ணினிகளை வைத்திருப்பவர்களுக்கு வைரஸ்களால் எப்போதுமே தொல்லைதான். சில வருடங்களுக்கு முன்பு ரேன்சம்வேர் என்ற வைரஸ் உலகம் முழுதுமுள்ள கணினிப் பயனாளிகளை பெரிதும் பாடுபடுத்தியது. தற்போது டயவோல் எனும் வைரஸ் கணினிகளை முடக்கிவருகிறதாம். இமெயில் மூலம் கணினிக்குள் செலுத்தப்படும் இந்த வைரஸ், நம் கணினியை முடக்கிவிடும்.

aa

Advertisment

பின் நம் கணினி செயல்படவேண்டுமென்றால், அதைச் செலுத்தியவர் சொல்லும் தொகையைக் கட்டியாகவேண்டும். தரமறுத்தால் நம் கணினி மற்றும் அதிலுள்ள தகவல்களையும் பயனில் லாத அளவுக்கு ஆக்கி விடுகின்றனராம். கணினியை தற் போதுள்ள அளவுக்கு அப்டேட் செய்வதும், வைரஸ் தடுப்பு மென் பொருள் பயன்படுத்து வதும், அறிமுகமில்லாத மின்னஞ்சல்களைத் திறக்கா திருப்பதுமே தற்காப்பு வழிகள். இந்தியாவின் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் எச்சரித்திருக்கிறது. டயவோல் என்றால் சாத்தான் என்று அர்த்த மாம்.

சாத்தான் பராக்... பராக்..

ந்த வடகிழக்குப் பருவ மழையின்போது தமிழகத்தை ஸ்பெஷலாகக் கவனித்துவிட்டுப் போனது மழை. இதனால் தெருவெள்ளம், மழைநீர் தேங்குதல், உயிர்ப்பலி போன்ற தொந்தரவுகள் இருந்தாலும். தமிழகமெங்கும் உள்ள குளம், குட்டை, ஏரிகள் நிறைந்தன. பல ஆண்டுகளாகக் காய்ந்துகிடந்த நதிகள்கூட வெள்ளப்பெருக்கைக் கண்டன. சமீபத்தில் தமிழக நீர்வளத்துறை, நில மற்றும் மேற்பரப்பு நீர் ஆராய்ச்சி நிலையம் ஒரு ஆய்வை மேற் கொண்டது. அதில் தமிழகமெங்குமுள்ள 35 மாவட்டங்களில் நிலத்தடி நீர் உயர்ந் துள்ளது தெரிய வந்துள்ளது. இதில் திருவண்ணாமலை யில் அதிகபட்சமாக 4.81 மீட்டரும், ராணிப் பேட்டை, செங்கல் பட்டு மாவட்டங் களில் குறைந்தபட்ச மாக 2 மீட்டரும் உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. இத்தனை மழையிலும் தேனியில் மட்டும் கடந்த வருடத்தைவிட 1.77 மீட்டர் நிலத்தடி நீர் குறைந்துள்ளது.

Advertisment

பூமியில ஈரம் இருந்ததாதானே மனுசன் மனசுலயும் கொஞ்சம் ஈரமிருக்கும்

ன்னும் ஒமைக்ரான் சவாலுக்கே உலகம் தயாராகாத நிலையில், டெல்டா மற்றும் ஒமைக்ரான் கலப்பில் டெல்மைக்ரான் வகை கொரோனா வைரஸ் உருவாகி உலகத்தைப் படுத்த ஆரம்பித்துள்ளதாம். அதிலும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இந்த வகை வைரஸ்களின் தாக்கம் தீவிரமாக உள்ளதாம். ஒமைக்ரான் பரவுவதில் சுறுசுறுப்பானது. டெல்டா தீவிர பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதென்பதால் விஞ்ஞானிகள் இந்த புதிய வகை வைரஸை எண்ணி அதிர்ச்சி யடைந்துள்ளனர். தற்போதைக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிதான் விஞ்ஞானிகளின் ஒரே யோசனை.

முடியல... வைரஸ்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு யுக்தியை சீக்கிரமா கண்டுபிடிங்கப்பா!

atm

புத்தாண்டு முதல் வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற் கான கட்டணம் உயர்கிறது. ஏ.டி.எம். பராமரிப்புக்காக வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணம் 2014-ல் உயர்த்தப்பட்டது. தற்போது ஒருவர், தான் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏ.டி.எம்.களில் ஐந்து முறை கட்டணமின்றி பணம் எடுத்துக்கொள்ளலாம். பிற வங்கி ஏ.டி.எம்.களில் மூன்று முறை கட்டணமின்றி பணம் எடுத்துக்கொள்ளலாம். அதைத் தாண்டி எடுக்கும் ஒவ்வொரு முறைக்கும் பரிவர்த்தனைக் கட்டணம் 20 ரூபாயாக உள்ளது. 2022-ல் இது 29 ரூபாயாக உயர்கிறது. இதில் ஜி.எஸ்.டி. என்ற பெயரில் 8 ரூபாயை அரசு லவட்டிக் கொள்கிறது.

சேவைக்கட்டணமா? பகல் கொள்ளையா?

ramarkovil

யோத்தி ராமர் கோவிலைச் சுற்றியுள்ள இடங்களை பா.ஜ. தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள். எம்.பி.க்கள், கட்சி நிர்வாகிகள் வாங்கிக் குவித்துள்ளது பிரச்சனை யாகியுள்ளது. ஏற்கெனவே 2 கோடியில் வாங்கிய நிலத்தை பத்து நிமிட இடைவெளியில் அயோத்தி கோவிலுக்கு 18 கோடிக்கு விற்கப்பட்டது பிரச்சனையானது. இப்பிரச்சனையில் விஸ்வஹிந்து பரிசத்தின் சம்பத் ராயின் பெயர் அடிபட்டது. தற்சமயம் கோவிலைச் சுற்றியுள்ள நிலங்கள் எதிர்காலத்தில் விலை அதிகரிக்கும் என்ற நோக்கில், அங்கு வசிக்கும் தலித்களை மிரட்டியும், சட்டவிரோதமாகவும் பா.ஜ.க.வினர் வாங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தேர்தல் நேரமென்பதால் அவசர அவசரமாக உ.பி. அரசு விசாரணைக்கு உத்தரவிட, அரசு விசாரணையில் நீதி கிடைக்காது, இந்த நில மோசடி சம்பந்தமாக உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டுமென குரல் கொடுத்துள்ளார் பிரியங்கா காந்தி.

ஏழையின் நிலத்தில் இறைவனைக் காண்கிறார்கள் பா.ஜ.க.வினர்

ff

வணப் படங்களுக்கான ஆஸ்கார் விருதுப் பிரிவில் இந்தியப் படமொன்று இடம்பிடித்து சர்வ தேசக் கவனத்தை ஈர்த்துவருகிறது. ரிந்து தாமஸ், சுஷ்மித் கோஸ் இணைந்து இயக்கியுள்ள "ரைட்டிங் வித் ஃபயர்' திரைப்படம்தான் அது. தலித் பெண்களால் நடத்தப்பட்டு, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிர தேசத்தில் லட்சணக்கானவர்களின் மனம் கவர்ந்த "கபர் லஹரியா' பத்திரிகையைப் பற்றிய ஆவணப் படம் இது. ஆசிரியர் முதல் நிருபர்கள் வரை பெண்களாலே நடத்தப்படும் பத்திரிகை இது. சர்வதேச ஆவணப் படங்களுக்கான முதன்மைப் பதினைந்து பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

எஸ்.வீ.சேகர்களுக்கு போட்டுக் காட்டுங்க!

-நாடோடி