பீகார் மாநிலத் தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டு 65 லட் சம் சம் வாக்காளர்களை நீக்கியிருக்கும் நிலையில், புதுடெல்லியில் செய்தி யாளர்கள் சந்திப்பை நடத்தினார் ராகுல்காந்தி. அதில், தேர்தல் ஆணையமே ஆளுங்கட்சியுடன் சேரந்துகொண்டு வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக ஆதாரங்களுடன் குற்றம்சாட்டினார்.
செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடித்தளம், ஒரு நபருக்கு ஒரு ஓட்டு. இந்தியாவில் நடக்கும் தேர்தல்களைப் பார்க்கும்போது, அடிப்படை யானதும் மிக முக்கியமானதுமான விஷயம், ஒருவருக்கு ஒரு ஒட்டு என்கிற விஷயம் எத்தனை தூரம் பாதுகாப்பானது? சரியான நபர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறார்களா?, போலியான நபர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெறுகிறார்களா? வாக்காளர் பட்டியலே உண்மையானதா இல்லையா? என்ற சந்தேகம் தற்போது பொதுமக்களிடம் எழுந்திருக்கிறது
ஜனநாயக சட்டகத்தில் பா.ஜ.க. மட்டுமே ஆட்சிக்கு எதிரான மனநிலையால் பாதிக்காத ஒரே கட்சியாக இருக்கிறது. இந்தியாவில் மின்னணு தேர்தல் இயந்திரம் வந்தபோது, ஏழைகள் நிறையபேர் வாக்களிக்க வரவில்லை. ஆனால் கடந்த வருடம் உத்தரப்பிரதேசத்தில் நிறைய வாக்குகள் விழுந்தன. இதில்தான் எங்களுக்கு சந்தேகம் எழுகிறது. மகாராஷ்டிராவில் ஐந்து வருடங்களில் சேர்க்கப்பட்ட வாக்காளர்களைவிட அதிகமான வாக்காளர்கள் ஐந்து மாதங்களில் சேர்க்கப் பட்டனர். இது எங்களிடையே சந்தேகத்தைக் கிளப்பியது. மகாராஷ்டிராவின் மக்கள்தொகையை விடவும் அதிகமான வாக்காளர்கள் சேர்க்கப் பட்டார்கள். தேர்தல் ஆணையத்திடம் முறையிட் டோம். பின் இதனை கட்டுரையாக எழுதினோம். இவை பல செய்தித்தாள்களில் அச்சில் வந்தன. அதன்பிறகே மகாராஷ்டிரா தேர்தல் திருடப்பட்டு விட்டது என நாங்கள் குறிப்பிட்டோம். கட்டுரை வெளிவந்து சலசலப்பை ஏற்படுத்தியது. வாக்காளர் பட்டியல் இந்த நாட்டின் உடைமை. ஆனால் இதனை தேர்தல் ஆணையம் தரமறுக்கிறது.
தேர்தல் ஆணையம் எங்களுக்கு சாஃப்ட் காபியை அளிக்கவில்லை. அளித்த வாக்காளர் பட்டியலை ஸ்கேன் செய்து பயன்படுத்தமுடியாது, அதுதான் இதில் பிரதான சூட்சுமம். நாங்கள் வாக்காளர் பட்டியல், சி.சி.டி.வி பதிவுகளைக் கேட்டதும், தேர்தல் பதிவின் சி.சி.டி.வி. புட்டேஜை அழிக்கப்போவதாகச் சொல்லினர். இது எங்களை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. மகாராஷ்டிராவில் மாலை 5.30 மணிக்குப் பின் மிகப்பெருமளவுக்கு வாக்குப் பதிவு நடந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. வாக்குச்சாவடிகளில் 5.30-க்கு மேல் மாபெரும் வாக்களிப்போ, பெரிய வரிசைகளோ இல்லை. இந்த இரண்டு விஷயங்களும் எங்களை, தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வுடன் சேர்ந்து தேர்தல்களைத் திருடியிருக்கிறது என நிச்சயமாக நம்பச்செய்தது.
இருந்தும் எங்களிடம் ஆதாரம் கிடையாது. எனவே நாங்கள் ஒரு குழுவை ஒருங்கிணைத்தோம். நாங்கள் இதைச் செய்யும்போதுதான் தேர்தல் ஆணையம் ஏன் எங்களுக்கு மின்னணுத் தரவைத் தரவில்லை என்பதை உணரவந்தோம். இந்த வேலையைச் செய்ய எங்களுக்கு ஆறு மாதம் பிடித்தது. தேர்தல் ஆணையம் மின்னணுத் தரவைத் தந்திருந்தால் இதே வேலையை 30 நொடிகளில் செய்துமுடித்துவிடலாம்.
கர்நாடகாவில் காங்கிரஸ் கருத்துக் கணிப்புக் குழு, நாங்கள் 16 இடங்களை வெல்வோம் என எதிர்பார்ப்ப தாகத் தெரிவித்திருந்தது. ஆனால் 9 இடங்களில்தான் வென்றிருந்தோம். எனவே, எதிர்பாராமல் தோற்ற ஏழு இடங்களில் கவனம் செலுத்தினோம். முதலில் ஒரு லோக்சபாவைத் தேர்வுசெய்தோம். எங்களது ஆய்வுக்கு கர்நாடகாவின் பெங்களூரு மத்திய தொகுதியை எடுத்துக்கொண்டோம். அதில் ஒரேயொரு சட்டமன்ற மான மாதேவபுராவைத் தேர்வுசெய்தோம்.
2024-ல் இந்த மக்களவைத் தொகுதியில் 6.26 லட்சம் வாக்குகள் மொத்தமாகப் பதிவாகின. பா.ஜ.க. 6,58,915 வாக்குகள் பெற்று, 32,707 வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றிபெற்றிருந்தது. அதில் மாதேவபுராவில் மட்டும் காங்கிரஸ் 1,15,586 வாக்குகள் பா.ஜ.க. 2,29,632 வாக்குகள் பெற்றிருந்தது. இந்த சட்டமன்றத் தொகுதி யைத் தவிர மற்ற அனைத்து சட்டமன்றத் தொகுதி களிலும் காங்கிரஸ் வெற்றிபெறுகிறது. இந்த ஒன்றில், பா.ஜ.க. 1,14,046 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறது.
ஏன் இந்த ஒரு தொகுதியிலிருந்து இத்தனை அதிக வாக்குகள் வரவேண்டும்? விவரங்களை ஆரா யத்தொடங்கினோம். நாங்கள் 1,00,250 ஓட்டுகள் திருடப் பட்டதைக் கண்டு பிடித்தோம். அத் தொகுதியிலுள்ள மொத்த ஓட்டுக்கள் 6,50,000. அதில் 1,00,250 ஓட்டுகள் திருடப்பட்டன. படிவம் 6-ஐ தவறாகப் பயன்படுத்துவது, போலி முகவரி, சரியான புகைப்படமில்லாதது, ஒரே முகவரியில் பல வாக்காளர்கள் என ஐந்து வேறுபட்ட வழிகளில் வாக்குகளைத் திருடினர். குர்கீரத்சிங் டாங். இவர் நான்கு வெவ்வேறு வாக்குச்சாவடியில் வாக்களித் திருக்கிறார். இது ஏதோ ஒரு தனிநபர் அல்ல…. கிட்டத்தட்ட 11,000 நபர்கள் இப்படி வெவ்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்களித்திருக்கிறார்கள். ஒருவர் நான்கு முறை வாக்களித்ததாகக் கொண்டால் 44,000 வாக்குகள்.
போலி முகவரிக்கு வருவோம். வீட்டு எண் 0. சிரிக்காதீர்கள். வீட்டு எண் 0-வைக் கொண்டவர்கள். ஒருவரின் அப்பாவின் பெயரைப் பாருங்கள் I-L-S-D-H-F-H-U-G. இது இன்னொருவரின் அப்பா பெயர் D-F-O-I-G-O-I-D-F, ஒன்று முகவரி இருக்காது, அல்லது கதவு எண் 0 ஆக இருக்கும், தெருப் பெயர் 0 ஆக இருக்கும். இப்படி ஒரு 40,000 வாக்காளர்கள். கதவு எண் 35 என்று குறிப்பிட்டிருக்கிறது. ஒரே வீட்டில் 80 வாக்காளர்கள்.
இதை சரிபார்க்க நாங்கள் ஆட்களை அனுப்பினோம். அவர்களை அடித்து அனுப்பினார்கள். சரியான புகைப்படமில் லாமல் 4,000 வாக்காளர்கள். ஒன்று புகைப்படமே இருக்காது. அல்லது பார்க்கமுடியாத அளவுக்கு சிறிய புகைப்படம். இதெல்லாம் ஒரிஜினல் வாக்காளர் பட்டியலில்.
இளம் வாக்காளர்கள் பிரதமருக்கு வாக்களிக்க விரும்புவ தாகச் சொல்லப்படுகிறது. புதிய வாக்காளர்களுக்கு படிவம் 6 இருக்கிறது. இந்தப் படிவத்தை நிரப்பியளித்தால் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் வந்துவிடும். ஷகுன் ராணி. இவருக்கு 70 வயது. இவர் வாக்காளர் பட்டியலில் இருமுறை இடம்பெற்றி ருக்கிறார். அதுவும் புதிய வாக்காளராக. இவர் படிவம் 6-ஐ இருமுறை பயன்படுத்தியிருக்கிறார். அதாவது இவர் இருமுறை வாக்களித்திருக்கிறார். அல்லது இவர் பெயரில் யாரோ இரு முறை வாக்களித்திருக்கிறார்கள். பார்ம் 6-ஐ, மாதேவபுரம் சட்ட மன்றத் தொகுதியில் மட்டும் 33,000 பேர் பயன்படுத்தியிருக் கிறார்கள். அவர்களில் சிலரது வயதைப் பாருங்கள். 98, 96, 95. இந்த 33,000 பேரில் ஒரேயொருவர்கூட 18 முதல் 25 வயதுடை யவர் இல்லை. இப்படித்தான் பெங்களூர் சென்ட்ரல் லோக் சபா தொகுதியைத் திருடியிருக்கிறார்கள். ஒரு தொகுதியில் மட்டும் 1,00,250 வாக்குகளைத் திருடியிருக்கிறார்கள். போலி வாக்காளர்கள் 11,965, தவறான முகவரி உடையவர்கள் 40,009, ஒரே முகவரியில் எண்ணற்ற வாக்காளர்கள் 10,452, சரியான புகைப்படம் இல்லாதவர்கள் 4132, படிவம் 6-ஐ தவறாகப் பயன்படுத்தியவர்கள் 33,692. தேர்தல் ஆணையம் எங்களுக்கு மின்னணு தரவைத் தராததற்கான காரணம் இதுதான். நாடு முழுவதும் இப்படி நடப்பது வெளிப்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான். ஹரியானா தேர்தலில் மாநிலம் முழுவதும் காங்கிரஸின் வெற்றிக்கும்- தோல்விக்குமான வித்தியாசம் 22,779 வாக்குகள். கர்நாடகாவின் மக்களவைத் தேர்தலில், ஒரு சட்டமன்றத் தொகுதியில் அதேபோன்று நான்கு மடங்கு வாக்குகளைத் திருடியிருக்கிறார்கள்''’என்று அனைத்தையும் பட்டவர்த்தனமாக்கினார்.
இதையெடுத்து கர்நாடக தேர்தல் ஆணையம், ராகுல் காந்தி உறுதிமொழியுடன் கடிதம் கொடுத்தால் இதனை விசாரிப்போம் என்றதுடன், கர்நாடக தேர்தல் தொடர்பாக புகார் கொடுக்கும் காலகட்டம் கடந்துவிட்டதாகவும் தெரிவித்திருக் கிறது. தேர்தல்ஆணையம் கொடுத்த ஆவணங்களின் துணை யுடன்தான் இந்த மோசடிகளை ராகுல் அம்பலப்படுத்தியிருக் கிறார். ஆனால் அதற்கே உறுதிமொழி கேட்பது விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது.