விருத்தாசலத்திலுள்ள விருத்தகிரீஸ்வரர் திருக்கோவிலில் குடமுழுக்கு நடைபெற்ற ஒரு மாதத்திற்குள்ளாகவே கடந்த 1-ம் தேதி காலை 6 மணியளவில் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பக்தர்கள், தங்க முலாம் பூசப் பட்ட ரூ.30 லட்சம் மதிப்புடைய, 3 கோபுர கலசங்கள் காணாமல் போனதுகண்டு அதிர்ச்சியடைந் தனர். பி.சக்திகணேசன் உத்தரவில், 3 தனிப்படைகள் முடுக்கி விடப்பட்டு, 3 நாட்களுக்குள் திருடியவரைக் கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, "கலசங்கள் காணாமல் போனதும் கோவிலுக்கு அருகிலுள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆராய்ந்ததில், மர்ம நபர் ஒருவர் வடக்கு கோபுரம் அருகேயுள்ள கோவில் மதில் சுவர் மீது ஏறி நுழைந்ததும், பின்னர் டூவீலரில் மூட்டைகளை எடுத்துச்செல்வதும் தெரிந்தது. வழிநெடுக சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வுசெய்ததில், வடக்கு பெரியார் நகரில், அமுதம் தெருவிலுள்ள வீட்டில் அதே வண்டி நின்றது. அங்கு விசாரித்ததில், கலசத்தைக் களவாடிய அரியலூர் மாவட்டம், அழகாபுரத்தை சேர்ந்த பரம சிவம் மகன் சந்தோஷ்குமார் (48) என்பவர் பிடிபட்டார்.

kk

Advertisment

"கும்பாபிஷேகத்துக்கு சென்ற என்னை கோவிலுக்குள் போலீசார் விடவில்லை. அந்த கோபத்தில்தான் திருடினேன்' என்றும், "எனக்குள் முருகன் இருக்கிறார். அவர் கனவில் வந்து கோயில் கலசத்தை எடுத்து வர சொன்னார்' என்றும் அவர் சொன்னது குழப்பியது.

மேலும் விசாரித்ததில் அவர் கொஞ்சம் மன நலம் பாதிக்கப்பட்டு இருக்க லாம் என்று தெரிந் தது.

இதுகுறித்து வழக்கறிஞர் காசிவிஸ்வநாதன் நம் மிடம், “"விருத்தகிரீஸ்வரர் கோயிலில் திருடு போவது இது முதல் முறை அல்ல. கடந்த 2002-ல் குட முழுக்கு சமயத்தில் பூஜை யிலிருந்த ஸ்படிகலிங்கம் காணாமல்போனது இப்போதுவரை கிடைக்க வில்லை. அடுத்ததாக அர்த்தநாரீஸ்வரர் சிலை யொன்று காணாமல் போய், 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி ஆஸ்தி ரேலியா சென்றபோது, அந்நாட்டு அரசு இந்தியா விடம் அச்சிலையை ஒப்படைத்தது. தற்போது இந்தத் திருட்டில் வேறு யாரும் சம்பந்தப்பட்டுள்ளனரா என்று விசாரித்துவருகிறோம்''” என்றார்.

இக்கோவிலுக்கு கலசங் களைச் செய்துகொடுத்தவரான முருகனிடம் கேட்டோம், "4 கலசங்களை ஒன்றரை லட் சத்திற்கு வாங்கி வந்து, அதில் 400 கிராம் தங்கத்தால் முலாம் பூசி சுமார் 30 லட்சம் மதிப்பில் செய்து கொடுத்தோம். அது திருடு போனது என்றவுடன் அதிர்ச்சியாகிவிட்டது. காவல்துறை கண்டுபிடித்த பிறகுதான் உயிர் வந்தது. அந்த கலசங்களைப் பார்த்து உறுதி செய்தோம்''’என்றார்.

ஒருவரால் எப்படி கோபுரத்திலிருந்து 3 கலசங்களை கழட்டி கீழே எடுத்து வர முடியும்? பின்னணியில் யாரோ இருக்கிறார்கள் என்று மக்களின் சந்தேகம் தீர்ந்தபாடில்லை.