ஸ்டெர்லைட் ஹைட்ரோ கார்பன் ஆயிரம் கோடியில் அழிவுத்திட்டம்!

ster

மூடப்பட்டிருக்கும் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனமும், ஹைட்ரோ கார்பன் திட்டமும் எத்தகைய சூழலிலும் விரைவில் செயல்படுத்தப்படும். அதற்கான பணிகள் முடுக்கி விடப் பட்டுள்ளன என்று தூத்துக்குடி மக்களின் நலனுக்கு எதிராக பகிரங்கமாக சவால்விட்டிருக்கிறார் ஸ்டெர்லைட் காப்பர், மால்கோ எனர்ஜி லிமிடெட் மற்றும் ஃபுஜாய்ரா கோல்டு நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அலுவலரான பங்கஜ்குமார். இதற்கான பட்ஜெட் ஆயிரம் கோடி ரூபாய் என்கிறது அவருக்கு நெருங்கிய வட்டாரம்.

தூத்துக்குடி மக்களின் உயிர்க்கொல்லியான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் கொந்தளித்துக் கிடக்கின்றனர். ஆயிரக்கணக்கான உயிர்கள் இறக்க காரணமான இந்த ஆலை மக்கள் போராட்டம் காரணமாக கடந்த ஒரு ஆண்டாக மூடிக்கிடக்கிறது. நீதிமன்றங்களே பலமுறை மூடியிருக்கின்றன. அதே நீதிமன்றங்களே ஆலையை திறக்கவும் உத்தரவிட்டுள்ளன. இந்நிலையில்தான் மூடப்பட்டுள்ள ஆலையை திறக்க ஆயிரம் கோடி ரூபாயை அள்ளிவீச திட்டமிட்டு களம் இறங்கியுள்ளன

மூடப்பட்டிருக்கும் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனமும், ஹைட்ரோ கார்பன் திட்டமும் எத்தகைய சூழலிலும் விரைவில் செயல்படுத்தப்படும். அதற்கான பணிகள் முடுக்கி விடப் பட்டுள்ளன என்று தூத்துக்குடி மக்களின் நலனுக்கு எதிராக பகிரங்கமாக சவால்விட்டிருக்கிறார் ஸ்டெர்லைட் காப்பர், மால்கோ எனர்ஜி லிமிடெட் மற்றும் ஃபுஜாய்ரா கோல்டு நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அலுவலரான பங்கஜ்குமார். இதற்கான பட்ஜெட் ஆயிரம் கோடி ரூபாய் என்கிறது அவருக்கு நெருங்கிய வட்டாரம்.

தூத்துக்குடி மக்களின் உயிர்க்கொல்லியான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் கொந்தளித்துக் கிடக்கின்றனர். ஆயிரக்கணக்கான உயிர்கள் இறக்க காரணமான இந்த ஆலை மக்கள் போராட்டம் காரணமாக கடந்த ஒரு ஆண்டாக மூடிக்கிடக்கிறது. நீதிமன்றங்களே பலமுறை மூடியிருக்கின்றன. அதே நீதிமன்றங்களே ஆலையை திறக்கவும் உத்தரவிட்டுள்ளன. இந்நிலையில்தான் மூடப்பட்டுள்ள ஆலையை திறக்க ஆயிரம் கோடி ரூபாயை அள்ளிவீச திட்டமிட்டு களம் இறங்கியுள்ளனர்.

sterlite

இதற்காக எட்டு ஆண்டுகளாக தலைமைச் செயல்அலுவலர் பணியில் இருந்த ராம்நாத்தை ஓரங்கட்டிவிட்டு மார்ச் மாதம் புதிய தலைமைச் செயல் அலுவலராக பங்கஜ்குமாரை நியமித்தது வேதாந்தா குழுமம். இவரும் வந்த வேகத்திலேயே வணிக சங்கங்கள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளின் குறிப்பிட்ட சில பிரதிநிதிகளையும், அரசியல் கட்சி பிரதிநிதிகளையும் சந்தித்தார். இதையடுத்து மக்கள் மீண்டும் அச்சத் தில் உறைந்துள்ளனர்.

ster

""மொத்தம் உள்ள 480 கிராமப்புற பகுதிகளையும் நான்காக பிரித்து பல்வேறு நலப்பணிகள், கல்விப்பணிகள், வேலைவாய்ப்பு, குடும்ப நல நிதி வழங்க ஏற்பாடு செய்வதோடு ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களை தனித்தனியாக காவல் நிலையம் வாரியாக கணக்கெடுத்து அவர்களை எப்படியாவது பணம் கொடுத்து சரிக்கட்டுவது அல்லது வழக்கு விசாரணை யென அலைக்கழிப்பது ஒரு திட்டம். அரசியல்வாதிகளை நேரடியாக சந்தித்து கட்சி களின் ஆண்டுச் செலவினங் களை ஏற்றுக்கொள்வதாக உறுதி அளிப்பது இன்னொரு திட்டம். கிறிஸ்தவ அமைப்பு களிடமும், வியாபாரி சங்கங் களிடமும் சரணடைந்து மாவட்ட எஸ்.பி. மூலம் அவர்களை தங்கள் வழிக்குக் கொண்டுவர பல ஏற்பாடுகள் ரகசியமாக திட்டமிடப்பட்டுள்ளன. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை ஸ்டெர் லைட் எதிர்ப்பாளர்களிடமிருந்து விலகி நிற்க வைக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படு கிறது. அதாவது, ஸ்டெர்லைட் ஆலையையும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும் நிறைவேற்ற ஆயிரக் கணக்கான கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது'' என்கிறார்கள்.

இதுகுறித்து ஆலை எதிர்ப்பு குழுவைச் சேர்ந்த முத்தையாபுரம் சந்தனராஜ்… ""ஸ்டெர் லைட் ஆலை மீதான மக்கள் கோபத்தை மடைமாற்ற நற்பணிகளை தொடங்குவது பங்கஜ்குமாரின் திட்டம். அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் உள்ள புதூர் பாண்டியாபுரத்தில் இருந்து புதியம்புத்தூர் வரை உள்ள சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்திற்கும், சாமிநத்தம் விலக்கில் இருந்து மீளவிட்டான் சிப்காட் பகுதி வரை சுமார் ஏழு கிலோமீட்டர் தூரத்திற்கும் சாலையின் இருபுறங்களிலும் அரசு நெடுஞ்சாலை ஊழியர்கள் உதவியோடு மரக்கன்றுகள் நடப்படுகிறது. அத்துடன், தாமிரா வித்யாலயா என்கிற பெயரில் கல்வி நிலையங்களும் தொடங்கப்பட்டுள்ளன. கோவில்களுக்கு கும்பாபிஷேக நன்கொடை களும் வாரியிறைக்கப்படுகின்றன. இந்தக் கண்துடைப்பு நாடகம் எங்கு கொண்டுபோய் முடியுமோ?''’என்கிறார்.

ster

சமீபத்தில் ஸ்டெர்லைட் ஆலையின் முத்துச்சரம் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.2.8 கோடி மதிப்பில் தாமிரா வித்தியாலயா தொடங்கப் பட்டது.

இதை தொடங்கிவைத்து பேசிய தலைமைச் செயல் அலுவலரான பங்கஜ்குமார்,…""கல்வி என்பது ஒவ்வொரு குழந்தையின் உரிமையாகும். நம் சமுதாயத்திற்கு அதை உறுதி செய்வதற்கான முனைப்பு நடவடிக்கைகளை ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் முன்னெடுக்கத் தயாராக இருக்கிறது. விரைவில் ஆலை திறக்கப்படும். அதுவும் உங்களது ஒத்துழைப்புடன்''’என்று கூறி, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்களுக்கு ஷாக் கொடுத்தார்.

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம், ஹைட்ரோகார்பன், எரிவாயு குழாய் பதிப்பு இவை மூன்றுக்கும் தொடர்பு உள்ளது. நீரியல் தொழிற் நுட்பத்தில் மூன்று மண்ட லங்களில் எடுக்கப்படும் ஹைட்ரோகார்பன் திட்ட மானது வேதாந்தாவிற்கு மரக்காணம் முதல் கடலூர் வரையும், பரங்கிப்பேட்டை முதல் வேளாங்கண்ணி வரையும் ஒதுக்கப்பட்டுள் ளது. மாற்று எரிசக்தி என பெயரிடப்பட்டு வேதாந்தா போன்ற பெரிய நிறுவனங் களின் பயன்பாட்டிற்கே இவ்வாறான மக்கள் விரோத திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இராம நாதபுரம் மறவன்கரிசல்குளம் கிராமத்தில் நூற்றி அறுபத்தி மூன்று கிலோமீட்டர் வரை ஸ்டெர்லைட், ஸ்பிக், டிசிடபிள்யூ போன்ற நிறுவனங்களுக்கு கொண்டு செல்ல, கடந்த 2017 ஜூன் மாதம் எரிவாயு குழாய் பதிப்பு திட்டம் வகுக்கப்பட்டு அந்த வேலைகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதுவும் விரைவில் திறக்கப்பட உள்ள ஸ்டெர்லைட் நிறுவனத்திற்குத்தான்'' என பகீர் தகவலை தருகிறார் சமூக செயற்பாட்டாளரான அக்ரி பரமசிவன்.

பங்கஜ்குமாரின் "தாஜா' பலிக்குமா...?

-நாகேந்திரன்

nkn110619
இதையும் படியுங்கள்
Subscribe