கல்லக்குடி! இந்தப் பெயர் தமிழக அரசியல் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்தது. 1953 -ஆம் ஆண்டு சிதம்பரத்தில் அண்ணா தலைமையில் நடந்த மாநாட்டில் "டால்மியாபுரம் என்கிற பெயரை எடுத்துவிட்டு, மீண்டும் கல்லக்குடி என்கிற பூர்வீக பெயரையே வைக்கவேண்டும்' எனத் தீர்மானம் போடப்பட்டது. அந்தப் பெயர் மாற்ற போராட்டத்தின் முதல் அணியை முன்னின்று நடத்தியவர் கலைஞர். அந்த போராட்டத்தில் கலைஞர், கண்ணதாசன் உள்ளிட்டோருக்கு கடுங்காவல் தண்டனை கிடைத்தது. அந்த போராட்டக் களத்தில், திருச்சி சிறையில் இருந்தவர்களில் ஒருவர்தான் கீழையூர் ராமையா. இன்று 96 வயதைக் கடந்து, வயோதிகத்தால் உடல் நலிந்து ஒவ்வொரு நொடியும் கலைஞரின்
கல்லக்குடி! இந்தப் பெயர் தமிழக அரசியல் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்தது. 1953 -ஆம் ஆண்டு சிதம்பரத்தில் அண்ணா தலைமையில் நடந்த மாநாட்டில் "டால்மியாபுரம் என்கிற பெயரை எடுத்துவிட்டு, மீண்டும் கல்லக்குடி என்கிற பூர்வீக பெயரையே வைக்கவேண்டும்' எனத் தீர்மானம் போடப்பட்டது. அந்தப் பெயர் மாற்ற போராட்டத்தின் முதல் அணியை முன்னின்று நடத்தியவர் கலைஞர். அந்த போராட்டத்தில் கலைஞர், கண்ணதாசன் உள்ளிட்டோருக்கு கடுங்காவல் தண்டனை கிடைத்தது. அந்த போராட்டக் களத்தில், திருச்சி சிறையில் இருந்தவர்களில் ஒருவர்தான் கீழையூர் ராமையா. இன்று 96 வயதைக் கடந்து, வயோதிகத்தால் உடல் நலிந்து ஒவ்வொரு நொடியும் கலைஞரின் பெயரை கூறியபடியே படுத்திருக்கிறார்.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரை அடுத்துள்ள கீழையூரில் எளிமையான குடும்பத்தில் பிறந்தவர். இளைஞராக இருக்கும் போதே தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டு அண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் எங்கு மாநாடு, பொதுக்கூட்டம் நடத்தினாலும் மறக்காமல் சென்றுவிடுவார். அப்படித்தான் இருபத்திஐந்து வயது இளைஞராக இருக்கும்போது கல்லக்குடியில் ரயில் நிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைக்கு சென்றிருக்கிறார். ரயில் தண்டவாளம் முன்பு படுத்து போராட்டம் நடத்தி, சிறைக்கு வந்த கலைஞரோடு நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது. சிறையில் கலைஞர் நடத்திய கொள்கைப் பயிற்சி வகுப்புகள், கீழையூர் ராமையா உள்ளிட்ட பலரையும் தீவிர தொண்டராக்கியது. "குடும்பத்தைவிட கழகமே முக்கியம்' என அவர்களை பயணிக்கச் செய்திருக்கிறது.
கீழையூர் ராமையா குறித்து மயிலாடுதுறை தி.மு.க.வினரிடம் பேசினோம்... "சொந்த பிரச்சினைக்காகவோ, குடும்பத்தினருக்காகவோ எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்களிடமோ உதவி கேட்டு அவர் நின்றதில்லை. கட்சிக் கூட்டம், மாநாடு, கலைஞர், ஸ்டாலின் வருகிறார் என்றால் கடைக்கோடி தொண்டனை போல கொடி பிடித்துக்கொண்டு முதல்ஆளாக வந்துவிடுவார். மக்கள் மத்தியில் எப்படி நடந்துகொள்ள வேண்டும், வேட்டி கட்டிக்கொள்வதிலும், பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று கலைஞர் சிறையில் இருக்கும்போது சொன்னதை, சக கட்சிக்காரர்களிடமும், இளைய சமுதாயத்தினரிடம் கூறி புளகாங்கிதம் அடைவார். கலைஞரின் சிறை அனுபவத்தைக் கூறி, கலைஞர் பட்ட கஷ்டத்தை நாம் இன்று அறுவடை செய்கிறோம் என கூறுவார்'' என்கிறார்கள்.
கீழையூர் ராமையாவோடு நெருக்கமாக இருந்த வர்கள் கூறுகையில், "கல்லக்குடி போராட்டத்தின்போது சிறையில் உடனிருந்த தொண்டர்களில் சிலர், கலைஞரை ஒரு போர்த் தளபதியைப் போல பாதுகாத்து பராமரித்திருக்கிறார்கள். அவர் மீது கொண்ட மரியாதையால், கலைஞர் கேட்காமலேயே அவருக்கு பணிவிடைகளும் செய்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் கீழையூர் ராமையாவும். பழைய கட்சிக்காரர்கள் குடும்பத் தைவிட கழகத்தையே குடும்பமாக நினைத்தனர். தற்போது ராமையா வும், அவரது மனைவியும் நோய் வாய்ப்பட்டு படுக்கையில் இருக் கின்றனர். அவரது பிள்ளைகள், கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு பெற்றோர்களை கவனித்து வருகின்றனர். அவரது குடும்பம் இன்று பெருத்த சோதனையில் வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கிறது. தி.மு.க. தலைவர் இதனை கவனத்தில் கொள்ளவேண்டும்'' என்கிறார்கள்.
ராமையாவின் மகன்களில் ஒருவரான ராஜ்குமார் கூறுகையில், "எங்க குடும்பமே தி.மு.க.தான், எங்க அப்பா சொல்லிக் கொடுத்ததை, எங்க பிள்ளைங்களுக்கு நாங்க சொல்லிக் கொடுக்குறோம். தலைவர் ஸ்டாலின் அவர்கள் எங்களின் நிலை அறிந்து உதவவேண்டும்'' என்கிறார் கலங்கியபடியே.