சென்னை திருவான் மியூரில் இயங்கிவரும் கலாஷேத்ரா கல்லூரியில், எழுந்த பாலியல் புகாரில், கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது மாணவிகள் புகார் தெரிவித்தனர். உடனடியாக சுதாரித்து கல்லூரி நிர்வாகத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்த நினைப்பவர்கள் மீது தக்க சட்ட நடவடிக்கை எடுக்கப் படும் என மாணவிகளை மிரட்டி யது நிர்வாகம். இதனால் பொங்கிய பாலில் நீர் தெளித்ததுபோல் மாணவிகளின் வேகம் தணிந்து போனது.

எனினும், நடனத்துறை துணைப்பேராசிரி யர் ஹரிபத்மன் மீது முன்னாள் மாணவி மீரா கிருஷ்ணன் துணிவுடன் வந்து காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். அதில் ஹரிபத்மனால் கல்லூரியில் படித்த நேரத்தில் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகத் தெரிவித்திருந்தார்.

kalakshetra

Advertisment

இதையடுத்து கல்லூரியில் பயின்றுவரும் மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர். மாநில மகளிர் ஆணையத் தலைவர் குமாரி நேரில் வந்து விசாரணை நடத்தினார். அவரிடம், பேராசிரியர் ஹரிபத்மன் மற்றும் ஸ்ரீநாத், சாய்கிருஷ்ணா, சஞ்ஜித்லால் மீதும் மாணவிகள் புகார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி முன்னாள் மாணவி கொடுத்த பாலியல் புகாரின் பேரில் ஹரிபத்மன் மாதவரத்தில் தன் தோழி வீட்டில் பதுங்கியிருந்தபோது, போலீசாரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அடுத்தகட்டமாக, மாநில மகளிர் ஆணையத்திடம் ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு முன்னாள் மாணவி தனக்கு ஏற்பட்ட பாலியல்ரீதியான துன்புறுத்தல்களை பற்றி ஈமெயில் மூலம் புகாரளித்துள்ளார்.

Advertisment

கைதுசெய்யப்பட்ட பேராசிரியர் ஹரிபத்மன் சார்பாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரண்டு நாள் வாதத்திற்கு பின் ஹரிபத்மன் ஜாமீன் மனுவை சைதாப்பேட்டை நீதிமன்ற 9-வது பெருநகர் நடுவர் நீதிமன்ற நீதிபதி மேனகாம் பாள் தள்ளுபடி செய்து உத்தர விட்டார்

aa

ஹரிபத்ம னை ஜாமீனில் வெளியே விட்டால் சாட்சிகளைக் கலைக்கக்கூடும் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப் பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சில மாணவிகளை விசாரிக்கவிருப்பதாகவும், இந்த நிலையில் ஹரிபத்மன் வெளியே வந்தால் வழக்கில் தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் அரசுத் தரப்பில் வாதாடினர். இதையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி.

இந்த வழக்கில் இன்னொரு பக்கம், மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையைத் துவங்கியுள்ளது. மாநில மனித உரிமை ஆணைய விசாரணைப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமையி லான குழு விசாரணையைத் தொடங்கியது. இதில் கல்லூரி ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மாணவிகள் உட்பட 30-க்கும் மேற்பட்டோரை இரண்டு நாட்களாக விசாரித்து வருகின்றனர். விசாரணையின்போது, “இந்த கல்லூரியில் பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெறுவது உண்மை என்றும், இதற்கு முன்பும் பல ஆண்டுகளாக இது தொடர்ந்து வந்துள்ளது என்றும், தற்போதும் மாணவிகளுக்கு பாலியல்ரீதியில் துன்புறுத்தல்கள் உள்ளது என்றும் சில மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

மற்ற கல்லூரிகளைப்போல இந்த கல்லூரியில் பெயில் ஆகிவிட்டால் அதை அரியர் வைத்து எழுதமுடியாது. மீண்டும் அந்த ஆண்டு முழுவதுமாகப் படித்து தேர்ச்சி பெறவேண்டும். எனவே இதை ஆயுதமாகப் பயன்படுத்தி ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மாணவிகளுக்கும் -மாணவர்களுக்கும் பாலியல்ரீதியில் துன்புறுத்தல்களைக் கொடுத்துவந்தது விசாரணையில் தெரியவந் துள்ளது.

aa

இந்த வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் லலிதாவிடம் பேசியபோது, “"கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல்ரீதியில் பாதிக்கப்பட்ட மாணவ- மாணவிகள் பலர் இருந்தாலும், தற்போது வரை ஒரு மாணவி மட்டுமே நேரடியாகப் புகாரளித்துள்ளார். மாணவிகள் மாநில மகளிர் ஆணையத்திடமும், மாநில மனித உரிமைகள் ஆணையத்திடமும் பேசும் போது உளம்திறந்து பேசி புகார் தெரிவித் திருந்தாலும், முன்னாள் மாணவி மீராகிருஷ்ண னைப்போல தைரியமாக முன்வந்து காவல் துறையில் புகார்தர தயங்குகின்றனர். இது போன்ற சம்பவங்கள் இனிவரும் மாணவி களுக்கு ஏற்படக்கூடாது என்று விரும்புபவர் கள், தவறு செய்தவர்கள் உரிய தண்டனை அனுபவிக்கவேண்டுமென விரும்புபவர்கள், காவல் துறையில் புகார் அளித்தால் அது ரகசியமாக விசாரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர் கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யும். இல்லையென்றால் இந்த வழக்கு இப்படியே நீர்த்துப்போக வாய்ப்புள் ளது. பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகள் தங்களுக்கு ஏற்பட்ட அநீதியைப் பற்றி புகாருடன், தங்களிடம் உள்ள ஆதாரங்களையும் கொடுத்தால், காவல்துறை தங்கள் கடமையைச் செய்வார்கள்''’என்று தெரிவித்தார்.