(8) போட்டுக்கிட்டும் குளிச்சுக்கலாம்...
கழட்டிக்கிட்டும் குளிச்சுக்கலாம்...!
"தாயா புள்ளயா பழகுதல்' என்றொரு சொல்வழக்கு கிராமங்களில் இருந்தது. பெரும்பாலும் பெண்களிடம் ஆண்களும், ஆண்களிடம் பெண்களும் விகல்பமில்லாமல் வெள்ளந்தியாகப் பழகுவார்கள்.
ஆற்றில் குளிக்கவும் -துவைக்கவும் குடும்பம், குடும்பமாகப் போவார்கள். பெண்கள் படித்துறையும், ஆண்கள் படித்துறையும் எதிர் எதிரில் இருக்கும். பெண்கள் உள்பாவாடையை மார்புப் பகுதிவரை உயர்த்திக் கட்டிக்கொண்டு குளிப்பார்கள். எதிர்ப்புறம் ஆண்கள் துண்டு கட்டிக்கொண்டு குளிப்பார்கள். ஆபாச எண்
(8) போட்டுக்கிட்டும் குளிச்சுக்கலாம்...
கழட்டிக்கிட்டும் குளிச்சுக்கலாம்...!
"தாயா புள்ளயா பழகுதல்' என்றொரு சொல்வழக்கு கிராமங்களில் இருந்தது. பெரும்பாலும் பெண்களிடம் ஆண்களும், ஆண்களிடம் பெண்களும் விகல்பமில்லாமல் வெள்ளந்தியாகப் பழகுவார்கள்.
ஆற்றில் குளிக்கவும் -துவைக்கவும் குடும்பம், குடும்பமாகப் போவார்கள். பெண்கள் படித்துறையும், ஆண்கள் படித்துறையும் எதிர் எதிரில் இருக்கும். பெண்கள் உள்பாவாடையை மார்புப் பகுதிவரை உயர்த்திக் கட்டிக்கொண்டு குளிப்பார்கள். எதிர்ப்புறம் ஆண்கள் துண்டு கட்டிக்கொண்டு குளிப்பார்கள். ஆபாச எண்ணங்களோ... அருவருப்பான செயல்களோ அங்கே உண்டாகாது.
இதெல்லாம் அந்தக் காலத்தில்! இந்தக் காலத்தில் சாத்தியமா? என்பது சத்தியமாகத் தெரியவில்லை!
ஜெர்மன் நாட்டின் தலைநகரான பெர்லின் நகரப் பெண்கள் தங்களின் குளியல் உரிமைக்காக சில பல ஆண்டுகளாக போராட்டம் நடத்திவந்தார்கள். இந்தப் பிரச்சினைக்கு அவ்வப்போது தற்காலிக தீர்வு காணப்பட்டாலும், சமீபத்தில் குறை தீர்ப்பு ஆணைய நீதிமன்றத்திற்கு விஷயம் போனதால்... நிரந்தர தீர்வு கிடைத்திருக்கிறது.
பெர்லின் நகரத்திலுள்ள உள் மற்றும் திறந்தவெளி நீச்சல்குளங்களை "பெர்லினர் பேடர்பெட்ரீப்' எனும் அமைப்பு நிர்வகித்து வருகிறது. இந்த அமைப்பின் கீழ் உள்ள மிகப்பெரும் திறந்தவெளி நீச்சல்குளத்தில் ஒரு இளம்பெண் குளிக்கச் சென்றார். இளைஞர்கள் -முதியோர்கள் என ஏற்கனவே நிறையபேர்கள் அங்கே குளித்துக்கொண்டிருந்தனர். உள்ளே சென்ற இளம்பெண் தன் ஆடைகளை கழற்றி விட்டுவிட்டு தனது மேல் உள்ளாடையையும் கழற்றிவிட்டு, "டாப்லெஸ்'ஸôக நீச்சல்குள கரையோரம் "சன்பாத்' எடுத்துவிட்டு குளத்திற்குள் இறங்கப்போனார்.
ஆனால் நீச்சல் குள செக்யூரிட்டிகள் வந்து "மேலாடை அணியுங்கள், இல்லையென்றால் தேவையில்லாத பிரச்சினைகள் வரும்' என எடுத்துச் சொன்னார்கள்.
ஆனால் அந்தப் பெண் பிராவை அணிய மறுத்துவிட்டு... 'ஙஹ் இர்க்ஹ்; ஙஹ் ஈட்ர்ண்ஸ்ரீங்' என்றார்.
ஆண்கள் அந்தப் பெண்ணைப் பார்த்து ஜொள்ளுவிட்டபடி குளிக்க மறந்து வேடிக்கை பார்த்தனர். இதனால் நீச்சல்குள நிர்வாகிகள் தலையிட்டு, அந்தப் பெண்ணை வெளியேற்றிவிட்டனர்.
அவரோ, குறைதீர்ப்பு ஆணைய நீதிமன்றத்தில் வழக்கு போட்டார்.
இதை விசாரித்த நீதிபதி, "ஆணுக்குப் பெண் சமம்; பாலின பாகுபாடு பார்க்கக்கூடாது; ஆண்கள் மேலாடை அணியாமல் குளிப்பதுபோல் பெண்களும் குளிக்க விரும்பினால் அதை அனுமதிக்க வேண்டும்' என தீர்ப்பளித்தது.
இதனால் சில வருடங்களாக நடந்துவந்த "மேலாடையின்றி குளிக்கும் பெண்கள் உரிமைப் போராட்டம்' முடிவுக்கு வந்துள்ளது.
இதையடுத்து பெர்லினர் பேடர்பெட்ரீப் அதிகாரிகள் நீச்சல்குளத்திற்கு வருவோருக்கான ஆடை விதிகளை தளர்த்தியுள்ளனர்.
""ஆண்கள், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் மேலாடையின்றி குளிக்க விரும்பினால் தாராளமாகக் குளிக்கலாம்'' என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் குடும்பத்துடன் நீச்சல்குளத்திற்கு வருபவர்கள் ""இதெல்லாம் தப்பு; தப்புத்தண்டா நடக்குறதுக்கு வழி வகுக்கும்'' என எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அதிலும் ஓங்கி எதிர்க்குரல் கொடுப்பவர்கள் குடும்பஸ்த ஆண்களே!