Advertisment

மாநிலம்… தேசியம்… சர்வதேசியம்!

news

news

Advertisment

லக அளவில் புலிகளைப் பாதுகாக்கும் பல்வேறு வனஉயிர் பாதுகாப்பு அமைப்புகளின் கூட்டமைப்பு, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு டி.எஸ்.2 என்ற விருதை வழங்கியுள்ளது. நவீன உலகில் வனங்கள் சுருங்கி நகரங்கள் விரிந்துவருகின்றன. இதனால் அழிந்துவரும் வன உயிர்களைக் காப்பாற்ற ஒவ்வொரு நாடும் காப்பகங்களை அமைத்துவருகின்றன. புலிகளைப் பாதுகாக்கும் பல்வேறு சர்வதேச அமைப்புகள் பத்தாண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்திய காப்பகங்கள் குறித்து ஆய்வுமேற்கொண்டன. சத்தியமங்கலம் காப்பகம், 2013-ல் 30 புலிகளைக் கொண்டிருந்தது, தற்போது 80 புலிகளாக உயர்ந்துள் ளது தெரியவந்தது. இரைதேடல், நடமாட்டம், வனப்பகுதி பாது காப்பு போன்ற பல்வேறு அம் சங்களே இதற்குக் காரணமென தெரிவித்து தமிழக அரசுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

புலி ஆதரவுன்னு சு.சாமி கண்டனம் தெரிவிக்காமலிருக்கணும்!

news

மும்பை நீதிமன்றம் பழைய வழக்கொன்றிலிருந்து ஷில்பா ஷெட்டியை விடுவித்திருக்கிறது. 2007-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் நடந்த விழ

news

Advertisment

லக அளவில் புலிகளைப் பாதுகாக்கும் பல்வேறு வனஉயிர் பாதுகாப்பு அமைப்புகளின் கூட்டமைப்பு, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு டி.எஸ்.2 என்ற விருதை வழங்கியுள்ளது. நவீன உலகில் வனங்கள் சுருங்கி நகரங்கள் விரிந்துவருகின்றன. இதனால் அழிந்துவரும் வன உயிர்களைக் காப்பாற்ற ஒவ்வொரு நாடும் காப்பகங்களை அமைத்துவருகின்றன. புலிகளைப் பாதுகாக்கும் பல்வேறு சர்வதேச அமைப்புகள் பத்தாண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்திய காப்பகங்கள் குறித்து ஆய்வுமேற்கொண்டன. சத்தியமங்கலம் காப்பகம், 2013-ல் 30 புலிகளைக் கொண்டிருந்தது, தற்போது 80 புலிகளாக உயர்ந்துள் ளது தெரியவந்தது. இரைதேடல், நடமாட்டம், வனப்பகுதி பாது காப்பு போன்ற பல்வேறு அம் சங்களே இதற்குக் காரணமென தெரிவித்து தமிழக அரசுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

புலி ஆதரவுன்னு சு.சாமி கண்டனம் தெரிவிக்காமலிருக்கணும்!

news

மும்பை நீதிமன்றம் பழைய வழக்கொன்றிலிருந்து ஷில்பா ஷெட்டியை விடுவித்திருக்கிறது. 2007-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி யில் ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெர், ஷில்பா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். விழா மேடையில் ஷில்பா அருகே நின்றிருந்த ரிச்சர்ட், ஷில்பா எதிர்பாராத வகையில் அவரை இறுக்கியணைத்து முத்தம் கொடுத்தார். பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்ட தாக ஷில்பாவுக்கு எதிராக கண்டனங்கள் வலுத்தன. வழக்குகளும் தொடரப்பட்டன. அதில் இப்போது, ரிச்சர்ட் கெர்ரின் செயலால் ஷில்பாதான் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஷில்பா மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என மாஜிஸ் திரேட் தீர்ப்பளித்திருக்கிறார்.

முத்த வழக்கு முடியவே இத்தனை வருஷம்னா… மத்த வழக்கெல்லாம்?

டெல்டாவின் கோட்டையை ஒமிக்ரான் வென்றாகி விட்டது. உலகமெங் கும் ஒமிக்ரான் புராணம்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒமிக்ரானின் வேகமான பரவலுக்கான காரணத்தை ஆராய்ந்த விஞ்ஞானிகள், யுரேகா! யுரேகா எனக் கூவிக்கொண்டிருக்கின்றனர். மற்ற கொரோனா வைரஸ் களைவிட மனித சருமத்திலும், பிளாஸ்டிக் பரப்பிலும் ஒமிக் ரானின் தாக்குப்பிடிக்கும் தன்மையே இந்த வேகமான பரவலுக்குக் காரணம் என்கிறார்கள். மனித சருமத்தில் 21 மணி நேரமும் பிளாஸ்டிக் பரப்பில் 8 நாட் களுக்கு மேலும் தாக்குப்பிடிக்க வல்லது என்கிறார்கள் ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள். எனவே தொற்றுகளை நீக்க, கைவசம் எப்போதும் ஒரு சானிடைசரை வைத்துக்கொள்வது பாது காப்பானது என்றும் சிபாரிசு செய்கிறார்கள்.

தொடக்கூடாத இடத்தில் தொட்டால் நுரையீரலில் ஒமிக்ரானும் மலரும்... ஜாக்கிரதை!

Advertisment

news

மிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.10 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ஆளில்லா வான்வெளி வாகனக் கழகத்தை சென்னை கிண்டியிலுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தொடங்கிவைத்தார். எதிர்காலத்தில் ட்ரோன்களின் தேவை அதிகரிக்கும் எனத் தெரிவித்த அவர், “தொடக்கத்தில், தமிழக காவல்துறையில் ட்ரோன் கள் பயன்படுத்தப்படும். பின்பு பேரழிவு நிர்வாகத் துறையிலும், சுரங்கங்களில் ஆய்வுகள் நடத்தவும், தொலைதூரக் கண் காணிப்பிலும், புகைப்படங்கள் எடுக்கவும் பயன்படுத்தப்படும். பல்கலைக்கழகங்கள் வெறுமனே டிகிரி வழங்கும் அமைப்பாக இல்லாமல் ஆராய்ச்சி மையங் களாக உருவெடுக்கவேண்டும். வெளிநாடுகளிலுள்ள நவீன படிப்புகள் தமிழகத்திலுள்ள கல்லூரி, பல்கலைக்கழகங்களில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்” என்றார்.

தமிழகப் புகழை ட்ரோன் மூலமா உயரத்துக்கு எடுத் துட்டுப் போக முயற்சிக் கிறாரோ முதல்வர்!

குடியரசு தின "பத்ம' விருதுப் பட்டியலில் காங்கிரஸைச் சேர்ந்த குலாம் நபி ஆசாத், கம்யூனிஸ்ட் கட்சியின் புத்ததேவ் பட்டாச்சார்யா பெயர் இடம் பெற்றிருந்தது பலரது புருவத்தையும் உயர்த்த வைத்தது. இதில் புத்ததேவ் விருதை நிராகரிக்க, ஆசாத் ஏற்றுக் கொண்டுள்ளார். இதையடுத்து காங்கிரஸிலிருந்து பா.ஜ.க. பக்கம் குலாம் நபி தாவப்போகிறார் என்ற யூகம் எழுந்துள்ளது. ஏற்கெனவே காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருந்துவருகிறார் ஆசாத். இந்நிலை யில் பா.ஜ.க.வின் விருது அறிவிப்பும் அதை குலாம் ஏற்றுக் கொண்டதும் சர்ச் சைக்கு பெட்ரோல் வார்த்துள்ளது. அதற் கேற்ப குலாம் நபி ஆசாத் தனது ட்விட்டர் கணக்கின் சுயவிவரத்தில் சில விஷ யங்களை சேர்த்ததாக பரபரப்பு கிளம்பியது. இதையடுத்து வாய்திறந்த குலாம் நபி ஆசாத், “"எனது ட்விட்டர் கணக்கின் சுயவிவரத்தில் எதையும் சேர்க்கவும் இல்லை, நீக்கவும் இல்லை... காங்கிரஸில்தான் இருக்கிறேன்''’என வாய் திறந்துள்ளார்.

பத்ம வியூகம்கிறது இதுதானோ!

விரைவில் 100 கோடி சந்தாதாரர்களை எட்டுவோம் என அறிவித்திருக்கிறார் நெட் பிளிக்ஸின் தலைமைச் செயலதி காரி ரீட் ஹேஸ்டிங். உலக அளவில் நெட்பிளிக்ஸின் ரீச் முதன்மையானதாக இருந்தாலும் இந்தியாவில் அதன் இடம் ஹாட் ஸ்டார், அமேசானுக் கெல்லாம் வெகுபின்பு இருக்கிறது. ஹாட் ஸ்டார், அமேசானுக் கெல்லாம் கோடிக்கணக்கில் சந்தாதாரர்கள். நெட்பிளிக்ஸிடம் வெறும் 55 லட்சம் சந்தாதாரர்கள்தான். இந்திய ரசிகர்களைக் கவர பிரபலங்களை வைத்து காமக் கதைகள், நவரசா என குறுங்கதைகளை வழங்கியும் நிலை இதுதான். இருந்தாலும் நம்பிக்கையாக முயற்சிகளைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. சீரியல்களால் தனியார் தொலைக்காட்சிகள் கட்டி வைத்திருக்கும் ரசிகக் கோட்டை களை உடைத்தால்தான், நெட் பிளிக்ஸ் கோலோச்சமுடியும்.

தியேட்டர் ரசிகனே இப்பதான் ஓ.டி.டி.யைத் திரும் பிப் பார்க்கிறான்…கொஞ்சம் பொறுமையாயிருங்க

nkn020222
இதையும் படியுங்கள்
Subscribe