கேரளாவின் திருச்சூரில் கடந்த ஜூலை 30ஆம் தேதி, "மலையாள மனோரமா' இதழின் சார்பில், "இந்தியா 75' என்ற தலைப்பில் காணொலிக் காட்சி வாயிலாக நடத் தப்பட்ட கருத்தரங்கில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு ஆற்றிய சிறப்புரை, நாடு முழுக்க பேசுபொருளாகியிருக்கிறது. அவரது உரையில், இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் ஆட்சிக்காலத்தில் ஜனநாயகத்தையும், மாநில உரிமைகளையும் மதித்து நடந்த ஆட்சித்திறத்தைப் பாராட்டிப் பேசி, தற்போதுள்ள பா.ஜ.க. ஆட்சியில், மாநில உரிமைகள் பறிக்கப்படுவது குறித்தும், நாடாளுமன்ற ஜனநாயகம் முடக்கப்படுவது குறித்தும் சுட்டிக்காட்டி, இத்தகைய போக்கைத் தடுத்து நிறுத்த மாநிலங் களிடையே ஒருங்கிணைப்பு தேவை என்பதை வலியுறுத்தினார்.
அவரது உரையிலிருந்து சில பகுதிகள்...
"இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆவதையொட்டி 'India 75 The state of affairs # Federalism, Freedom and Forward'என்ற இந்தக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டாட்சிக் கருத்தி
கேரளாவின் திருச்சூரில் கடந்த ஜூலை 30ஆம் தேதி, "மலையாள மனோரமா' இதழின் சார்பில், "இந்தியா 75' என்ற தலைப்பில் காணொலிக் காட்சி வாயிலாக நடத் தப்பட்ட கருத்தரங்கில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு ஆற்றிய சிறப்புரை, நாடு முழுக்க பேசுபொருளாகியிருக்கிறது. அவரது உரையில், இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் ஆட்சிக்காலத்தில் ஜனநாயகத்தையும், மாநில உரிமைகளையும் மதித்து நடந்த ஆட்சித்திறத்தைப் பாராட்டிப் பேசி, தற்போதுள்ள பா.ஜ.க. ஆட்சியில், மாநில உரிமைகள் பறிக்கப்படுவது குறித்தும், நாடாளுமன்ற ஜனநாயகம் முடக்கப்படுவது குறித்தும் சுட்டிக்காட்டி, இத்தகைய போக்கைத் தடுத்து நிறுத்த மாநிலங் களிடையே ஒருங்கிணைப்பு தேவை என்பதை வலியுறுத்தினார்.
அவரது உரையிலிருந்து சில பகுதிகள்...
"இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆவதையொட்டி 'India 75 The state of affairs # Federalism, Freedom and Forward'என்ற இந்தக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டாட்சிக் கருத்திய லும், விடுதலையால் பெற்ற உரிமைகளும், அனைத்துவிதமான வளர்ச்சிக்கான முற்போக்குச் சிந்தனைகளும் இணைந்துதான் இந்தியாவை இந்தளவுக்கு வளர்த்துள்ளன. இந்தியாவின் வேற்றுமைகளை மதிக்கக்கூடியவராக இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு இருந்தார். பல்வேறு மொழி பேசும் மக்கள் ஒற்றுமையாக வாழ மொழிவாரி மாகாணங்களை உருவாக்கிக் கொடுத்தார் பிரதமர் நேரு. இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை இந்தி அவர்கள்மீது திணிக்கப்பட மாட்டாது என்று உறுதியளித்தார். ஐந்தாண்டுத் திட்டங்களைக் கொண்டுவந்து அனைத்து மாநிலங்களுக்கும் பல்வேறு திட்டங்களை உருவாக்கிக் கொடுத்தார்.
நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு முக்கியத்துவம் தந்தார். இந்தியா முழுவதும் இருந்த பல்வேறு மாநில முதலமைச்சர்களோடு அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்தினார். கடிதங்கள் எழுதினார். முதலமைச்சர்களுக்கு அவர் எழுதிய கடிதங்களே பல்வேறு தொகுப்புகளாக வெளியாகி இருக்கிறது. இத்தகைய காரணங்களால் தான் இந்தியாவானது 75 ஆண்டுகள் வலிமையோடு நின்றுகொண்டு இருக்கிறது.
இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு இந்தியா வலிமையாக இருக்க வேண்டு மானால் இதே கருத்தியல்களை மேலும் மேலும் வலிமைப்படுத்த வேண்டும். கூட்டாட்சி, மாநிலத் தன்னாட்சி, மதச் சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம், சமூக நீதி ஆகியவற்றை நாம் வலிமைப்படுத்த வேண்டும். இந்தியா என்பது வெறும் நிலப்பரப்பின் எல்லைகளாக நாம் கருதக்கூடாது. இந்தியா என்பது இங்கு வாழும் மக்கள் தான். இந்தியா என்பது ஒற்றை அரசு அல்ல. பல்வேறு மாநிலங்களின் ஒன்றியம் தான் இந்திய அரசு. ஒன்றியம், யூனியன் என்பது தவறான சொல் அல்ல. அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவை வரையறுக்கப் பயன்படுத்தும் சொல் யூனியன். இந்தியாவைக் காப்பாற்ற வேண்டுமானால் இந்திய ஒன்றியத்துக்குள் உள்ளடங்கியுள்ள அனைத்து மாநிலங்களையும் காப்பாற்ற வேண்டும்.
இந்தியாவில் ஒற்றை மொழி தேசிய மொழி ஆக முடியாது. ஏனென்றால் இந்தியாவில் எத்தனையோ மொழிகள் இருக்கின்றன. இந்தியாவுக்கு ஒற்றை மதம், அனைவருக்குமான மதமாக இருக்க முடியாது. ஏனென்றால் இந்தியாவில் பல்வேறு மத வழிபாட்டு முறைகள் இருக்கின்றன. இந்தியாவில் ஒற்றைப் பண்பாடு இல்லை. உணவு, உடை அனைத்திலும் ஆயிரம் வேறுபாடுகள். இவ்வளவு வேற்றுமைகளை வைத்துக்கொண்டும் ஒன்றாக வாழ நமக்குள் இருப்பது அன்பும் மனிதநேயமும் மட்டும் தான். ஒற்றை மொழியை, ஒற்றை மதத்தை, ஒற்றைப் பண்பாட்டைத் திணிக்க நினைப்பவர்கள் இந்தியாவின் ஒற்றுமையைச் சிதைக்க நினைக்கிறார்கள். இந்திய ஒற்றுமையைச் சிதைக்க நினைப்பவர்கள் இந்தியாவின் எதிரிகள். இந்திய மக்களின் எதிரிகள். இந்தத் தீய சக்திகளுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது. வலுவான மாநிலங்கள்தான் கூட்டாட்சியின் அடிப்படை.
இந்திய அரசானது, கூட்டாட்சிக் கோட்பாட்டை மதித்து நடக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஒற்றைத்தன்மை கொண்டதாக இந்தியாவை மாற்றும் முயற்சியை நாம் ஏற்க முடியாது. பல்வேறு சிந்தனைகள் மோதும் களமாக இருக்கவேண் டிய நாடாளுமன்றங்களில் பேசுவதற்கான உரிமை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே மறுக்கப்படுகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர்கள் உள்பட 27 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள் ளார்கள். கருத்தைச் சொல்வதற்கான களமான நாடாளு மன்றத்தில்கூட பேச உரிமை இல்லை. இதுதான் இந்திய மக்களாட்சியின் இன்றைய நிலை. சரக்கு மற்றும் சேவை வரி மூலமாக மாநிலங்களின் நிதி உரிமை பறிக்கப் பட்டுவிட்டது. நீட் போன்ற நுழைவுத்தேர்வுகளால் எளியோருக்கு கல்வி உரிமை மறுக்கப்படுகிறது. ஒன்றிய அரசின் பல்வேறு சட்டங்கள் மக்கள் விரோதச் சட்டங்களாக உள்ளன. ஆளுநர்களின் மூலமாக இரட்டை ஆட்சி நடத்தப் பார்க்கிறது பா.ஜ.க. தலைமை.
75 ஆண்டுகளுக்கு முன்னால் மாநில முதலமைச்சர்களுக்கு அன்றைய பிரதமர் நேரு கடிதம் எழுதியபோது, "மிக நீண்ட கால நன்மையாக இருந்தாலும், குறுகிய கால நன்மையாக இருந்தாலும் இந்தியாவுக்கு ஜனநாயகமே பொருத்தமானது! இந்தியாவுக்கு மட்டுமல்ல, எந்த நாட்டுக்கும் ஜனநாயகமே பொருத்தமானது" என்று சொன்னார். அத்தகைய ஜனநாயக விழுமியங்கள் கொண்ட நமது இந்தியாவை எந்நாளும் பாதுகாக்க நம்மை அர்ப்பணிப்போம்!"
-ஆதவன்