aa

"புள்ளிராஜா யாரு?'

-அரசின் இந்த விளம்பரம் நினைவுக்கு வருகிறதா?!

"எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்?'

-விவேக்கின் இந்த சினிமா காமெடி நினைவுக்கு வருகிறதா?!

பாலியல் நோயாக உரு வெடுத்து உலகையே அச்சுறுத்திய, பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொன்ற "எய்ட்ஸ்' எனும் உயிர்க்கொல்லி பாலியல் நோய்; படுத்திய பாட்டை எப்படி மறக்க முடியும்?

Advertisment

"எய்ட்ஸ் நோய்' விழிப் புணர்வுக்காக அரசின் விளம்பரங் கள்; திரைக் கலைஞர்களின் சிந்திக்க வைக்கும் சிரிப்புக் காட்சிகள் ஆகியவை மக்களை அலர்ட் செய்து கொண்டேயிருந்தது.

Advertisment

இப்போது அந்த "அலர்ட்' மனோபாவம் பற்றி "அலட்சிய' மனோபாவம் ஏற்பட்டிருப்பதாக கடும் கவலை தெரிவித்துள்ளது 'WORLD HEALTH ORGANISATION' (WHO) எனும் உலக சுகாதார நிறுவனம். இது ஐ.நா. சபையின் கீழ் இயங்குகிறது.

'WHO' -வின் சமீபத்திய அறிக்கையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

நி ஐரோப்பிய நாடுகளில் உடல் தொடர்பின்போது தடுப்பு சாதனங்கள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சரிந்துகொண்டி ருக்கிறது.

நிதிருமணம் செய்யாத இளைஞர், இளைஞிகளிடம்தான் இந்த அலட்சிய மனோபாவம் அதிகரித்து வருகிறது.

நிசுமார் பத்தாண்டுகளுக்கு முன் காண்டம் உள்ளிட்ட தடுப்பு சாதனங்களை இளைஞர்கள் 70 சதவிகிதம் பேர்கள் பயன்படுத்திவந்தார்கள்.

aa

நிஇப்போது 60 -50 சதவிகிதத்தை நோக்கி இறங்குமுகமாகச் சென்றுகொண்டிருக்கிறது.

நிசுமார் பத்தாண்டுகளுக்கு முன் 60 சதவிகித பெண்கள் தடுப்பு சாதனங்களை பயன்படுத்திவந்தார்கள்.

நிஇப்போது 5 சதவிகிதம் குறைந்துள்ளது.

இதனால் என்ன மாதிரியான கடும் விளைவுகள் உண்டாகும்?

"இளம் வயதினர் பாலியல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு ஆளாக நேரிடும்; இது தேவையற்ற மனித சக்தி விரயத்தை உண்டாக்கும்.

அது மட்டுமின்றி, "கூடா கூடல்' கொள்வோரால் இளம் பெண்கள் கர்ப்பமடைந்து; குழந்தைகளைப் பெறுவார்கள். இப்படி உருவாகும் குழந்தைகள் உரிய முறையில் வளர்க்கப்படுவது சந்தேகம். இதனால் சமூகத்தில் பல விளைவுகள் ஏற்படும்.

இதற்கு என்ன தீர்வு?

பாலியல் கல்வியை இன்னும் மேம்பட்ட தரத்தில் உலகம் முழுக்க மாணவச் செல்வங்களுக்கு போதிக்க வேண்டும். அரசாங்கங்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் கைகோர்த்து, தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும்.

"திருமண பந்தமின்றியோ, திருமண பந்தத்திற்கு வெளியிலோ... BODY RELATIONSHIP வைத்துக்கொள்ள வேண்டாம்' என ஒவ்வொருவரிடமும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது.

அதனால் தடுப்பு சாதனங்கள் எளிதாகக் கிடைக்கும்படி செய்யவேண்டும்; அதிலும் ஏழை மக்கள் வாங்கும் விலையில் தடுப்பு சாதனங்கள் இருக்க வேண்டும்.

உலக சுகாதார மையத்தின் அறிக்கையைத் தழுவி இந்த விபரங்களைத் தொகுத்துள்ளோம்!

ss