Advertisment

மாநிலம் தேசியம் சர்வதேசியம்!

dd

வேடந்தாங்கலில் சன் பார்மா தனது மருந்து நிறுவனத்தை விரிவுபடுத்தும் முனைப்பில் இருக்கிறது. இப்பகுதியைச் சேர்ந்த மீனவரான கே.ஆர். செல்வராஜ்குமார், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இந்த நடவடிக்கைக்கு எதிராக புகார் செய்திருக்கிறார். பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கலில், இந்த நிறுவனத்தை விரிவுபடுத்தினால் இங்கு வரும் பறவைகளுக்கு ஆபத்து என தடை கோரியுள்ளார். பறவைகள் சரணாலயத்தைச் சுற்றி 5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு எந்த நிறுவனத்தையும் அனுமதிக்கக்கூடாது என்பது விதிமுறை. நிபுணர் குழுவின் அனுமதியைப் பெற்று, தனது நிறுவனத்தை விரிவுடுத்த இருந்த சன் பார்மா, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் அடுத்தகட்ட விசாரணை முடியும்வரை விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது எனும் தடையால் அதிருப்தி அடைந்துள்ளது. பறவைகளும் வாழணும்ல!

Advertisment

ooo

ங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் பல்கலையில் இந்திய மாணவர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, ஜனநாயக அமைப்புகள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன

வேடந்தாங்கலில் சன் பார்மா தனது மருந்து நிறுவனத்தை விரிவுபடுத்தும் முனைப்பில் இருக்கிறது. இப்பகுதியைச் சேர்ந்த மீனவரான கே.ஆர். செல்வராஜ்குமார், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இந்த நடவடிக்கைக்கு எதிராக புகார் செய்திருக்கிறார். பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கலில், இந்த நிறுவனத்தை விரிவுபடுத்தினால் இங்கு வரும் பறவைகளுக்கு ஆபத்து என தடை கோரியுள்ளார். பறவைகள் சரணாலயத்தைச் சுற்றி 5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு எந்த நிறுவனத்தையும் அனுமதிக்கக்கூடாது என்பது விதிமுறை. நிபுணர் குழுவின் அனுமதியைப் பெற்று, தனது நிறுவனத்தை விரிவுடுத்த இருந்த சன் பார்மா, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் அடுத்தகட்ட விசாரணை முடியும்வரை விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது எனும் தடையால் அதிருப்தி அடைந்துள்ளது. பறவைகளும் வாழணும்ல!

Advertisment

ooo

ங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் பல்கலையில் இந்திய மாணவர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, ஜனநாயக அமைப்புகள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என பா.ஜ.க. மீது குற்றம்சுமத்தினார். இந்தப் பயணத்தில் இங்கிலாந்தின் எதிர்க்கட்சித் தலைவரான ஜெரிமி கார்பைனை ராகுல் காந்தி சந்தித்தார். ராகுலை விமர்சிக்க சந்தர்ப்பங்களை எதிர்பார்த்துக்கொண்டிருந்த பா.ஜ.க. அமைச்சர் கிரண் ரிஜ்ஜு, “இந்தியாவை விமர்சிக்கும், இந்தியாவை எதிர்க்கும் இயல்புள்ள ஜெரிமி கார்பைனை சந்தித்ததன் மூலம், சொந்த நாட்டுக்கு எதிராக ராகுல் காந்தி நடந்துகொண்டிருக்கிறார்” என விமர்சனம் செய்தார். இதற்குப் பதிலடியாக, காங்கிரஸின் செய்தித் தொடர்பாளரான ரந்தீப் சுர்ஜிவாலா, பிரதமர் மோடி, கார்பைனைச் சந்திக்கும் படத்தை ட்விட்டரில் வெளியிட, பா.ஜ.க. முகாம் சைலண்ட் மோடுக்குப் போய்விட்டது. அசிங்கப்படறதே பிழைப்பாப் போச்சு!

dd

Advertisment

பாகிஸ்தான் பிரதமராக இருந்துவந்த இம்ரான்கான், எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தால் தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். வெளிநாட்டுச் சதி மூலம் தனது அரசு கவிழ்க்கப்பட்டதாகப் புலம்பும் இம்ரான், உடனடியாகத் தேர்தலை நடத்தவேண்டும் எனக் கூறிவருகிறார். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி இஸ்லாமபாத்தில் பிரம்மாண்ட பேரணிக்கு அழைப்புவிடுத்தார். பார்த்தது ஆளும் கட்சி, ஆட்களைத் திரட்டக்கூடிய எதிர்க்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் 100 பேரைப் பிடித்து சிறையிலடைத்துவிட்டது. “அமைதியாகப் போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளது. எதிர்க்கட்சிகளின் பேரணிகளை நான் தடுத்தது கிடையாது” என ட்விட்டரில் பதிவிட்டு, அடுத்து என்ன செய்யலாம் என்ற ஆலோசனையில் இருக்கிறார் இம்ரான். ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்!

சிறைவாசிகளுக்கு தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் இலவச மேற்படிப்பு வழங்க வழிவகைகளை ஆராய்ந்துவருகிறது தமிழக அரசு. சிறையிலுள்ள பலர் பொருளாதார நெருக்கடி காரணமாக படிக்க முன்வருவதில்லை. முக்கியமாக மாற்றுப் பாலினத்தினர், ஆதரவற்ற விதவைகள், கட்டணம் செலுத்த வழியின்றி மேற்படிப்பு படிக்க முடியாமல் தவிக்கின்றனர். இவர்கள் கல்வி கற்பதற்காக வரும் கல்வியாண்டு முதல் தமிழக திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் இலவசமாக திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், பட்டய, பட்டப் படிப்புகள் வழங்க கல்வி அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர். படிப்புக்கான கட்டணம் மட்டுமின்றி பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட உபகரணங்களையும் இலவசமாக வழங்கத் திட்டமாம். சிறைவாழ்வை நிறை வாழ்வாக்கும் யோசனை!

22

த்தரப்பிரதேச மாநிலம் பதாயு மாவட்டம் கும்பர்காவ் பகுதியில் சனி கோவிலொன்றும் அதையொட்டி கோசாலையும் உள்ளது. அருகில் பழைய பொருட்களை போட்டுவைக்கும் பகுதி உள்ளது. அங்கு பக்தரொருவர் வெள்ளை நிறத்தில் பளபளப்பாகத் தெரிந்த லிங்கம் போன்ற பொருளை சுயம்புலிங்கம் எனச் சொல்ல, அதைப் பார்க்க மக்கள்கூட்டம் திரண்டுவிட்டது. கூடவே உண்டியல் வைத்து வசூலும் ஆரம்பமாகிவிட்டது. வசூல் நிதியில் பிரச்சனை வர, கோவில் நிர்வாகத்திடமிருந்து காவல்துறைக்கு புகார் போனது. கடைசியில் ஊராட்சி நிர்வாகம் வந்து அதைத் தோண்டியபோதுதான் சனி கோவிலுக்குப் பயன்படுத்திய சற்று பெரிய சைஸ் எல்.இ.டி பல்பு என தெரியவந்தது. உண்டியல் வசூலை நகராட்சி நிர்வாகம் பிடுங்கிக்கொண்டு, சுயம்புலிங்க மகத்துவங்களை பேசிக்கொண்டிருந்தவர்களை அடித்துத் துரத்தியிருக்கிறது. உருண்டையா இருக்கிறதெல்லாம் லிங்கமாயிடுமா?

dd

பூமியைப் போலவே கடலின் வெப்பநிலை உயர்வுக்கும் கடல்நீரில் கார்பன் அதிகரிப்பதற்கும் தொடர்புண்டு. கடலிலுள்ள கார்பனைக் கிரகித்துக் கொள்வதில் கடல்புற்கள் எனும் தாவரம் பெரும்பங்கு வகிக்கிறது. மேக்ஸ்பிளாங்க் நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சமீபத்தில் கடல்களில் மேற்கொண்ட ஆய்வில் ஒரு சதுர கிலோமீட்டர் கடல்புற்கள், ஒரு சதுர கிலோமீட்டர் காட்டைவிட இரு மடங்கு கார்பனை உறிஞ்சிக்கொள்கிறது என கண்டறிந்திருக்கிறார்கள். ஆனால் இதில் துரதிர்ஷ்டமான செய்தி என்னவெனில் அனைத்துக் கடல்களிலும் உள்ள கடல்புற்கள் வேகமாக அழிந்துவருகின்றன. ஏற்கெனவே உலகிலுள்ள கடல்புற்களில் மூன்றிலொரு பகுதி அழிந்துவிட்டதாம். சுருக்கமாகச் சொன்னால் பூமியைப் போலவே கடலின் சுற்றுச்சூழலும் ஆபத்தில் இருக்கிறது என்கிறார்கள். கடலையே கலங்கடிக்கிறானே மனிதன்!

-நாடோடி

nkn010622
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe