இந்த விவகாரத்தைக் கேட்கும்போதே குமட்டுகிறது. "இப்படியும் மனிதர்களா?' என்று அதிர்ச்சியில் இதயம் படபடக்கிறது.
மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர் 3 மாணவர்களுடன் உல்லாசமாக இருக்கும் ஆபாச வீடியோ ஒன்று கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் உலவி பகீரை ஏற்படுத்தியது. இது குறித்து மதுரை மாநகர காவல்துறைக்குத் தகவல் போக, மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில், கரிமேடு இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் விசாரணை தொடங்கியது. அவர் சைபர் கிரைம் போலீஸ் டீமின் உதவியோடு களமிறங்கினார். விசாரணையையும் கண்காணிப்பையும் தீவிரமாக்கினர்.
அப்போது, அந்த வில்லங்க வீடியோ திருப்பரங்குன்றம் பாலாஜி நகரைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவனின் செல் போனுக்கு வந்ததை போலீஸ் டீம் ஸ்மெல் செய்தது. அந்த மாணவனை அழைத்து வந்து, அந்த வீடியோவை அனுப்பியது யார்? என்று விசாரித்தனர். அப்போது அவன், அந்த வீடியோவை தனது மாமா வீரமணி அனுப்பியதாகத் தெரிவித்தான். இதைத் தொடர்ந்து தனக்கன்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த வீரமணியை போலீஸ் டீம் சுற்றி வளைத்தது.
வசமாக சிக்கிக்கொண்ட அந்த வீரமணியோ, “"அந்த வீடியோவை நான்தான் எடுத்தேன். அதில் இருக்கும் பெண் ராதிகா டீச்சர். அவரோடு லீலை புரிபவர்கள் பள்ளி மாணவர்கள்''” என்று அசால்டாகச் சொல்லித் திகைக்க வைத்தார். அவரது செல்போனில் ராதிகா டீச்சர், 50-க்கும் மேற்பட்டவர்களோடு தப்பான ஆட்டம் ஆடும் வீடியோ காட்சிகள் இருந்தன.
இதையொட்டி பெத்தானியாபுரத்தில் உள்ள தனது வீட்டில், டியூசன் எடுத்துக்கொண்டு இருந்த ராதிகா டீச்சரையும் மடக்கினர். இருவரும் விசாரணைக்குப் பின், சிறையில் அடைக்கப்பட்டனர்.
அந்த வில்லங்க வீரமணி போலீஸிடம் கொடுத்திருக்கும் வாக்குமூலத்தின் சில பகுதிகள்...
"ராதிகா டீச்சரை 2010-ல் ஒரு ரயில் பயணத்தின் போது சந்தித்தேன். அவர் மதுரை நெடுங்குளம் அருகே உள்ள பள்ளி ஒன்றில், ஓவிய ஆசிரியராக இருப்பதாகச் சொன்னார். அவருக்கு இரயிலில் பெர்த் கிடைக் காததால், கீழ் பெர்த்தில் படுத்திருந்த நான், என் படுக்கையைக் கொடுத்தேன். இருவரும் பேசிக் கொண்டே வந்தோம். செல் நம்பரையும் பரிமாறிக்கொண்டோம். காலப்போக்கில் வாட்ஸ்-ஆப்பில் பேசிய எங்கள் நட்பு, நெருக்கமாகிவிட்டது. இதைத் தொடர்ந்து அவர் வீட்டிற்கே அடிக்கடி சென்று காதலை வளர்த்தேன். காலப்போக்கில் நான் இல்லாமல் இருக்கமுடியாத அளவுக்கு அவர் ஆகிவிட்டார். அவருக்கு நான் அடிக்கடி அனுப்பிய ஆபாச வீடியோவுக்கும் அவர் அடிமை யாகிவிட்டார். அதே போன்ற வீடியோவை அனுப்பச் சொல்லி வற்புறுத்தினார். வீடியோவில் பார்த்த குரூப் செக்ஸை அவர் ஆர்வமாக ரசிக்க, அதை நிஜமாக்கலாம் என்று ஆசை வார்த்தை காட்டினேன். அதற்கு அவர் மாணவர்களையே தயார் செய்யச் சொன்னேன். அதேபோல் தன்னிடம் டியூசன் படிக்கும் இரண்டு மாணவர்களை அவர் வளைத்தார். அவர்களோடு சேர்ந்து உல்லாசம் அனுபவித்தோம். அப்போது எடுத்ததுதான் இந்த வீடியோ. இது மூன்று வருடத்திற்கு முன் எடுத்தது''’என்று சகலத்தையும் வாந்தி எடுத்திருக்கிறார்.
மேலும் தனது வாக்குமூலத்தில்... "ராதிகா இந்த விசயத்தில் வரம்பு மீறிப்போய் விட்டார். ஒரு கட்டத்தில் தன் மகனுக்கே கூல் டிரிங்ஸில் மதுவைக் கலந்து கொடுத்து, மயங்கிய அவனையும் தன் ஆசைக்குப் பயன்படுத்தி, அதை வீடியோவாகவும் எடுத்தார். இதைப் பார்த்து நானே மிரண்டு போய்விட்டேன். அதிலிருந்து அவரிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்துவிட்டேன்''’என்று ’ஹைவோல்ட்’ அதிர்ச்சித் தகவலையும் போகிற போக்கில் சொல்ல, வாயடைத்துப் போயிருக்கிறார்கள் விசாரணைக் காக்கிகள்.
இந்த நிலையில் அந்த டீச்சரிடம் டியூசன் படிக்கும் மாணவர்களையும் போலீஸ் டீம் விசாரித்தது. அவர்களில் சிலரும் டீச்சரின் வக்கிர நடத்தை குறித்துத் தயங்கித் தயங்கி சொல்லியிருக்கிறார்கள்.
இதுகுறித்து கரிமேடு காவல் ஆய்வாளர் சரவணகுமாரிடம் நாம் பேசியபோது, "ராதிகா டீச்சர் மற்றும் வீரமணியை போக்ஸோ சட்டத்தில் கைது செய்துள்ளோம். இவர்கள் இருவரிடமும் உள்ள லேப்டாப் மற்றும் செல்போனில் இருந்த 100-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை ஆய்வுசெய்து வருகிறோம். இவர்களுக்குப் பின்னால் வேறு எதாவது நெட் ஒர்க் உள்ளதா என்றும் விசாரித்து வரு கிறோம்''’என்றார் அக்கறையாக.
ஆன்ட்ராய்டு போன்கள் எவ்வளவு ஆபத்தான விசயத்துக்கெல் லாம் பயன்படுகின்றன என்பதற்கு, இந்த விவகாரமே சாட்சி.