மறக்க முடியாத அந்தக் கொடூரத்திற்கான மூன்றாமாண்டு நினைவேந்தல், மே 22.
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது அன்றைய அ.தி.மு.க அரசின் போலீஸ், குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தி உயிரைப் பறித்த கொடூரம் அரங்கேறிய நாள்.
துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்த, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் கமிஷனை அமைத்தது. 2018 ஜூன் 4 அன்று விசாரணையை துவங்கிய ஒரு நபர் கமிஷனுக்கான கால அவகாசம் ஒவ்வொரு கட்டமாக 2020 பிப்ரவரி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மே 14 அன்று தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பந்தமாக தனது 35 பக்க இடைக்கால அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்துள்ளார் ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் தலைவரான அருணா ஜெகதீசன்.
"1,126 ஆவணங்களை வகைப்படுத்தியும், ஏறக்குறைய 1,052 பேருக்கு சம்மன் அனுப்பிய
மறக்க முடியாத அந்தக் கொடூரத்திற்கான மூன்றாமாண்டு நினைவேந்தல், மே 22.
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது அன்றைய அ.தி.மு.க அரசின் போலீஸ், குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தி உயிரைப் பறித்த கொடூரம் அரங்கேறிய நாள்.
துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்த, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் கமிஷனை அமைத்தது. 2018 ஜூன் 4 அன்று விசாரணையை துவங்கிய ஒரு நபர் கமிஷனுக்கான கால அவகாசம் ஒவ்வொரு கட்டமாக 2020 பிப்ரவரி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மே 14 அன்று தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பந்தமாக தனது 35 பக்க இடைக்கால அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்துள்ளார் ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் தலைவரான அருணா ஜெகதீசன்.
"1,126 ஆவணங்களை வகைப்படுத்தியும், ஏறக்குறைய 1,052 பேருக்கு சம்மன் அனுப்பியும் விசாரணை செய்யப்பட்ட ஒரு நபர் கமிஷன் விசாரணையின் இடைக்கால அறிக்கை 2019-ம் ஆண்டே தயாராகிவிட்டது. அப்போதைய முதலமைச்சரிடம் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென்று பல தடவை முயற்சித்தும் ஏதோ சில காரணங்களால் தவிர்த்து வந்தது எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு, ஆட்சி மாறியதும், அறிக்கையை சமர்ப்பிக்க அப்பாயிண்ட்மென்ட் கேட்க, உடனடியாக நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கையை சமர்ப்பித் துள்ளனர் விசாரணை ஆணையத்தினர்.' என்கின்றனர் தலைமை செயலக அதிகாரிகள். உளவுத்துறை அதிகாரி ஒருவரோ, "இடைக்கால அறிக்கை அரசிற்கு மூன்றுவிதமான பரிந்துரைகளை முன் வைத்துள்ளது. காவல்துறை போட்ட வழக்குகளினால் ஏறக்குறைய 400 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துமீறல் தெளிவாகியுள்ள தால் இவர்கள் மீது போடப் பட்ட 244 வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும். அத்து டன் வழக்கில் சேர்க்கப்பட்ட அனைவரின் மீதும் காவல் துறையால் எவ்வித வழக்குகளும் இல்லை என்கின்ற நோ அப்ஷக்ஷன் சர்டிபிகேட்டை தருதல் வேண்டும். ஒன்றரை லட்ச ரூபாய் அளவில் அனைவருக்கும் இழப்பீட்டுத் தொகை தரப்படல் வேண்டும்' என்பன உள்ளிட்ட பரிந்துரை களை கொடுத்துள்ளது ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை கமிஷன். இப்பரிந்துரைகளை ஏற்று அதற்கான அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடவிருக்கிறார் என்கிற நம்பிக்கை வார்த்தைகள் கோட்டையிலிருந்து வெளிப்படுகின்றன. இது முதல்வரின் அடுத்த சிக்ஸர்'' என்கின்றார் அவர்.
மூத்த வழக்கறிஞர் சந்திரசேகர் தூத்துக்குடி பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற தலைமை நீதிபதி பகவதி அம்மாளிடம் அளித்த மனு மீதான உத்தரவும் கவனத்திற்குரியது. சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின்.
சட்டமன்றத் தேர்தலின்போது உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்வில் கோவில்பட்டியில், "ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி துப்பாக்கிச்சூடு நடந்தது. 13 பேரை சுட்டுக் கொன்றது இந்த ஆட்சி. அது ஒரு கருப்பு நாள். நாம் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு அதற்கு உரிய நடவடிக்கை எடுப்போம். அது மட்டுமின்றி போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகள் எல்லாம் நாம் ஆட்சிக்கு வந்த அடுத்த நாள் ரத்து செய்வோம்'' என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவனோ, "ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய பி.ஜே.பி. மற்றும் முந்தைய அ.தி.மு.க. அரசுகள் சாதகமான நிலைப்பாட்டை கொண்டு செயல்பட்டுவந்த நிலையில்... அதற்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என தனது தேர்தல் களத்தில் தி.மு.க. வெளிப்படையாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழலில் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, தமிழக மக்களின் எண்ண ஓட்டங்களைச் சரியாக உணர்ந்து இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுப்பது தூத்துக்குடி மக்கள் மத்தியில் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது'' என்றார்.
நோய்த்தன்மையைப் பரப்பி, சுற்றுச்சூழலை சீரழிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுகிற அளவுக்கு அரசுத் தரப்பில் கொள்கை முடிவு எடுக்கப்பட வேண் டியதன் அவசியத்தை எதிர்க்கட்சியாக இருந்தபோது வலியுறுத்தியவர் மு.க.ஸ்டாலின். தற்போது கொரோனா பேரிடர் காலத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் திறக்கப்பட்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை, "தமிழகத்திற்குப் போதிய ஆக்சிஜன் மற்ற வழிகளில் கிடைத்தவுடன் மூடி சீல்வைக்கும் நடவடிக்கையில் மு.க.ஸ்டாலின் அரசு உறுதியாக இருக்க வேண்டும்' என்பதே தூத்துக்குடிவாசிகளின் எதிர்பார்ப்பு.
படங்கள்: விவேக்