ஊரடங்கு நடுவிலும் சரக்கைத் தேடிப்பிடித்து அடித்து மட்டையான திண்டுக்கல் மாவட்ட ஆலக்குவார்பட்டியைச் சேர்ந்த முருகவேலின் கதைதான் இது. தேவைக்கு அதிகமாகச் சரக்கடித்த முருகவேல் ஓடைப் பாலம் ஒன்றில்போய் அமர, தடுமாறி நீரில் விழுந்துள்ளார். கீழே நீர் ஓடியதால் அவருக்கு அடிபடவில்லை. ஆனால் அளவுக்கதிக மான போதையால் அவரால் எழுந்துகொள்ள முடியவில்லை. அவ்வழி போனவர்கள் ஓடைநீரில் கிடக்கும் முருகவேல் இறந்துவிட்டதாக நினைத்து போலீசுக்குத் தகவல் தர, தீயணைப் புத் துறை உதவியுடன் வந்து போலீசார் உடலை மீட்டிருக் கின்றனர். அந்த நேரம் போதை தெளிந்த முருகவேல் கூச்சலிட, போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் ஆடிப்போயிருக்கின்றனர். பிறகென்ன, அவரை எச்சரித்து மருத்துவமனையில் சேர்த்துவிட்டுப் போயிருக் கின்றனர்.
நல்லவேளை... புதைக்கும் முன்பாக போதை தெளிந்ததே!
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் கோழிகமுத்தியில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இது வனத் துறைக்குச் சொந்தமானது. இங்கே கிட்டத்தட்ட 27 யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. வண்டலூர் உயிரியல் பூங்காவைச் சேர்ந்த அசோக் என்ற 12 வயது யானையும் வளர்க் கப்பட்டு வந்தது. அசோக் கைக் கவனித்துக்கொள்ள ஆறுமுகம், முருகன் என இரு பாகன்கள் நியமிக்கப் பட்டிருந்தனர். மாட்டுப் பொங்கலை முன்னிட்டு அசோக்கை மேய்ச்சலுக்கு அழைத்துப் போன இடத்தில், அசோக் திடீரென ஆறுமுகத்தைத் தாக்கியது. இதில் மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் காயமடைந்த ஆறுமுகத்தை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஆறுமுகம் மரணம டைந்தார். வண்டலூரில் பாகனைத் தாக்கிய காரணத்தால்தான், அசோக் டாப்சிலிப் கொண்டுவரப்பட்டது.
ஆறறிவுக்கும் ஐந்தறிவுக்கும் பாசமும் உண்டு; பாதகமும் உண்டு.
கிட்டத்தட்ட கால் டஜன் பா.ஜ. அமைச்சர்கள், முக்கால் டஜன் எம்.எல். ஏ.க்கள் பா.ஜ.க.விலிருந்து பிரிந்து வந்து அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியில் இணைந்து அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கின்றனர். ஆளுங்கட்சியாக இருந்துகொண்டு சும்மா விட்டுவிடுமா பா.ஜ.க.? சுவாமி பிரசாத் மௌர்யா மீது பழைய வழக்கை தூசு தட்டியிருக்கிறது. அதோடு கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக 2000-க்கும் அதிகமான சமாஜ்வாடி தொண்டர்கள் மேல் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுமட்டும் போதாதென முலாயம் சிங் குடும்பத்தைச் சேர்ந்த பிரதிக் யாதவின் மனைவியும் முலாயம் மருமகளுமான அபர்ணா யாதவை தங்கள் முகாமுக்கு இழுக்க ஆயத்தமாகி வருகிறது பா.ஜ.க. இவர் ஏற்கெனவே ராமர் கோவில் கட்ட 11 லட்சம் கொடுத்ததோடு, தேசிய குடிமக்கள் சட்டத்தை வெளிப் படையாக ஆதரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தாமரையோட இதழ்களை உதிர்த்தா, சைக்கிள் டயரை பஞ்சராக்குவோம்!
காபூல் பல்கலைக்கழகம் அருகே மேற்படிப்பிலும் வேலை செய்வதிலும் பெண்களுக்கு உரிமை வேண்டும் எனக் கோரி 20-க்கும் அதிகமான பெண்கள் அமைதியான முறையில் போராட்டம் செய்துகொண்டிருந் தனர். அப்போது வாகனங்களில் வந்த தலிபான்கள் பெண்களை கலைந்துபோகும்படி வற்புறுத்தினர். பெண்கள் அமைதியாக தங்கள் போராட்டத்தைத் தொடரவே, அவர்கள் மீது பெப்பர் ஸ்பிரேயை பீய்ச்சினர். அதில் ஒரு பெண் தலிபான்களை நோக்கி "ஷேம் ஆன் யூ' எனச் சொல்ல, அவர்மீது துப்பாக்கி முனையைப் பதித்து மிரட்டி கலைந்து போகச் செய்தனர். பெப்பர் ஸ்பிரே தாக்குதலுக்கு உள்ளான பெண்கள், மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தலிபான்கள் அப்படித்தான்.
கொரோனா உலகப் பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தி யிருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்த கொரோனா அலை காலகட்டத்தில் கிட்டத்தட்ட 1.3 லட்சம் குழந்தைகள் தங்கள் பெற்றோரில் தாயையோ தந்தையையோ இழந்திருக் கின்றனர் என குழந்தைகள் நல பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் 10,000 குழந்தைகள் தாய்-தந்தை இருவரையும் இழந்துள்ளனர். இப்படி தாயையோ தந்தையையோ இழந்த குழந்தைகளில் ஒடிஸா முதலிடம் பெறுகிறது. இம் மாநிலத்தில் 24,405 குழந்தைகள் பெற்றோரில் ஒருவரை இழந் துள்ளனர். அடுத்த இடத் தில் மகாராஷ்டிராவும், மூன்றா மிடத்தில் குஜராத்தும் உள்ளன. தமிழகத்தில் 11,000-க்கும் அதிகமான குழந்தைகள் தாயையோ தந்தையையோ இழந்துள்ளன.
வெறும் கொரோனா அலையல்ல, குழந்தைகளின் கண்ணீர் அலை!
பனிப்புயல் நமக்கு அந்நியமான வார்த்தை. துருவப் பகுதி மக்களுக்கு அறிமுகமான துயரம். அமெரிக்காவின் கிழக்குப் பகுதிகளைத் தாக்கிய பனிப்புயல் கிட்டத்தட்ட 2.5 லட்சம் பேரை குளிர், பசி, வீட்டை விட்டு நகர இயலாத இக் கட்டுக்கு ஆளாக்கிச் சென்றிருக் கிறது. விர்ஜினியா, நார்த் கரோலினா, ஜார்ஜியா பகுதிகளில் மோசமான வானிலை காரணமாக ஏற்கெனவே 2400 விமானங்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன. மிக அதிகமான பனிப்பொழிவு காரணமாக சாலைப் போக்குவரத்தும் தடைபட்டுள்ளது. மின்தடையும் லட்சக்கணக்கானவர்களை முடக்கியுள்ளது.
சினிமாவுல மட்டும்தான் வெள்ளை மழை அழகா இருக்கும்.
-நாடோடி