ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திவந்த ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் விசாரணையைத் தொடங்க உள்ளது. 154 பேரிடம் விசாரணை செய்த நிலையில், அப்பல்லோ நிர்வாகம் சில கருத்துவேறுபாடுகள் காரணமாக "உச்சநீதிமன்றத்துல போய் பார்த்துக்குறோம்' என அடம் பிடித்தது. விசாரணையின் முடிவில், ஆணையத்துக்கு உதவ 6 எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைக்கவும், அப்பல்லோவை விசாரணைக்கு ஒத்துழைக்கவும் உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். எய்ம்ஸ் மருத் துவர் நிகல் தாண்டன் தலைமை யில் ஆணையத்துக்கு உதவ குழு அமைக்கப்பட்டுள்ளது. சசிகலா, அப்பல்லோ தரப்பு இன்னும் விசாரிக்கப்பட வேண்டிய நிலையில், இந்த ஆணையத்துக்கு 12-வது முறையாக தமிழக அரசு காலநீட்டிப்பு செய்துள்ளது. மார்ச் மாதத்துக்குள் விசா ரணையை முடிக்க ஆணையம் திட்டமிட்டுள்ளது.

பார்க்கலாம், ஆறுமுகசாமியோட கெட்டிக் காரத்தனத்தை!

பிரான்ஸிடம் 42 ரஃபேல் விமானங்களை வாங்கியிருக்கிறது இந்தோனேசியா. இந்தியாவும் 2016-ல் பிரான்ஸிடம் ரஃபேல் விமானங்களை வாங்கியிருக்கிறது. இந்தியா 36 விமானங்களை 7.87 பில்லியன் டாலரில் வாங்க, இந்தோனேஷியாவோ 42 ரஃபேல் விமானங்களை 8.1 பில்லியன் டாலர் செலவில் வாங்கியிருக்கிறது. ரஃபேல் விமான கொள்முதலில் ஊழல் நடந்திருப்பதாக உச்சநீதிமன்றம் வரை எதிர்க்கட்சிகள் போனது நினைவில் இருக்கலாம். இப் போது இரண்டு விலைகளையும் ஒப்பிட்டு, இந்தியா விமானம் ஒன்றுக்கு 456 கோடிவீதம், 16,416 கோடி அதிக விலை கொடுத்து வாங்கியிருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவ், இந்த மெகா ஊழலை உச்சநீதிமன்றத்துக்கு எடுத்துச்செல்வேன் என்றிருக்கிறார்.

போருக்கு போகாமலே குண்டுகளை வீச ஆரம் பித்துவிட்டது ரஃபேல்!

Advertisment

வாசிமை, பாகிஸ்தான் நீதிமன்றம் விடுவித்துவிட்டதை உலகமெங்குமுள்ள ஆணவக் கொலை எதிர்ப்பாளர்கள் கவலையுடன் உற்றுநோக்கு கிறார்கள். 2016-ல் பாகிஸ்தானின் முல்தான் பகுதியிலுள்ள தனது வீட்டில் பௌஸியா அஸிம் கழுத்து நெரித்துக் கொல்லப் பட்டிருந்தார். அவரைக் கழுத்தை நெரித்துக்கொன்றது, அவரது சகோதரர் வாஸிம். அஸிம், ஒரு யூடியுப் பிரபலம். காண்டீல் பலூச் எனும் தலைப்பிலான அவரது வீடியோக்களில் பாகிஸ்தானின் பழமைவாத, ஆணாதிக்க அணுகுமுறையைத் தொடர்ந்து விமர்சித்துவந்தார். இதனால் தன் குடும்ப கௌரவம் கெட்டுப் போனதாய்க் கருதிய வாஸிம், பெற்றோர் வீட்டிலில்லாத நாளில் அஸிமின் கழுத்தைத் திருகிவிட்டார். கிட்டத் தட்ட 6 ஆண்டுகள் விசாரணைக்குப் பின் வாஸிமை விடுதலை செய் திருக்கிறது நீதிமன்றம். சமூகநீதிப் போராளிகள் நறுக்கெனக் கேள்வியெழுப்புகிறார்கள்.

Advertisment

ss

“இதுக்கு எதுக்கு நீதிமன்றம்?

குஜராத்தில் காந்தியை விமர்சித்து கோட்சேவை நாயகனாகச் சித்தரித்துப் பேசிய மாணவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. குஜராத்தின் வல்சாத் மாவட் டத்தில் 11 முதல் 13 வயதுடைய மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. கசம் வித்யாலயா என்ற பள்ளியில் நடந்த போட்டியில், நாதுராம் கோட்சே என் நாயகன் என்ற தலைப்பும் அறிவிக்கப்பட்டிருக்க, அந்த தலைப்பில் பேசிய மாணவர் வெற்றியாளராக தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். விஷயம் சர்ச்சையானதும், மாவட்ட இளையோர் மேம்பாட்டு அதிகாரி மிதா பென் காவ்லி இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். மத்திய உள்துறை இணையமைச்சர் ஹர்ஷ் சங்வி, இது உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் ஏற்பாடு செய்த போட்டி, மாநில அரசுக்கும் போட்டிக்கும் தொடர்பில்லை” என விளக்கமளித்துள்ளார்.

இதை பா.ஜ.க.காரங்களே நம்பமாட் டாங்களே!

ள்துறை அமைச்சர் அமித்ஷா, வேளாண் சட்டங் களால் தங்கள் ஆட்சிமீது கோபத்திலிருக்கும் விவசாயி களைக் குளிர்விக்க, உத்தரபிர தேசத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் அடுத்த ஐந்தாண்டு களுக்கு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் எனும் ஜில்ஜில் வாக்குறுதியை அளித் திருக்கிறார். அமித்ஷா தான வழியைத் தேர்ந்தெடுத்தால், தெலுங்கானா பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராஜாசிங் தண்ட வழியைத் தேர்ந்தெடுத் திருக்கிறார். பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காதவர்களின் வீடுகளை புல்டோசரால் இடிப்போம் என வெளிப் படையாகவே மிரட்ட, எதிர்க்கட்சியினர் அந்த வீடியோவுடன் தேர்தல் ஆணையத்தை அணுகியிருக்கிறார்கள். இதையடுத்து ராஜாசிங்குக்கு நோட் டீஸ் அனுப்பியிருக்கிறது தேர்தல் ஆணையம்.

செஞ்சாலும் செய்வாங்களோ?

க்ரைன்- ரஷ்ய எல் லையில் சிலவாரங்களாகவே போர்ப்பதற்றம் நீடிக்கிறது. ஏன் இந்தப் பதற்றம்? பக்கத்து நாடாக இருந்தபடி அமெரிக் காவுக்கு ஆதரவா என்பதுதான் விவகாரம். உக்ரைன் ஒரு காலத்தில் ஒருங்கிணைந்த சோவியத் யூனியனில் ஒன்றாக இருந்தது. பின் அதி லிருந்து வெளியேறி யது.

வெளியேறிய வேகத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பியச் சார்பு நிலையை எடுத்தது. இதை ரஷ்யா விரும்பவில்லை. கிழக்கு உக்ரைனில் இருக்கும் போராளிகளுக்கு ஆயுதங்களும் ஆதரவும் அளித்துவருகிறது ரஷ்யா. இதுகுறித்துதான் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் பல ஆண்டுகளாக மோதல் நீடித்துவருகிறது. கிழக்கு உக்ரைனுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கவேண்டுமென்பது ரஷ்யாவின் அழுத்தம். அதெல்லாம் கொடுத்தாச்சு என்பது உக்ரைனின் பதில். இப்போது மட்டுமல்ல கடந்த ஆண்டும் உக்ரைன் கிழக்கு எல்லையில் இருமுறை படையைக் குவித்து வாபஸ்பெற்றது ரஷ்யா.

இந்த வருஷமும் அப்படியே பண்ணுங்கப்பா!

-நாடோடி