக்காக பப்ளிக் பிளேஸ்ல...''

Advertisment

"நாடென்ன வீடென்ன; காடென்ன மேடென்ன எல்லாம் ஓர் நிலம்தான்''

இருந்தாலும் இயற்கை சில வித்தியாசங்களை படைச்சிருக்கே?''

"நீயும் பத்து மாசம்; நானும் பத்துமாசம்''

-இப்படியான கேள்விகளை எய்லா ஆடம்ஸ் எனும் பெண்ணிடம் கேட்டால்... ரஜினிக்காக ராஜா இசையில் கங்கைஅமரன் எழுதிய "தர்மதுரை' படப் பாடலைப் பாடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஏனென்றால் அவரின் கொள்கை அப்படியானது.

என்ன அவரின் கொள்கை?

யார் இந்த எய்லா ஆடம்ஸ்?

எய்லா ஆடம்ஸ் 35 வயது தாண்டி 'கன்டண்ட் கிரியேட்டர்' மற்றும் பெண் உரிமைப் போராளி. கனடாவைச் சேர்ந்தவர், அமெரிக்க குடியுரிமையும் பெற்றவர்.

கடந்த ஒரு வாரமாக நியூயார்க் நகரத்தின் புகழ்பெற்ற டூரிஸ்ட் ஸ்பாட்டுகள், மிகவும் பிஸியான ஃபுரூக்ளின் பிரிட்ஜ் மற்றும் மெட்ரோ ரயில்களில் தனது போராட்டங்களைத் தொடர்ச்சியாக நடத்தியிருக்கிறார், தனது கொள்கைக்காக.

"கடந்த 30 ஆண்டுகளாக நியூயார்க் உள்ளூர் நகர நிர்வாகம் பெண்களுக்கு அந்த உரிமையை அளித்திருக்கிறது. ஆனால் ஆண்களின் விமர்சனத்திற்குப் பயந்து, கேலி கிண்டலுக்கு அஞ்சி, எதிர்ப்பைக் கண்டு மிரண்டு, பெண்கள் தங்களின் அந்த உரிமையை அமல்படுத்த விரும்பாமல் இருக்கிறார்கள்.

ஆனால் நான் அதற்கெல்லாம் கவலைப்படவில்லை; வெட்கப்படவில்லை. இதில் வெட்கப்பட எதுவுமில்லை. நீங்கள் ஏன் என்னைப் பார்ப்பதை வேலையாக வைத்திருக்கிறீர்கள்? நீங்கள் உங்கள் வேலையைக் கவனியுங்கள். நான் அரசின் கவனத்தையும், பெண்களிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தவுமே இந்தப் போராட்டம்.

ஆம்பளையும் பத்து மாத்துல பிறந்தவன்தான்; பொம்பளையும் பத்து மாசத்துல பொறந்தவள்தான். சமத்துவம் பேசும் உலகத்தில் இருந்துகொண்டு, இப்படிப்பட்ட பாகுபாடை சும்மா விடலாமா?''

-இப்படி கேள்வி மேல் கேள்வி கேட்கிறார் எய்லா.

"இந்தவிதமான உங்கள் போராட்டம் உங்களுக்கு இயல்பான மன உணர்ச்சியையே தரலாம். ஆனால் மற்றவர்கள் மனநிலை?'' என எதிர் கேள்வி கேட்கப்பட்டபோது...

"சிலர் விமர்சனம் செய்தாலும், சிலர் கண்டுகொள்ளாமல் போனாலும், சிலர் என்னைப் பார்த்து சிரித்துவிட்டுப் போகிறார்கள்.''

"உங்கள் முடிவை பரிசீலனை செய்வீர்களா? போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவீர்களா?''

"நியாயமானது எனது கோரிக்கை; நான் ஏன் மறுபரிசீலனை செய்யணும்? போராட்டத்தைக் கைவிடும் பேச்சுக்கே இடமில்லை. பொது இடங்களில் ஆண்கள் மேல்சட்டை இல்லாமல் நடக்கும்போது, பெண்கள் ஏன் மேல்சட்டையில்லாமல் நடக்கக்கூடாது; மிக யதார்த்தமாக, இயல்புணர்ச்சியாக பெண்களும், ஆண்களைப் போன்று சட்டையின்றி வரவேண்டும். இது பரவலாக்கப்படும். முதல்ல இது கூச்சமாத்தான் இருக்கும். போகப்போக பழகிடும். நம்மை சட்டைசெய்யாதவர்கள் முன்பு நாம் ஏன் சட்டை போடணும்?''

-இப்படி கொளுத்தியிருக்கிறார் எய்லா.

மறைந்த புதுமைக் கவிஞர் நா.காமராசன் எழுதிய ஒரு நெடுங்கவிதையின் சில வரிகள் மட்டும் இங்கே!

தன் கணவனுடன் அந்தரங்கமாக இருக்கும் அந்த நேரத்தில் மனைவி சொல்கிறார்..

மெல்லப் பிடி மாமா

மெல்லப் பிடி!

உனக்கோ இது

உணர்ச்சிக் கேந்திரம்...

உன் பிள்ளைக்கு இதுதான்

அட்சயப் பாத்திரம்!

மனித உடலின் சுரப்பிகளில் ஒன்றாக பால்சுரப்பி எனப்படும் மார்பகம், அட்சயப் பாத்திரமாய் பார்க்கப்படாத வரை... சர்ச்சைகள் தவிர்க்க முடியாதது!