மீண்டும் உயிர்ப்பலி கேட்கும் ஸ்டெர்லைட்! -ஏவல் துறையான காவல்துறை!

t

ன்னெழுச்சிப் போராட்டம், துப்பாக்கிச் சூடு சம்பவம், பதிமூன்று உயிர் பலிக் கொடூரம் இவற்றிற்குப் பிறகு மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை, ஆக்சிஜனை காரணம் காட்டி கதவு திறப்பதை போராட்டக்காரர்களும் பொதுமக்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களின் போராட்ட உணர்வை வேவு பார்க்கும் உளவுத்துறையின் குறிப்புகள் சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யின் பார்வைக்கு சென்று கொண்டிருக்கின்றன.

ststerlite

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., ஐ.ஜி., டி.ஐ.ஜி. மற்றும் எஸ்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்ட கூட்டத்தில் ஆலைக்கு எதிரான போராட்டக்காரர்களை கையாளும் விதம் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

"ஸ்டெர்லைட்டிற்கு எதிரான போராட்டங்களை இயக்கும் இயக்கங்கள், அமைப்புக்கள் பற்றி எங்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனால் மதரீதியான தலைவர்கள் பின்னால் சென்றுவிடக்கூடாது என்பதில் தீவிரமாக இருக்கின்றோம். ஸ்

ன்னெழுச்சிப் போராட்டம், துப்பாக்கிச் சூடு சம்பவம், பதிமூன்று உயிர் பலிக் கொடூரம் இவற்றிற்குப் பிறகு மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை, ஆக்சிஜனை காரணம் காட்டி கதவு திறப்பதை போராட்டக்காரர்களும் பொதுமக்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களின் போராட்ட உணர்வை வேவு பார்க்கும் உளவுத்துறையின் குறிப்புகள் சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யின் பார்வைக்கு சென்று கொண்டிருக்கின்றன.

ststerlite

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., ஐ.ஜி., டி.ஐ.ஜி. மற்றும் எஸ்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்ட கூட்டத்தில் ஆலைக்கு எதிரான போராட்டக்காரர்களை கையாளும் விதம் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

"ஸ்டெர்லைட்டிற்கு எதிரான போராட்டங்களை இயக்கும் இயக்கங்கள், அமைப்புக்கள் பற்றி எங்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனால் மதரீதியான தலைவர்கள் பின்னால் சென்றுவிடக்கூடாது என்பதில் தீவிரமாக இருக்கின்றோம். ஸ்டெர்லைட்டிற்கு எதிராக தூத்துக்குடி மட்டுமல்ல தமிழகத்தில் எந்தவொரு இடத்திலும் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதிக் காது என்பதை திட்டவட்ட மாக கூறிவிட முடியும். மாவட்ட காவல்துறை அடை யாளம் கண்டிருக்கும் 2000 பேர் மீதான அடக்குமுறை களும் விசாரணை அழைப்பு களும் இனி தொடருமென்று தெரிகிறது.

ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி ஆயிரம் போலீசாரும், பாதுகாப்பு பணி எனும் பெயரில் போராட்டக்காரர்கள் இருக்கும் தெருவிற்கு இரண்டு காவலர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக துண்டறிக்கை அச் சிடக்கூடாதென அச்சகத்தின ரை மிரட்டி கையெழுத்து வாங்குவதும், போராட்டக் காரர்களுக்கு அழைப்பாணை கொடுத்து காவல் நிலையத்தில் வைத்து மிரட்டி எழுதி வாங்குவதும் ஆலோசிக்கப் பட்டு உள்ளது" என்கிறார் மாவட்ட காவல்துறை உளவு அதிகாரி ஒருவர்.

ster

ஆலைக்கு எதிராக வீராங்கனை அமைப்பு, வணிகர் சங்கம், துறைமுக லாரி டிரைவர்கள் சங்கம், மக்கள் அதிகாரம் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்ட கூட்டம் திங்களன்று இரவு விக்டோரியா சாலையில் பாத்திமா பாபு தலைமையில் நடைபெற்றது. பின்னர் அனைவரும் மாவட்ட ஆட்சியரை சந்திக்க சென்றனர். ஆட்சியர் மற்றும் எஸ்.பி.யுடன் இரவு 9.30க்கு தொடங்கிய கூட்டத்தில், "அந்த ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக் கட்டும். தவறில்லை. ஆனால் ஸ்டெர்லைட் பெயரில் அந்த ஆலையால் தயாரிக்கக் கூடாது என்பதே எங்க ளுடைய கோரிக்கை" என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டாலும், "புதிய மாநில அரசுகள் உத்தரவைப் பின்பற்றுவதே எங்களுடைய கடமை"எனக் கூறி வழியனுப்பி வைத்தனர் எஸ்.பி.யும் மாவட்ட ஆட்சியரும்.

ஆலைக்கு எதிராக போராடி வரும் அக்ரி பரமசிவனோ, "ஸ்டெர்லைட் ஆலை திறப்பு என்பது தமிழக அரசின் உச்சபட்ச நாடகமாக பார்க்கப்படுகிறது. ஆக்ஸிஜன் பயன்பாட்டிற்காக நான்கு மாதங்கள் அனுமதிக்கப்படும் என கூறும் தமிழக அரசு இதில் கால நீட்டிப்பு செய்யப்படலாம் என்பதையும் குறிப்பிட்டுள்ளது. இதனை போன்று தான் துப்பாக்கிச் சூட்டிற்கு பின்பு அமைக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை ஆணையம் மூன்று மாதத்திற்குள் விசாரணைகளை முடித்து அறிக்கையை தாக்கல் செய்யும் என தெரிவித்த நிலையில் தற்போது நான்கு முறை கால நீட்டிப்பு செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகிறது. எனவே தமிழக அரசு அறிவித்துள்ள நான்கு மாத ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும்தான் என்பதைத் தாண்டி தொடர்ந்து காப்பர் உற்பத்தியும் இருக்கும் என சொல்லாமல் சொல்கிறது தமிழக அரசு.

ster

இனி தூத்துக் குடியில் ஒவ்வொரு நாளும் காவல் துறையினரின் அடக்குமுறைகள் அரங்கேறிக் கொண்டேயிருக்கும் குறிப்பாக ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மீது சமூக வலைதள பயன்பாட்டிற்கான பொய் வழக்குகள் தொடங்கி நீதிமன்ற வழக்கு, காவல் நிலைய அலைக்கழிப்பு, குண்டர் தடுப்புச் சட்டம் என வரிசைகட்டி நிற்கும்" என்கிறார் அவர்.

"ஸ்ரீற்ர் லைசன்ஸ் எனப்படும் ஈர்ய்ஸ்ரீங்ழ்ய் ற்ர் ர்ல்ங்ழ்ஹற்ங் அனுமதி நிறுத்தப்பட்டதால்தான் தற்போது ஆலை மூடப்பட்டு உள்ளது. அந்த ஆலையின் ஆக்ஸிஜன் பிளாண்ட் பகுதிக்கு மட்டும் இனி அரசு தனியாக கொடுக்குமா இல்லை ஒட்டு மொத்த ஈர்ல்ல்ங்ழ் கம்பெனிக்கும் கொடுக்குமா? உற்பத்தி செய்த ஆக்ஸிஜனை கொள்கலன்களில் எடுத்து செல்ல கையாள ஸ்டெர்லைட் ஆலையில் வசதி இல்லாத போது எப்படி உற்பத்தி செய்ய முடியும்?" என்கிறார் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் குணசீலன்.

இதே வேளையில், போராட்டக்காரர் கள் அடுத்த கட்ட நகர்வு ஆலைக்கு அருகி லுள்ள கிராமங்களைத் தாண்டி, தொலை தூர கிராமங்களிலும் முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பாக தடியடியில் காயமுற்று பலமாத சிகிச்சைக்கு பின் இறந்தவரின் கீழமுடிமண் கிராமத்தை போராட்டத்தின் துவக்கமாக்கி மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை முற்றுகைப் போராட்டத்தில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படங்கள் : விவேக்

nkn010521
இதையும் படியுங்கள்
Subscribe