மதுரை மத்திய சிறை வளாகத்தில் உள்ள 3-வது பிளாக்தான் மகளிர் தனிச்சிறை. 100 கைதிகள் தங்கும் இடத்தில், 4 தண்டனைக் கைதிகள் உள்பட 72 கைதிகளே உள்ளனர். சிறை செல்லிலிருந்து நிர்மலாவை காலை 6 மணிக்குத் திறந்துவிட்டு மாலை 6 மணிக்கு அடைத்துவிடுவோம். உடனே குளித்து உடை மாற்றிக்கொள்கிறார். செய்திகளைப் படிக்கிறார். "ஏஸியிலேயே இருந்து பழகிவிட்டேன். சிறையின் வெப்பம் தாங்க முடியவில்லை; மிகவும் புழுக்கமாக இருக்கிறது' என்று சக கைதிகளிடம் அங்கலாய்க்கிறார். எந்நேரமும் ஹாலில் உள்ள பொது ஃபேனுக்கு அருகில் உட்கார்ந்துகொள்கிறார். டி.வி.யில் அவர் குறித்த செய்தி வரும்போது, "இந்த பேப்பர்காரங்க, டி.வி.காரங்க எப்பவும் இப்படித்தான்'’ என்று சொல்லிச் சிரிக்கிறார்.
"இந்த கருப்பசாமி ரொம்ப மோசமானவன். ஆனா முருகன் மொத்தமே பத்து பதினஞ்சு தடவை பேசியிருப்பாரு. ஒரு நாளைக்கு 120 தடவை பேசினவன்லாம் இருக்கான். அவங்கள விட்டுட்டு, அய்யோ பாவம் முருகனைப் பிடிச்சு ஜெயில்ல போட்டுட்டாங்க'’என்று பரிதாபப்படுகிறார். இந்த வழக்கில் பெரிய அளவில் தனக்கு தண்டனை எதுவும் பெற்றுத்தர முடியாது என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கிறது நிர்மலாதேவிக்கு.
இதே சிறையில் இருக்கும் உதவிப் பேராசிரியர் முருகனோ, "அய்யா' என்று காவலர்களை அழைப்பதுடன், "ரூம் அரேஞ்ச்பண்ணிக் கொடுத்தேன். வேற எந்தத் தப்பும் பண்ணலய்யா. என்னோட மாச சம்பளம் ரூ.77,000. என் மனைவிக்கு சப்-ரிஜிஸ்ட்ரர் ஆபீஸ்ல வேலை. நான் எதுக்குய்யா மாமா வேலை பார்க்கப் போறேன்?'’என்று புலம்புகிறார் என்கிறது சிறைத்துறை.
நிர்மலாதேவிக்கு அருப்புக்கோட்டையில் பெயர் ரிப்பேராகியிருந்தாலும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் செல்வாக்கு வளர்ந்தபடியே இருந்துள்ளது.
மதுரை மத்திய சிறை வளாகத்தில் உள்ள 3-வது பிளாக்தான் மகளிர் தனிச்சிறை. 100 கைதிகள் தங்கும் இடத்தில், 4 தண்டனைக் கைதிகள் உள்பட 72 கைதிகளே உள்ளனர். சிறை செல்லிலிருந்து நிர்மலாவை காலை 6 மணிக்குத் திறந்துவிட்டு மாலை 6 மணிக்கு அடைத்துவிடுவோம். உடனே குளித்து உடை மாற்றிக்கொள்கிறார். செய்திகளைப் படிக்கிறார். "ஏஸியிலேயே இருந்து பழகிவிட்டேன். சிறையின் வெப்பம் தாங்க முடியவில்லை; மிகவும் புழுக்கமாக இருக்கிறது' என்று சக கைதிகளிடம் அங்கலாய்க்கிறார். எந்நேரமும் ஹாலில் உள்ள பொது ஃபேனுக்கு அருகில் உட்கார்ந்துகொள்கிறார். டி.வி.யில் அவர் குறித்த செய்தி வரும்போது, "இந்த பேப்பர்காரங்க, டி.வி.காரங்க எப்பவும் இப்படித்தான்'’ என்று சொல்லிச் சிரிக்கிறார்.
"இந்த கருப்பசாமி ரொம்ப மோசமானவன். ஆனா முருகன் மொத்தமே பத்து பதினஞ்சு தடவை பேசியிருப்பாரு. ஒரு நாளைக்கு 120 தடவை பேசினவன்லாம் இருக்கான். அவங்கள விட்டுட்டு, அய்யோ பாவம் முருகனைப் பிடிச்சு ஜெயில்ல போட்டுட்டாங்க'’என்று பரிதாபப்படுகிறார். இந்த வழக்கில் பெரிய அளவில் தனக்கு தண்டனை எதுவும் பெற்றுத்தர முடியாது என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கிறது நிர்மலாதேவிக்கு.
இதே சிறையில் இருக்கும் உதவிப் பேராசிரியர் முருகனோ, "அய்யா' என்று காவலர்களை அழைப்பதுடன், "ரூம் அரேஞ்ச்பண்ணிக் கொடுத்தேன். வேற எந்தத் தப்பும் பண்ணலய்யா. என்னோட மாச சம்பளம் ரூ.77,000. என் மனைவிக்கு சப்-ரிஜிஸ்ட்ரர் ஆபீஸ்ல வேலை. நான் எதுக்குய்யா மாமா வேலை பார்க்கப் போறேன்?'’என்று புலம்புகிறார் என்கிறது சிறைத்துறை.
நிர்மலாதேவிக்கு அருப்புக்கோட்டையில் பெயர் ரிப்பேராகியிருந்தாலும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் செல்வாக்கு வளர்ந்தபடியே இருந்துள்ளது. கண்ட்ரோலராகவோ, பதிவாளராகவோ, துணைவேந்தராகவோ பெரிய பொறுப்புக்கு வரவேண்டுமென்றால் பெரியதொகை கொடுத்தாக வேண்டும். அதற்கேற்ப மாணவிகளைத் தேடி, தோற்றத்துக்கேற்ப ரேட் பேசியிருக்கிறார். கொட்டிக் கொடுக்க ஆள் இருந்ததால், நிர்மலாவின் பண வேட்டையும் பதவி வேட்டையும் தொடர்ந்துள்ளன.
நிர்மலாதேவியின் ஏற்பாட்டில் அவருடன் கேரளாவில் உள்ள இடுக்கிக்கு மாணவிகள் சிலர் அனுப்பி வைக்கப்பட்டனர். அழைப்பு விடுத்தவர் கேரள கவர்னருக்கு வேண்டியவர். கேரள கவர்னர் மதுரை வந்தபோது, கவர்னருக்கு வேண்டிய அந்த நபருடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார் நிர்மலாதேவி. விசாரணையில் இந்த விவகாரத்தை அறிந்து அதிர்ந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், தங்களின் மேலதிகாரியிடம் ஆலோசித்திருக்கிறார்கள். "சம்பந்தப்பட்ட மாணவிகள் பக்கம் விசாரணைக்குப் போகவே வேண்டாம். ஒரு கவர்னரால் படும்பாடு போதாதா? இதில் இன்னொரு கவர்னர் ஏரியாவை தொடர்புபடுத்தி விசாரணையா? அதெல்லாம் தேவையில்லை. தமிழகத்து ராஜ்பவனே செயின்ட் ஜார்ஜ் கோட்டையோடு சமாதானம் பேசியிருக்கிறது. அதனால ராஜ்பவன் தொடர்புகளை ரொம்ப நோண்ட வேண்டாம். நிர்மலாதேவி பணத்துக்காக விபச்சாரத்தில் ஈடுபட்டார்னு விசாரணையை முடித்தால் போதும்'’என்றிருக்கிறார் மேலதிகாரி. "விசாரித்தது போதும்; குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான வேலைகளைப் பாருங்கள்'’என்று சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் வேகம் காட்டியிருக்கின்றனர் மேலிடத்தினர். மாநிலத்தையே பரபரப்பாக்கி, ஊடகங்களில் விவாதப்பொருளாகிய விவகாரம் தொடர்பான விசாரணையை அம்போவென விட்டுவிட்டனர்.
நிர்மலாதேவியால் வளைக்கப்பட்டவர்கள் மேஜர் கேர்ள்ஸ்தான். மைனர் கேர்ள்ஸ் கிடையாது. அதனால், பெரிய அளவில் தண்டனை பெற்றுத் தரக்கூடிய வழக்கு இதுவல்ல. இதை மனதில் வைத்து, விசாரணை அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தால் போதும்.’ என்று சட்ட ஆலோசனை கிடைக்கப்பெற்ற பிறகே, சரண்டர் ஆனார் உதவிப் பேராசிரியர் முருகன். விசாரணையின்போது அவரிடம் "உன் வாழ்நாளில் நிரந்தரமாக உனக்கு வேலை கிடைக்காதபடி செய்துவிடுவோம். உனக்கு வாழ்க்கை என்பதே இல்லாமல் செய்துவிடுவோம்'’என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் மிரட்டிப் பார்த்தனர். முருகனோ அசைந்து கொடுக்கவில்லை. பல்கலைக்கழகப் பதிவாளர் சின்னையா குறித்து கடைசி வரையிலும் வாய் திறக்கவில்லை.
விசாரணை மேற்கொள்ளும் சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. ராஜேஸ்வரி, நேர்மைக்குப் பெயர் பெற்ற அரசியல் தலைவர் கக்கனின் பேத்தி. தன் டீமுடன் நியாயமாக விசாரணையை அவர் மேற்கொண்ட நிலையில், விசாரணை வட்டாரத்திடமிருந்து சில விவரங்கள் கிடைத்தன. "மாணவிகளை அழைத்துக்கொண்டு இடுக்கி, கொடைக்கானல் சென்று விசாரிக்கவேண்டும்' என்ற ப்ளான் நிறைவேறவில்லை. கவர்னருடன் நிர்மலாதேவி செல்பி எடுத்த போட்டோவை நாங்கள் பார்க்கவில்லை. ஆனாலும், கவர்னர் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் எடுத்த போட்டோவில் ஒரு ஓரமாக நிற்கிறார் நிர்மலாதேவி. யுனிவர்சிட்டியில் உள்ள சி.சி.டி.வி. ஃபுட்டேஜை நாங்கள் இன்னும் பார்க்கவில்லை. கோர்ட் உத்தரவுக்குப் பிறகுதான், அவற்றை ஆய்வுக்கு அனுப்பி வைப்போம்.
அருப்புக்கோட்டையில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு ஒருமுறை முருகனை அழைத்துச் சென்றார் நிர்மலாதேவி. மாணவிகளின் வாட்ஸ்-ஆப் போட்டோக்களைக் காட்டி ‘எப்படி இருக்கிறார்கள்?’ என்று கேட்டிருக்கிறார். அப்போது ஏனோ, மாணவிகள் மீது முருகன் ஆர்வம் காட்டவில்லை. ஒரு முறை மதுரையிலிருந்து திருச்சுழிக்கு காரில் பயணம் செய்தபோது, மிகவும் உணர்ச்சிவசப்பட்டு காரிலேயே நிர்மலாவை நெருங்கியிருக்கிறார் கருப்பசாமி. மாணவிகள் விஷயத்தில் பேரார்வத்தை வெளிப்படுத்தி, தொடர்ந்து நச்சரித்திருக்கிறார். பிறகு முருகனையும் தன் வழிக்கு இழுத்திருக்கிறார் கருப்பசாமி என்கிறது சி.பி.சி.ஐ.டி. தரப்பு.
""எங்களின் விசாரணையில் முருகன், கருப்பசாமிக்குப் பிறகு மூன்றாவது ஆளாக வருகிறார் கலைச்செல்வன்'' எனச் சொல்லும் சி.பி.சி.ஐ.டி. போலீசார், "அவரும் நிர்மலாவோடு தொடர்பில் இருந்திருக்கிறார். ஆனால், "மாணவிகள் வேண்டும்' என்று கேட்கவில்லை. அதனாலேயே, அவரை விசாரித்து அனுப்பிவிட்டோம். இங்கே, நான்காவது ஆளாக வருகிறார் தங்கப்பாண்டியன். டி.லிட். ஆய்வு மாணவரான தங்கப்பாண்டியனுக்கு, மாதம்தோறும் ரூ.45,000 உதவித்தொகை கொடுத்துவருகிறது மத்திய அரசு. பேப்பர் திருத்துவது, ப்ராஜக்ட் பண்ணித்தருவது போன்ற காரியங்களுக்கு தங்கப்பாண்டியனை பயன்படுத்தியிருக்கிறது முருகன்-கருப்பசாமி கூட்டணி. இவர்களுடன் குற்றாலம் சென்றிருக்கிறார் தங்கப்பாண்டியன். மதுப்பழக்கம் கூட இல்லாத தங்கப்பாண்டியனை, அங்கு ஒரு எடுபிடி போல நடத்தியிருக்கிறார்கள். ஆனாலும், நிர்மலாவுடன் பழகும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். பெரிய குற்றச்செயலில் ஈடுபடாததால், விசாரித்துவிட்டு தங்கப்பாண்டியனை அனுப்பிவிட்டோம்.
முதலில் மேலூர் அரசு கலைக்கல்லூரியில் வேலை பார்த்திருக்கிறார் கலைச்செல்வன். 2014-ல் கல்யாணி மதிவாணன் துணைவேந்தராக இருந்தபோது, ரூ.30 லட்சம் தந்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஆகியிருக்கிறார். இவருடைய மனைவி, தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் டாக்டராக பணிபுரிகிறார். பிறமலைக்கள்ளரான கலைச்செல்வனை, தான் துணைவேந்தர் ஆனவுடன், தொலைக்கல்வி இயக்குநர் ஆக்கினார் செல்லத்துரை. பிற மாநிலங்களிலும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கென்று சென்டர்கள் உண்டு. கேரள மாநில சென்டர் விஷயமாக, அந்த மாநிலத்தைச் சேர்ந்த முக்கியப் பொறுப்பில் உள்ள பெண் ஒருவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு வந்திருக்கிறார். அவரிடம் கலைச்செல்வன், "நீங்க ஸ்மார்ட்டா இருக்கீங்க. உங்களை சந்திக்கணும். நீங்க தங்கியிருக்கிற இடத்துக்கு நான் வரவா? நான் தங்கியிருக்கிற இடத்துக்கு நீங்க வர்றீங்களா?'’ என்று கேட்டிருக்கிறார். இது பெரிய பிரச்சனையாக வெடித்திருக்கிறது. உடனே, கலைச்செல்வனை அங்கிருந்து தூக்கியடித்து, புத்தாக்க பயிற்சி இயக்குநர் ஆக்கியிருக்கிறார்கள். இந்தத் துறையிலும் தன் வேலையைக் காட்டிவிட்டார்.
"துணைவேந்தரிலிருந்து வேந்தர் வரையிலும், தன் செல்வாக்கை வளர்த்துக்கொண்டவர் கலைச்செல்வன். குடும்ப ரீதியாக நீதித்துறையுடன் தொடர்புள்ளவர். ஜாதி பின்னணியும் கொண்ட இவரை வழக்கில் சிக்கவைத்து வாய் திறக்கச் செய்தால், அனைத்தையும் போட்டுக் கொடுத்துவிடுவார்' என வி.வி.ஐ.பி. தரப்பிடம் இந்த விஷயங்களை எடுத்துச் சொல்லியிருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து கலைச்செல்வனிடமும் பெயரளவு விசாரணையுடன் முடிந்துவிட்டது.
சி.பி.சி.ஐ.டி. தரப்பிலோ, ""ஒரு விஷயம் தெரியுமா? தனக்கு மதுப்பழக்கம் உண்டு என்பதைக் கடைசிவரையிலும் நிர்மலாதேவி ஒப்புக்கொள்ளவில்லை. இது ஒன்றும் விபச்சார வழக்கு கிடையாது. செஷன்ஸ் வழக்கு. செக்ஷன் 370 போட்டிருக்கிறோம். சம்பந்தப்பட்டவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெற்றுத்தர முடியும்'' என்கின்றனர். நிர்மலாதேவி குற்றவாளிதான். ஆனால், அவர் மட்டுமா குற்றவாளி? நிர்மலாதேவி, கருப்பசாமி, முருகன் என பலியாடுகள் சிறையில் மாட்ட, அதிகார சிங்கங்கள் வழக்கம்போல வேட்டையாடிக் கொண்டேயிருக்கின்றன.