மிழகத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமாக அரசு ஊழியர்கள் உள்ளனர். தங்களுக்கான பழைய பென்சன் திட்டத்தை தொடரவும், தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊதியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட கோரி முதலமைச்சரை சந்தித்து தங்களது கோரிக்கையை தெரிவிக்க சேப்பாக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அளவில் கூடினர்.

Advertisment

bb

பழைய பென்ஷன் திட்டத்தில் கிடைத்த பலன்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் இல்லை என்பதும், அத்துடன் அரசுக்கு கூடுதல் செலவாகிறது என்பதும் தொடர்ந்து அவர்களால் வலியுறுத்தப்படுவதை நக்கீரன் ஏற்கனவே விரிவாக எழுதியுள்ளது. புதிய பென்ஷன் திட்டத்தின்படி, அரசு ஊழியரின் ஜி.பி.எப். கணக்கில் சேரும் தொகையானது அரசு ஊழியர் ஓய்வு பெறும்போது 60 சதவிகிதம் திருப்பிக் கொடுக்கப்படும். மீதம் உள்ள 40 சதவிகிதத் தொகை, பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டு ஓய்வூதியமாக வழங்கப்படும். பென்ஷன் தொகை எவ்வளவு என்பதற்கும் உத்தரவாதம் கிடையாது.

Advertisment

பழைய பென்ஷன் திட்டமே தொடரும் என 2016-ல் ஜெ. கொடுத்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்பட வில்லை. புதிய பென்ஷன் திட்டத்தின் கீழ், ஈமச்சடங்குகளுக்கு கொடுக்கப்படும் 50 ஆயிரத்தையும் அரசிடம் பணமில்லை எனச் சொல்லி தராமல் இழுத்தடிக்கிறது அரசாங்கம். ஊழியர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தவில்லை. இதையடுத்துதான் முற்றுகைப் போராட்டத்தில் இறங்கினர். காவல்துறையின் தடுப்புக்களை தாண்டி தலைமைச்செயலகம் நோக்கி செல்ல முற்பட்டனர். அப்பொழுது உதவிஆணையர் சரவணன் தலைமையிலான காவல்துறையினர் தடியால் தாக்கினர். இதில் ஒரு பெண் உட்பட இருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.

இது தொடர்பாக பேசிய அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் அன்பரசு ""பழைய ஓய்வூதிய திட்டத்தை கேட்டதற்கு காவல்துறையை வைத்து அடிப்பது மோசமான செயல். மூச்சுக்கு முன்னூறு முறை அம்மா ஆட்சி என சொல்லும் இவர்களுக்கு, அந்தம்மாவின் 110 அறிவிப்பை நிறைவேற்றுவது மட்டும் மறந்து போனது எப்படி? அனைத்தையும் தனியார்மயமாக்குவதில் ஏன் முனைப்பு காட்டுகிறது. நிச்சயம் இதற்கான பதிலடியை வருகின்ற தேர்தலில் நாங்கள் கொடுப்போம்'' என்றார் ஆவேசமாக.

Advertisment

இந்நிலையில், மின்துறையில் நடந்த பணிநியமன விவகாரம் ஷாக்கடிக்க ஆரம்பித்திருக்கிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங்மேன் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி மின்வாரிய ஊழியர்கள் சென்னை க்ரீன்வேஸ் சாலையிலுள்ள முதல்வர் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தில் பிப்ரவரி 26 அன்று ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

oo

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ‘"கேங்மேன்' பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்று 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியானது. ஏற்கனவே மின்சார வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் ஊழியர்கள் பல ஆண்டுகளாக பணியாற்றிவரும் நிலையில், அவர்களை நிரந்தரம் செய்யாமல் தற்போது புதிதாக ‘"கேங்மேன்' பணியிடத்தை உருவாக்கித் தேர்ந்தெடுப்பது சரியான நடவடிக்கை இல்லை என உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கேங்மேன் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்புக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மின்சார வாரியம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு பிப்ரவரி 25-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையில் அரசுத் தரப்பில் அனைத்து விதிகளும் முழுமையாகப் பின் பற்றப்பட்டு, 70 சதவீத தேர்வு நடவடிக்கைகள் நிறை வடைந்துள்ளது. ""புதிதாக கேங்மேன் பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வுசெய்தாலும், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவரும் ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள். பணிநீக்கம் செய்யப்பட மாட்டார்கள்'' என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஐந்து ஆயிரம் கேங்மேன் பணியிடங்களை நிரப்புவதற்கு நீதிமன்றம் அனுமதித்தது.

ஆனால் அரசோ அதிரடியாக 10 ஆயிரம் பேருக்கு இரவோடு இரவாக பணி ஆணையை வழங்க, சிக்கல் எழுந்துள்ளது. நீதிமன்றத் தீர்ப்பைப் பயன்படுத்தி கேங்மேன் பணியில் தேர்வாகாதவர்களுக்கும் ஜீரோ மதிப்பெண் எடுத்தவர்களுக்கும் பணி வழங்கப்பட்டுள் ளது. சிவகங்கையைச் சேர்ந்த முனுசாமி 2 மதிப்பெண் எடுத்தவருக்கு பணி வழங்கப்பட்டிருக்க, ஜெ.பென்னில் 57 மதிப்பெண் எடுத்தவருக்கு வழங்கவில்லை, அதேபோல 0 மதிப்பெண் எடுத்த திருச்சியைச் சேர்ந்த இளஞ்செழியனுக்கு பணிவழங்கியுள்ளனர். இப்படி ஏகப்பட்ட குளறுபடிகள்.

ஒப்பந்த ஊழியர் சங்கத் தலைவர் ராஜேந்திரன், ""தவறான முறையில் பணத்தை பெற்றுக்கொண்டு தேர்ச்சி பெறாதவர்களை நியமனம் செய்துள்ளார்கள். இன்னும் வழக்கு நிலுவையில்தான் உள்ளது. நீதிமன்றம் சொன்னது 5000 தான் ஆனால் இவர்கள் 10 ஆயிரம் பேரை பணிநியமனம் செய்துள்ளார்கள். ஆட்சி முடிவதற்குள் அடிப்பதை அடித்துக்கொள்ளலாம்… மற்றவர் எப்படிப் போனால் என்ற நிலையில் செயல்பட்டுள் ளார்கள்''…எனக் கொந்தளித்தார்.

இதுதொடர்பாக மின்வாரிய அமைச்சர் தங்கமணியிடம் கேட்டபோது, ""நீதிமன்றத் தீர்ப்பை வைத்துதான் நாங்கள் பணி நியமனம் செய்துள்ளோம். தவறுகள் நடந்திருக்குமாயின் நடவடிக்கை எடுக்கப்படும்''’என்றார்.