சாலை விபத்தில் அதிகம் பலியாகும் மாநிலங்களில் முன்னணியில் இருக்கிறது தமிழ்நாடு. அப்படி நடக்கும் விபத்துகளில் பெரும்பான்மை யானவை வண்டியோட்டிகள், மது அருந்திவிட்டு ஓட்டுவதால் நடக்கிறது. 2019-ல் மலேரியா பாதிப்பால் இந்தியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 7,700. காச நோயால் இறந்தவர் கள் 79,144 பேர். எய்ட்ஸுக்குக் காரணமான ஹெச்.ஐ.வி. வைரஸ் தொற்றால் இறந்தவர்கள் 58,960. ஆனால் அந்த ஆண்டில் சாலை விபத்தில் இறந்தவர்கள் 1.5 லட்சம் பேர். எந்த நோயை விடவும் மிகப்பெரிய உயிர்க்கொல்லியாக இருக்கும் விபத்துகளைத் தடுப்ப தற்காக, 2020-ல் மட்டும், குடிபோதையில் வாகனம் ஓட்டிய, ஓட்டி விபத்துக்கு ஆளாகிய 2,238 பேரின் ஓட்டுநர் உரிமத்தை தமிழக காவல்துறை ரத்து செய்துள்ளது.

எங்க லைசென்ஸைப் பிடுங்கிற துக்கு, டாஸ்மாக்கோட லைசன்ஸை ரத்து செய்யலாமே!

nn

Advertisment

வேளாண் சட்டத்துக் கெதிரான போராட்டத்தின் போது டெல்லியில் நுழைய விடாமல் போராட்டக்காரர் களை நடுச்சாலையில் நிறுத்திய மோடியை, பஞ்சாப் வந்தபோது போராட்டக்காரர்கள் நடுச் சாலையில் நிறுத்தி பதிலடி தந்திருக்கிறார்கள். ஹூசைனி வாலாவில் தேசிய நிகழ்ச்சிகள் நினைவிடத்துக்கு மோடி ஹெலிகாப்டரில் செல்லவேண் டிய நிலையில், வானிலை மோசம் என காரில் கிளம்பினார். விவரம் தெரிந்து, மேம்பாலம் ஒன்றை மறித்து போராட்டத்தில் இறங்கிவிட்டார்கள் போராட்டக் காரர்கள். பாதுகாப்பு ஏற்பாடு குறைவென மோடி, அமித்ஷா வரை பஞ்சாப் முதல்வரைக் குறைசொல்ல, "பாதுகாப்பெல் லாம் சரியாத்தான் பண்ணியிருந் தோம். பிரதமரின் நிகழ்வுக்கு ஆட்கள் கூடாததால், நிகழ்வை ரத்துபண்ண காரணம் தேடி பழியை எங்கள் மீது போடு கிறீர்கள்' என பஞ்சாப் முதல்வர் சரண்சித் சிங் சன்னி பதிலடி தந்துள்ளார்.

போராட்டத்தில் விதைத்தது பொதுநிகழ்ச்சிக்கு வந்தபோது அறுவடை செய்யப்பட்டி ருக்கிறது!

nn

Advertisment

வரெஸ்ட் சிகரம் ஏறுவதைப் போல சாகசமான இன்னொரு பயணம் அன்டார்டி காவின் தென்துருவத்தை அடைவது. அன்டார்டிகாவின் இப்பகுதியில் மைனஸ் 500 செல்சியஸ் வெப்பநிலையும் மணிக்கு 60 மீட்டர் வேகத்தில் வீசும் பனிக்காற்றும், ஆளையே உறையச் செய்துவிடும். கரணம் தப்பினால் மரணம் மாதிரி பயணம். இத்தகைய சவாலான சாதனையைச் செய்து முடித் திருக்கிறார் இந்திய வம்சாவளிப் பெண்ணான ஹர்ப்ரீத் சந்தி. லண்டனில் வசிக்கும் பஞ்சாப் பின்னணியைக் கொண்ட இவர், பிரிட்டன் ராணுவத்தில் அதி காரியாகப் பணி புரிந்துவருகிறார். நாற்பது நாட்கள் சாகசப் பயணமாக இந்த சாதனை முயற்சியை மேற்கொண்டு வெற்றிக்கோட்டைத் தொட்டிருக்கிறார்.

ஜில்லுனு ஒரு சாதனை!

ராமேசுவரம், மண்டபம் பகுதிகளிலிருந்து கடலில் மீன் பிடிக்கச் சென்ற 43 மீனவர்களை டிசம்பர் 18-ஆம் தேதி இலங்கை கடற்படை கைது செய்தது. அடுத்தடுத்த நாட்களில் புதுக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 25 பேர் இலங்கையால் கைது செய்யப்பட, இந்த எண்ணிக்கை 68-ஆக உயர்ந்தது. இதையடுத்து தமிழக மீனவர்கள் தரப்பில் போராட்டங்கள் மேற்கொள் ளப்பட, தமிழக அரசு மீனவர் களின் விடுதலை குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் தந்தது. இந்நிலையில் மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைக்குப் பின் ராமேசுவரம், மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த 13 பேரை விடுவித்திருப்பதுடன், 2 படகுகளையும் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது. இன்னும் 55 பேர் விடுதலை எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.

மீன் தப்பிடுச்சு! மீனவன் சிக்கிக்கிட்டான்!

ந்தியாவில் பெரியவர்களுக்கு அடுத்தபடி யாக 15 முதல் 18 வயதுடைய பதின்பருவத்தினருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் முதல் நாளில் 3.32 லட்சம் மாணவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இந்நிலையில் கோவாக்சினை தயாரிக்கும் பாரத் பயாடெக் நிறுவனம், “கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு 500 மிகி பாராசிட்டமால் மாத்திரைகள் மூன்று பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. கோவாக்சின் தடுப்பூசி போட்டவர் களுக்கு இது அவசிய மில்லை. காய்ச்சல் வந்து பாராசிட்டமால் அவசியமென நம்பினால், மருத்துவரின் பரிந்துரையுடன் மட்டும் மாத்திரை சாப்பிடுங்கள்” என அறிவித்துள்ளது.

இதை இப்ப சொல்றீங்களே இதானா உங்க டக்கு!

nn

ங்கிலாந்தைச் சேர்ந்த நர்ஸான மோனிகாவுக்கு நவம்பர் 31-ஆம் தேதி கொரோனா உறுதியானது. இத்தனைக்கும் இரண்டு தடுப்பூசிகளையும் போட்டவர். ஆஸ்துமா பிரச்சினையுள்ள மோனிகாவை கொரோனா கோமா நிலைக்குக் கொண்டுபோய்விட்டது. பிழைப்பது கஷ்டம் என்று சொல்லிவிட்டார்கள். இருந்தாலும் சோதனைமுறையில் ஒரு மருந்தை முயற்சிக்கப் போகிறேன் என்று சொல்லி உறவினர்களிடம் கையெழுத்து வாங்கி சிகிச்சையளித்தார் மருத்துவர். உயிர்பிழைத்த மோனிகா, செவிலி என்பதால் தனக்கு அளிக்கப்பட்ட சோதனை சிகிச்சைமுறை என்னவென கேட்க, மருத்துவரும் சொல்லியிருக்கிறார். முதலில் மருத்துவர் ஜோக்கடிப்பதாக நினைக்க, கடைசியில் அவர் சீரியஸாகத்தான் சொல்லியிருக்கிறார் என்பதையறிந்து வியப்படைந்திருக்கிறார். ஒரேசமயத்தில் நாலைந்து வயாக்ரா மாத்திரைகளைக் கொடுத்ததுதான் அந்த சோதனை சிகிச்சைமுறையாம்.

மோனிகாவைக் கேட்டால், தர்மம் மட்டுமல்ல... வயாக்ரா மாத்திரையும் உயிர் காக்கும் என்பார்!

-நாடோடி