(23) என்ன விலை அழகே!
இப்படி ஒரு விலைப் பட்டியல் பார்ப்பது சகஜ மானதுதான்...
அரிசி கிலோ ரூ.60.00
து.பருப்பு கிலோ ரூ.200
பூண்டு கிலோ ரூ.300
இந்த விலைப் பட்டியலை கடை வீதிகளுக்குப் போனால் பார்க்கலாம்.
ஆனால்...
சீனாவில் ஒரு விநோத விலைப் பட்டியல் வீதியில் தென்படுகிறது.
சீனாவின் "யென்' மதிப்பில் உள்ளதை இந்திய மதிப்பிற்கு மாற்றித் தந்துள்ளோம்.
இளம் பெண்ணை ஒரு ஆண்....
கட்டிப் பிடிக்க ரூ.12.00
முத்தம் கொடுக்க ரூ.117.00
முத்தம் பெற ரூ.117.00
தியேட்டரில் சேர்ந்து படம் பார்க்க ரூ.200.00
வீட்டு வேலைகள் செய்ய ரூ.220
(23) என்ன விலை அழகே!
இப்படி ஒரு விலைப் பட்டியல் பார்ப்பது சகஜ மானதுதான்...
அரிசி கிலோ ரூ.60.00
து.பருப்பு கிலோ ரூ.200
பூண்டு கிலோ ரூ.300
இந்த விலைப் பட்டியலை கடை வீதிகளுக்குப் போனால் பார்க்கலாம்.
ஆனால்...
சீனாவில் ஒரு விநோத விலைப் பட்டியல் வீதியில் தென்படுகிறது.
சீனாவின் "யென்' மதிப்பில் உள்ளதை இந்திய மதிப்பிற்கு மாற்றித் தந்துள்ளோம்.
இளம் பெண்ணை ஒரு ஆண்....
கட்டிப் பிடிக்க ரூ.12.00
முத்தம் கொடுக்க ரூ.117.00
முத்தம் பெற ரூ.117.00
தியேட்டரில் சேர்ந்து படம் பார்க்க ரூ.200.00
வீட்டு வேலைகள் செய்ய ரூ.2200.00
சேர்ந்து மதுபானம் அருந்த ரூ.4400.00
பின்குறிப்பு: No Sex
சீனாவின் SHENZHEN CITY (ஷென்ஸென் நகர்) சாலைகளில் இப்படி ஒரு விலைப்பட்டியலை வைத்துவிட்டு, அந்தப் பட்டியலின் அருகே அழகிய பெண் அமர்ந்திருக்கிறாள்.
இப்படி... குறிப்பிட்ட ஒரு சாலை நெடுக பட்டியல் போட்டுக்கொண்டு பருவப் பெண்கள் அமர்ந்திருக்கிறார் கள்.
மிக அழகான பெண்கள் இந்த விலையை கொஞ்சம் கூட்டியும், கொஞ்சம் கவர்ச்சி குறைந்த பெண்கள் விலையைக் குறைத்தும் எழுதிப் போட்டிருக் கிறார்கள்.
வேலை டென்ஷன், மன உளைச்சல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட ஆண்கள், தங்களின் டென்ஷனை போக்கிக்கொண்டு "ரிலாக்ஸ்' செய்துகொள்ள இங்கே வரு கிறார்கள். POCKET MONEY மற்றும் PURSE MONEYக்கு ஏற்ப, பட்ஜெட்டுக்கு ஏற்ப பெண்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு போகிறார்கள்.
ஆனால்... ஆண்கள் தலைகீழாக நின்றாலும், உடல் தொடர்புக்கு இந்தப் பெண்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.
"பணம் சம்பாதிப்பதற்கான வழி முறைகளில் ஒன்றாக இளம் பெண் களிடையே இந்த ட்ரெண்ட் பரவி வருகிறது. இளைஞர்களிடமும் இதற்கு "மவுசு' கூடி வருகிறது.
இந்த ஏடாகூட ஆட்டத்துக்குப் பெயர்... இரு விதமாக வைக்கப் பட்டுள்ளது.
1. STREET GIRL FRIENDS
2. NON SEXUAL COMPANIONSHIP
பெண்களின் இந்த ஆட்டத்திற்கு சீனாவில் ஆதரவும் இருக்கிறது எதிர்ப்பும் இருக்கிறது.
எதிர்ப்பாளர்கள் என்ன சொல் கிறார்கள்?
"பணத்துக்காக இப்படியா நடந்து கொள்வது? நேர்மையான வழியில் பணம் சம்பாதிக்கலாமே? அலுவலகம் போய் உழைக்க சோம்பேறித்தனப்பட்டுக்கொண்டு இப்படி சமூகக்கேடான விஷயங்களைச் செய்கிறார்கள்'' என குரல் உயர்த்துகிறார்கள்.
ஆதரவாளர்கள் என்ன சொல்கிறார்கள்?
"அலுவலக உழைப்பிற்கு அதிக நேரம் செலவிடும் இன்றைய ஆண்களால் திருமணம்; குடும்பம், குழந்தை-குட்டி என வாழ்வது சிரமம். அதேசமயம் இயற்கையின் ஈர்ப்புப்படி ஆண்களுக்கு, பெண்களின் அருகாமை அவசியமாக இருக்கிறது. அதற்கு இந்த "ஸ்ட்ரீட் கேர்ள் ஃப்ரெண்ட்' முறை உதவியாக இருக்கிறது'' -என குரல் உயர்த்துகிறார்கள்!
ஸ்ட்ரீட் கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் என்ன சொல்கிறார்கள்?
"இது தவறு கிடையாது; உடல் தொடர்புக்கு நாங்கள் அனுமதிப்பதில்லை. இதன் நோக்கமே... வெறுமையில் இருக்கும் ஆண்களுக்கு அன்பைப் பரிமாறுவதுதான்'' என குரல் உயர்த்துகிறார்கள்.
மூணு தரப்பினர் சொல்றதும் நியாயமா இருக்கிற மாதிரியே... மூணு தரப்பினர் சொல்றதும் அநியாயமா இருக்கு.
"கரணம்... தப்புனா மரணம்'னு சொல்வாங்க!