புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்பட நகரைச் சுற்றி பல இடங்களில் அடிக்கடி பைக் திருட்டுகள் அதிகமாக நடந்தது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்தவர்களைப் பார்க்க வரும் உறவினர்களின் பல பைக்குகள் காணாமல்போக, ஏராளமான பைக் திருட்டுப் புகார்கள் குவிந்தன. கணேஷ் நகர் காவல் நிலையத்தில் மட்டும் அடுத்தடுத்து 4 புகார்கள் பதிவானது.
இந்நிலையில் புதுக்கோட்டை நகரைச் சுற்றி தொடர்ந்து பைக்குகள் திருடப்படுவதைக் கண்டறிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவின் பேரில் புதுக் கோட்டை டி.எஸ்.பி. பிருந்தா மேற்பார்வையில் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மாரிமுத்து, சேதுராமன், காவலர்கள் மணிகண்டன், ரகுநாதன் உள்ளிட்ட போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், ஆங்காங்கே திருட்டு நடந்த பல்வேறு இடங்களிலுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வுசெய்து, அதில் காணாமல் போன பைக்குகளில் செல்லும் நபர்களை அடையாளம் கண்டதோடு, அவர்கள் ஏற்கனவே வழிப்ப
புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்பட நகரைச் சுற்றி பல இடங்களில் அடிக்கடி பைக் திருட்டுகள் அதிகமாக நடந்தது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்தவர்களைப் பார்க்க வரும் உறவினர்களின் பல பைக்குகள் காணாமல்போக, ஏராளமான பைக் திருட்டுப் புகார்கள் குவிந்தன. கணேஷ் நகர் காவல் நிலையத்தில் மட்டும் அடுத்தடுத்து 4 புகார்கள் பதிவானது.
இந்நிலையில் புதுக்கோட்டை நகரைச் சுற்றி தொடர்ந்து பைக்குகள் திருடப்படுவதைக் கண்டறிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவின் பேரில் புதுக் கோட்டை டி.எஸ்.பி. பிருந்தா மேற்பார்வையில் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மாரிமுத்து, சேதுராமன், காவலர்கள் மணிகண்டன், ரகுநாதன் உள்ளிட்ட போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், ஆங்காங்கே திருட்டு நடந்த பல்வேறு இடங்களிலுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வுசெய்து, அதில் காணாமல் போன பைக்குகளில் செல்லும் நபர்களை அடையாளம் கண்டதோடு, அவர்கள் ஏற்கனவே வழிப்பறி வழக்குகளில் கைதானவர்கள் என்பதைக் கண்டறிந்தனர்.
அடையாளம் காணப்பட்ட புதுக் கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகிலுள்ள முள்ளூர் ராசாப்பட்டி சுப்பிரமணி மகன் சுள்ளான் (எ) விக்ரம், புத்தாம்பூர் குறிச்சிப்பட்டி பழனிச்சாமி மகன் முத்துமணிப் பாண்டி (20) ஆகிய இருவரை கைதுசெய்து விசாரணை செய்தபோது இவர்களுடன் சேர்ந்து பைக் திருட்டில் ஈடுபட்ட ஏற்கனவே மற்றொரு வழக்கில் கைதாகியுள்ள ராசாப்பட்டி மேலத்தெரு முத்துக்குமார் மகன் தயாநிதி (20) ஆகிய 3 பேர் மீதும் கணேஷ் நகர் காவல் உதவி ஆய்வாளர் சங்கீதா வழக்குப் பதிவுசெய்து அவர்களிடமிருந்து 15 திருட்டு பைக்குகளை மீட்டுள்ளார்.
தொடர்ந்து நடந்த விசாரணையில், ஏற்கனவே மருத்துவக்கல்லூரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் தனியாகச் செல்லும் நபர்களைத் தாக்கி பணம், பைக்குகளை பறித்துச்சென்றது, துணைக்கோல் நகரப் பகுதியில் ஒதுங்கும் நபர்களை தாக்கி பணம்பறித்தது போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. "நாங்க எல்லாரும் சின்ன வயசிலேயே போதை ஊசி, மாத்திரைக்கு அடிமையாகிட்டோம். அதை விட்டுட்டு இருக்கமுடியாது. எப்படியாவது ஊசி போட்டுக்கணும். இல்லன்னா கிறுக்குப்புடிச்ச மாதிரி ஆகிடும். புதுக்கோட்டை நகரில் நாங்க எல்லாரும் ஒரு இடத்தில்தான் போதைக்காக ஊசி, மாத்திரை வாங்குவோம். அதில் எங்களுக்குள்ள பழக்கம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் ஊசி வாங்க பணமில்லை என்றபோது மெடிக்கல் காலேஜ் பகுதியில் தனியா வரும் நபர்களை தாக்கி பணம்பறிச்சு ஊசி வாங்குவோம்.
அதேபோல, மெடிக்கல் காலேஜ்ல பேஷண்டுகளைப் பார்க்கவரும் உறவினர்கள் எந்த பாதுகாப்புமில்லாத இடத்தில்தான் பைக்குகளை நிறுத்துவர். அந்தப் பக்கம் போய் கொஞ்சநேரம் நின்னு நோட்டம்விட்டு சைடு லாக் உடைத்து பைக்கை எடுத்துட்டுப் போய் மெடிக்கல் காலேஜ் பக்கத்திலுள்ள காட்டுப்பகுதியில் வைத்து நம்பர் பிளேட்களை கழற்றிப் போட்டுவிட்டு சேஸ், எஞ்சின் நம்பர்களை அழித்துவிட்டு புதுக் கோட்டை டவுனில் ஒருத்தரிடம் ரூ.3000 முதல் 5000 ரூபாய் வரை வித்துடுவோம். அந்தப் பணத்தில் பிரியாணி சாப்பிட்டு போதை ஊசி, மாத்திரை களை வாங்கி வந்துடுவோம். அந்த போதையிலேயே திருடப்போவோம். போதை தெளிஞ்சதும் தூக்கம்வராது. அதுக்கு சில மாத்திரைகளை வாங்கிப்போடுவோம்'' என்று கூறி போலீசாரை கிறுகிறுக்க வைத்துள்ளனர்.
இதையடுத்து போலீசார் அந்த போதை ஊசிக் கும்பலை பிடிக்க முயன்றுவருகின்றனர். “"ஏற்கனவே திருக்கோகர்ணம் காவல் நிலையத்தில் பலமுறை அந்த நபர்களை பிடித்திருக் கிறோம். ஆனால் இன்னும் அவர்கள் அடங்கவில்லை. விரைவில் அந்தக் கும்பலை பிடித்துவிடுவோம்'' என்ற போலீசார், "போதைக்கென்று தனி மாத்திரை, மருந்துகள் இல்லை. வலிக்கும், பெண்கள் பிரசவத்தின்போது பயன்படுத்தும் சில மாத்திரை, ஊசிகளைத்தான் இவர்கள் போதை ஊசி என்கிறார்கள். 10 ரூபாய் மதிப்புள்ள மாத்திரை மருந்துகளை ஆயிரக்கணக் கில் விற்கிறார்கள். பள்ளியில் படிக்கும்போதே இதுபோன்ற மாணவர்களை இந்த போதை ஊசி விற்பனை கும்பல் வசப்படுத்திவிடுகிறது. பெற்றோர் தங்கள் குழந்தைகளின் நடத்தைகளில் மாற்றம் தெரிந்தால் கண்காணித்து உடனுக்குடன் திருத்தவேண்டும், நீண்டநாள் பழக்கத்திலுள்ள வர்கள் என்றால் உரிய மருத்துவர்களிடம் அழைத்துச்சென்று சிகிச்சை கொடுக்க வேண்டும்''’என் கின்றனர்.
_____________
கருவைக் காட்டுக்குள் போதை ஊசி!
புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தனது உறவினரை சிகிச்சைக்காக அழைத்துச்சென்று சில நாட்கள் தங்கியிருந்தபோது பார்த்ததை நம்மிடம் ஒருவர் பகிர்ந்துகொண்டார். "மெடிக்கல் காலேஜுக்கு வடக்குப் பக்கமுள்ள சீமைக் கருவேலங்காட்டுப் பக்கம் ஒதுங்கப் போனப்ப, 15, 20 வயசுப் பசங்க நிறைய பேர் பைக்குகளில் வந்தார்கள். அங்கே ஒருத்தன் கருப்பு பேக் வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். வந்த சிறுவர்கள் அவனிடம் போய் ரூ.50, 100 பணம் கொடுக்க, அந்தப் பணத்தை வாங்கி பேக்ல போட்டுட்டு, பேக்ல இருந்து ஒரு ஊசிமருந்து எடுத்து பசங்களுக்கு கை நரம்புல போடுறான். 10 நிமிடம் அங்கே இருந்தேன். அதுக்குள்ள 15 பசங்க வந்து ஊசி போட்டுட்டுப் போனாங்க. ஒரே ஊசியை பயன்படுத்திதான் எல்லாருக்கும் ஊசி போடுறாங்க'' என்றார் வருத்தமாக.
-செம்பருத்தி
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us