அடி மாறி விழுந்திருச்சு.. ராஜேந்திரபாலாஜி Vs மாபா பாண்டியராஜன்!

ss

சென்னையிலிருந்து கிளம்பி வந்து, விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் விருதுநகரில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக் கூட்ட மேடையில் இடம் பிடித்தார், அ.தி.மு.க. கொள்கைபரப்பு துணைச் செயலாளரான மாபா பாண்டியராஜன். அந்த மேடையில்தான் தனக்கு சால்வை அணிவிக்க வந்த எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் நந்தகுமார் கன்னத்தில் அறைவிட்டு பாண்டியராஜ னுக்கு கிலி ஏற்படுத்தினார் ராஜேந்திர பாலாஜி. அடுத்து சிவகாசியில் நடந்த பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திலும், "நான் என்றைக்கும் ஒரே கட்சி. என் உடம்புல ஓடுறது அ.தி.மு.க. ரத்தம். உன் உடம்புல என்ன ரத்தம் ஓடுது. பல கட்சிக்கு மாறியவன் நீ. மொதல்ல காங்கிரஸ், அடுத்து த.மா.கா., அப்புறம் பா.ஜ.க., அடுத்து தே.மு.தி.க., அடுத்து அ.தி.மு.க., அப்புறம் ஓ.பி.எஸ்., இப்ப திரும்பவும் அ.தி.மு.க. உனக்கு வெட்கமா இல்ல? என்னை குறுநில மன்னன் என் கிறாய். ஆமா... அ.தி.மு.க.வை எதிர்க்கிற தி.மு.க. வுக்கு எதிரான குறுநில மன்னன். என் பின்னால் உண்மையான அ.தி.மு.க. விசுவாசிகள் வாளேந்தி வர்றாங்க. நான் தெய்வமாய் மதிக்கும் ஜெய லலிதாவை நீ அவதூறா பேசிய வீடியோ என் கிட்ட இருக்க

சென்னையிலிருந்து கிளம்பி வந்து, விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் விருதுநகரில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக் கூட்ட மேடையில் இடம் பிடித்தார், அ.தி.மு.க. கொள்கைபரப்பு துணைச் செயலாளரான மாபா பாண்டியராஜன். அந்த மேடையில்தான் தனக்கு சால்வை அணிவிக்க வந்த எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் நந்தகுமார் கன்னத்தில் அறைவிட்டு பாண்டியராஜ னுக்கு கிலி ஏற்படுத்தினார் ராஜேந்திர பாலாஜி. அடுத்து சிவகாசியில் நடந்த பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திலும், "நான் என்றைக்கும் ஒரே கட்சி. என் உடம்புல ஓடுறது அ.தி.மு.க. ரத்தம். உன் உடம்புல என்ன ரத்தம் ஓடுது. பல கட்சிக்கு மாறியவன் நீ. மொதல்ல காங்கிரஸ், அடுத்து த.மா.கா., அப்புறம் பா.ஜ.க., அடுத்து தே.மு.தி.க., அடுத்து அ.தி.மு.க., அப்புறம் ஓ.பி.எஸ்., இப்ப திரும்பவும் அ.தி.மு.க. உனக்கு வெட்கமா இல்ல? என்னை குறுநில மன்னன் என் கிறாய். ஆமா... அ.தி.மு.க.வை எதிர்க்கிற தி.மு.க. வுக்கு எதிரான குறுநில மன்னன். என் பின்னால் உண்மையான அ.தி.மு.க. விசுவாசிகள் வாளேந்தி வர்றாங்க. நான் தெய்வமாய் மதிக்கும் ஜெய லலிதாவை நீ அவதூறா பேசிய வீடியோ என் கிட்ட இருக்கு. உனக்கு சால்வை போடும்போது வேடிக்கை பார்க்க நான் என்ன கிறுக்கனா? உன்ன தொலைச்சுப்புடுவேன்''’என்று மாபா பாண்டிய ராஜனுக்குக் கடுமையாக டோஸ் விட்டார்.

ss

"மேடையில் கட்சி நிர்வாகியை அடிப்பது, முன்னாள் அமைச்சர் பாண்டியராஜனை ஒருமையில் திட்டுவது எல்லாம் அரசியல் அநாகரிகம் அல்லவா?'’ என்ற கேள்வியுடன் ராஜேந்திரபாலாஜியைத் தொடர்புகொள்ள முயற்சித்தோம். தொடர்ந்து லைனுக்கு வராத நிலையில்... அவருடைய நட்பு வட்டத்திலுள்ள ஒருவரிடம் பேசினோம்.

"மாபா பாண்டியராஜன் விஜய் கட்சில பேச்சுவார்த்தை நடத்துறது எல்லாருக்கும் தெரியும். முன்னால பா.ஜ.க.வுல இருந்தவரோட பையன் இப்ப, த.வெ.க. கட்சில மாவட்ட செயலாளரா இருக்காரு. சென்னைல ஓபனாவே அவர கூப்பிட்டு வச்சு பேசிருக்காரு. இந்த விஷயம் எங்க கட்சித் தலைமை வரைக்கும் போயிருச்சு. இ.பி.எஸ். எரிச்சலாகி, "போறதுன்னா போகட்டும்'னு சொல்லிட்டாரு. அ.தி.மு.க. எதிர்க்கட்சியா இருக்கிற இந்த 4 வருஷத்துல 20 தடவைக்கு மேல ஆர்ப்பாட்டம் நடத்திருக்கோம். அஞ்சாறு தடவ அரெஸ்ட்டாகி மண்டபத்துல அடைச்சாங்க. பாண்டியராஜன் எந்த ஆர்ப்பாட்டத்துக்கும் வரல. இப்ப நான்தான் மாவட்டச் செயலாளர்னு சொல்லிட்டு திரியுறாரு. கட்சிக்காரன் எப்படி ஏத்துக்குவான்? அந்த மேடைல அண்ணன், ஒருத்தர கை நீட்டுற அளவுக்கு ஒரு அசிங்கத்த பண்ணிட்டாரு பாண்டியராஜன். ஒருத்தர செட்பண்ணி நெறய சால்வை வாங்கி வச்சிருந் தாங்க. ஒவ்வொரு ஆளா கூப்பிட்டு அவரு கையில சால்வைய கொடுத்து அத பாண்டியராஜனுக்கு போடச்சொல்லி அவரு கால்ல விழ வச்சாங்க. கைலி கட்னவங்க பத்துபேரு கையில ஐநூற வாங்கிட்டு பாண்டியராஜனுக்கு சால்வை போட்டு கால்ல விழுந்தாங்க. இது கே.டி.ஆர். அண்ணன் ஏற்பாடு பண்ணுன கூட்டம். கொடி நட்டுனது, பெர்மிஷன் வாங்குனது, கட்சித் தொண்டர்களைச் சேர்த்தது எல்லாமே நாங்க. இவரு அலுங்காம குலுங்காம வந்து, செட்டப் பண்ணி சால்வை போடச் சொல்லி, கால்ல விழவச்சு சீன் போட்டாருன்னா கோபம் வருமா... வராதா? நியாயமா பார்த்தா பாண்டிய ராஜனை அடிச்சிருக்கணும். அவருக்கு நல்லநேரம்... அடி மாறி விழுந்திருச்சு, தப்பிச்சிட்டாரு.

இப்ப பாருங்க.. நாலஞ்சு பேரை தூண்டி விட்டு, அ.தி.மு.க.வுக்கு எதிரா நாடார் சமுதாயம் கொந்தளிக்கிற மாதிரி, சோசியல் மீடியாவுல போஸ்ட் போட்டு, சாதி அடையாளத்தை ஒரு கேடயமா பயன்படுத்துறாரு. நாங்க கேட்கிறோம்? மந்திரியா இருந்தப்ப.. பாண்டியராஜன் நாடார் சமுதாயத்துக்கு என்ன பண்ணுனாரு? நாடார் சமுதாய முக்கிய பிரமுகர்கள் குளோபல் முரளி அண்ணாச்சிகிட்ட கே.டி.ஆரை பத்தி கேளுங்க. கரிக்கோல்ராஜ் அண்ணாச்சிகிட்ட கேளுங்க. அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை சுதாகர் அண்ணாச்சிகிட்ட கேளுங்க. ஒரு தடவை விருதுநகர் நாடார் ஸ்கூல் பெர்மிஷனுக்கு பாண்டியராஜன்கிட்ட போயி நின்னாங்க. 40 லட்சம் செலவாகும்னு கேட்டாரு. அப்புறம் கே.டி.ஆர்.தான் ஒரு பைசா செலவு இல்லாம ஜெயலலிதாகிட்ட பேசி பெர்மிஷன் வாங்கிக் கொடுத்தாரு. சென்னை, பெரியமேட்டுல விருது நகர் நாடார் மேன்சன் இருக்குல்ல. அதுல ஒரு பில்டிங்க கே.டி.ஆர்.தான் திறந்துவச்சாரு. பேருகூட கல்வெட்டுல இருக்கு. அப்பவும் பாண்டியராஜன் மந்திரியா இருந்தாரு. ஏன் கூப்பிடல? உலக மகா கஞ்சன் பாண்டியராஜன். கே.டி.ஆர். அதுக்கு நேர்மாறா அள்ளிக் கொடுக்கிறவரு. கட்சில உழைச்சு மேல வராம, குறுக்கு வழில வந்தா எப்படி ஒத்துக்குவாங்க? கேப்டனுக்கு பண்ணுன துரோகத்துக்கு அவரோட ஆன்மா ஒருபோதும் பாண்டியராஜனை மன்னிக்காது. பாண்டிய ராஜன் வீட்டுக்காரம்மா, தி.மு.க. முக்கிய புள்ளிக்கு கணக்குப்பிள்ளையா இருக்காங்க. எல்லா பக்கமும் துண்டு போடுறவர் பாண்டிய ராஜன்''’என்று ஓங்கிப் பேசினார்.

மாபா பாண்டியராஜனைத் தொடர்பு கொண்டோம். "நான் இதுல எதுவும் கருத்துச் சொல்லுற மாதிரியில்ல''’என்றார். ஆனாலும் அவர் தரப்பில் ஒருவரிடம் பேச முடிந்தது. “"ராஜேந்திரபாலாஜியை குறுநில மன்னர்னு சார் பேட்டியெல்லாம் கொடுக்கல. ஒருத்தர்கிட்ட ஃப்ரண்ட்லியா பேசுனத ஃபேஸ்புக்ல போட்டுட்டாங்க. அது இந்த அளவுக்கு தவறான புரிதலை ஏற்படுத்திருச்சு. சாரோட கம்பெனில அம்பதாயிரம் பேருக்கு மேல வேலை பார்க்கிறாங்க. யாரையுமே இழிவா பேசி அவருக்கு பழக்கம் இல்ல. மேடைல செட்டப் பண்ணி சால்வை போட வச்சதா தப்பா சொல்லுறாங்க. காங்கிரஸ்ல, த.மா.கா.வுல சார் இருந்ததா சொல்லுறது எல்லாம் பொய். விருதுநகர்ல இருந்து சாரை ஆவடிக்கு போகவச்சது கே.டி.ஆர்.தான். இப்பவும் விருதுநகர் தொகுதில நிற்கணும்கிற ஆர்வம் சாருக்கு நெறய இருக்கு. ஆவடில தோத்ததும் விருதுநகர் பக்கம் போயி அரசியல் பண்ணச் சொன்னாரு இ.பி.எஸ். கே.டி.ஆர். மனசுல ஏதோ தவறான புரிதல் இருக்கு. அதை எப்படி சரி பண்ணுறதுன்னு தெரியல''’என்றார்.

எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து மாபா பாண்டியராஜன் முறையிட்டபோது, "நீங்க அமைதியா இருங்க... மீடியால எதுவும் பேசாதீங்க''’என்று அறிவுறுத்தப்பட்டதாம்.

nkn120325
இதையும் படியுங்கள்
Subscribe