as

(37) பெத்துக்கலாமா?

"நான் கமலா ஹாரிஸுக்கு வாக்களிப் பேன். அவர் உரிமைகளுக்காகப் போராடுகிறார். அவர் திறமையான தலைவர் என நான் நினைக்கிறேன். நாம் அமைதியான முறையில் வழிநடத்தப்பட்டால் இந்த நாட்டில் இன்னும் பலவற்றை சாதிக்கலாம்'' -என "இன்ஸ்டாகிராம்' தளத்தில் பதிவிட்டார் அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி -நடிகை டெய்லர் ஸ்விஃப்ட்.

அமெரிக்க அதிபர் பதவிக்கு கமலாவை எதிர்த்துப் போட்டியிடும் ட்ரம்ப் கடுப்பாகி விட்டார். டெய்லரின் கருத்தின் மீது பதிலளித்த ட்ரம்ப், "நான் டெய்லரின் ரசிகனில்லை. எனக்கு அவரைப் பிடிக்காது. டெய்லரின் முற்போக்கு சிந்தனையும் பிடிக்காது. ஆனா டெய்லரோட தோழி பிரிட்னி மஹோம்ஸ்தான் எனக்குப் பிடிச்சவர்'' என்றார்.

Advertisment

பிரிட்னி மஹோம்ஸ் முன்னாள் கால்பந்து வீராங்கனை, ட்ரம்பை ஆதரிக்கிறார் அவர்.

ஆனால், ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளரான "எக்ஸ்'தள உரிமையாளர் எலான் மஸ்க் சொன்ன கருத்து சர்ச்சையாகியிருக்கிறது.

தனது நிறுவன பெண் ஊழியர்களிடம் "இந்த நாட்டுக்கு அறிவாளியான குழந்தைகள் தேவை. என் மூலமா குழந்தைகளை பெத்துக்க'' என கேட்ட குற்றச்சாட்டுகள் மஸ்க் மீது உண்டு. இதுவரை 11 குழந்தைகளின் தந்தையாக இருக்கிறார் மஸ்க். இப்போது டெய்லரிடம் "பெத்துக்கலாமா?' என கேட்டிருக்கிறார் மஸ்க்.

Advertisment

33 வயதான டெய்லர் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதனால் அவருக்கு குழந்தைகள் இப்போது இல்லை. பூனை ஒன்றை வளர்க்கிறார்.

"நீங்கள் வென்றுவிட்டீர்கள் டெய்லர், நான் உங்களுக்கு ஒரு குழந்தை தருகிறேன்.. உங்க பூனையையும் வாழ்நாள் முழுக்க பாதுகாக்கிறேன்'' என்று "எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார் எலான் மஸ்க்.

தன் மூலமாக குழந் தை பெற்றுக்கொண் டால்... டெய்லர் வெற்றி பெறுவதாக அர்த்த மாம். இது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது பொதுவெளியில்.

இதுக்குப் பேரு தான் ஆம்பளத் திமிரு!

இப்படி... அழகான பெண் கள்ட்ட "பெத்துக்க லாமா?' எனக் கேட்கிற.... பிள்ளை வரம் தர விரும்புற... எலான் மஸ்க் மீது புதுசா ஒரு புகைச்சல்.

மஸ்க் என்னவோ பால்தான் குடிச்சிருக்கார்; ஆனா, உட்காந்து குடிச்ச இடம்... பனை மரத்தடியில். அதனால மஸ்க் கள்ளுக் குடிச்சாரு என விஷயம் திசை மாறியிருக்கு.

ss

அமெரிக்காவின் தலைநகர் நியூயார்க்கில் சமீபத்தில் ATLANTIC COUNCIL GLOBAL CITIZEN AWARD எனும் விருது வழங்கும் விழா நடந்தது. 2024-ஆம் ஆண்டுக்கான விருதுக்கு தேர்வானவர்களில் இத்தாலி பிரதமர் GIORGIA MELONI-யும் ஒருவர்.

விழா மேடையில் மெலோனிக்கு இந்த விருதை வழங்கியவர் மஸ்க். விருதைக் கொடுத்த துடன் "இத்தாலிய பிரதமர் பணியை மிகச்சிறப் பாக மேற்கொண்டு வருகிறார். நேர்மையான பெண்மணி மெலோனி' என வாழ்த்தியும் பேசினார். இதனால் தனது எக்ஸ் பக்கத்தில் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்தார் மெலோனி.

ast

விருது தரும் நிகழ்வு முடிந்ததும், விருந்து தரும் நிகழ்வு. மெலோனியும் மஸ்க்கும் ஒரே மேஜையில் அமர்ந்து உணவருந்தினர்.

"பிரதமர் கூடவே டேட்டிங்கா?' என "எக்ஸ்'தள ஓனர் மஸ்க்கை, எக்ஸ் தள கணக்கு வைத்திருப்பவர்கள் பலரும், குறும்புக்காக கிளப்பிவிட... "இத்தாலிய பிரதமருடன் எந்தவிதமான காதல் உறவும் இல்லை' என தெளிவாகச் சொல்லிவிட்டார் மஸ்க்.

அதுக்குப் பேரு... ஆம்பளத் திமிருன்னா...

இதுக்குப் பேருதான் ஆம்பளப் பணிவு!