போட்டிகளில் ஜெயிப் பதைவிட, அதில் பங்கேற்பதற்குத் தகுதியானவர் என அதிகாரி களிடம் நிரூபிக்கத்தான் அதிக மனஉறுதி வேண்டும்போல. கடந்த 2020-ல், செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான சாம்பியன்ஷிப் போட்டி போலந்தின், லுப்லினில் நடைபெற்றது. தமிழகத்தைச் சேர்ந்த சமீகா பர்வீன் டெல்லி சென்று தகுதித் தேர்வில் அதிக புள்ளிகள் வென்றார்.
வேறெந்த வீராங்கனையும் போட்டியில் கலந்துகொள்ளத் தேர்வாகவில்லை என்று அவரைத் தேர்வுக்குழு திருப்பியனுப்பியது. பின் போராடி போட்டியில் கலந்துகொண்டு ஏழாமிடம் பெற்றுத் திரும்பிய அவர், இந்திய அதிகாரிகள் அவரை முறையாக நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டுடன் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார். இதையடுத்து நீதிமன்றம், அரசு நிபுணர்களுடன் கலந்தாலோ சித்து, மகளிர் மாற்றுத் திறனாளி வீரர்கள், ஆண் வீரர்களைப் போன்றே சமமாக நடத்தப்பட பல்வேறு வழிகாட்டுதல்களைப் பிறப்பித்து கொள்கை வகுக்க மத்திய-மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
நீளம், உயரம் தாண்டு றதைவிட இவங்க காட்டுற சமத்துவமின்மையைத் தாண்டு றதுதான் பெரிய சவால்போல!
மத்திய அரசு 2016 முதல், பெண்களைப் படிக்க வைப்போம்! பெண்களைப் பாதுகாப்போம்! என்றொரு திட்டத்தில் கவனம் செலுத்தி வந்தது. தற்போதைய குளிர்கால கூட்டத்தொடரில் இத்திட்டத்துக்கென ஒதுக்கப் பட்ட 446.72 கோடியில் 75 சதவிகிதம் விளம்பரத்துக்குத் தான் செலவிடப்பட்டதென நாடாளுமன்றக் குழு தெரிவித் துள்ளது. திட்டத்தின் நோக்கம் மக்களைச் சென்றடைய விளம் பரம் அவசியம்தானென்றாலும், இலக்குகளைச் சென்றடைய விளம்பரம் மட்டும் போதாது என கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட 622.48 கோடியில் 25 சதவிகித அளவே செலவழிக்கப் பட்டுள்ளதை இந்த அறிக்கை வெட்டவெளிச்சமாக்கி யுள்ளது.
மத்திய-மாநில அரசு களே... விளம்பரமும் செய் யுங்கள்! திட்டத்தை நிறை வேற்ற கொஞ்சம் வேலையும் செய்யுங்கள்!
ஊழல் பிரச்சினை யில் சிக்கியுள்ளது ம.பி. அரசு! மத்தியப்பிரதேச அரசாங்கம், கிலோ ரூ.1100-க்கு விதை கொள்முதல் செய்யலாம் என வரம்பு விதித்திருக்கும் நிலையில் மத்தியப்பிரதேச எம்.பி. ஒருவர் நடத்தும் நர்சரியில் கிலோ ரூ 2,300-க்கு வெங்காய விதைகள் வாங்கப் பட்டுள்ளது. கிட்டத்தட்ட 90 குவிண்டால் வெங்காய விதைகள் ரூ.2 கோடி செலவில் வாங்கியுள்ளனர். அரசு விதித்துள்ள வரம்பை விட இருமடங்கு விலையில் வாங்கப்பட்டுள்ளதால் சர்ச்சை வெடித்துள்ளது. வெங்காய விதை ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து மத்தியப்பிரதேசத்தின் தோட்டக்கலைத் துறை முதன்மைச் செயலாளர் கல்பனா ஸ்ரீவத்சவாவும், அந்தத் துறையின் ஆணை யரான மனோஜ்குமார் அகர்வாலும் ஆரம்பகட்ட விசாரணையைத் தொடங் கினர். இந்நிலையில் அகர்வால் வனத்துறைக்கு மாற்றப் பட்டுள்ளார். வத்சவா புதிய பொறுப்பு எதுவும் வழங்காமல் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
வெங்காய விவ காரத்தை நோண்டுனாலே கண்ணீர் வரும் போலிருக்கே!
இங்கிலாந்திலிருந்து சீனா வசம் ஹாங்காங் போனபின், ஹாங்காங் மீது சீனாவின் கெடுபிடிகள் அதி கரிக்கத் தொடங்கின. ஹாங்காங் தேர்தல் நடைமுறை களில் சீனா செய்த மாற்றங் களுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதை யடுத்து பலத்த பாதுகாப் புடன் அங்கு தேர்தலை நடத்தி முடித்துள்ளது சீனா. பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி தேர்தலைப் புறக்கணித்தது. தேர்தலில் நின்றவர்கள் அனைவரும் சீன ஆதரவாளர்களே. இதனால் தேர்தலில் வெறும் 30.2 சத வாக்குகளே பதிவாகியுள்ளன. இது, கடந்த 2016 தேர்தலில் பதிவான வாக்குகளில் கிட்டத் தட்ட சரிபாதியாகும்.
வல்லான் வகுத்ததே வாய்க்கால்!
அரக்கோணம் மாவட்டம் பனப்பாக்கம் அருகேயுள்ள நெடும்புலி கிராமத்தைச் சேர்ந்தவர் கோமதி. இவரது கணவர் லோகநாதன். மரச்செக்கு எண்ணெய் வியாபாரியான இவர் தனது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் யூடியூப்பை பார்த்து பிரசவம் பார்த்துள்ளார். பிரசவத்தின்போது குழந்தை இறந்து பிறக்க, இரத்தப்போக்கு அதிகமானதால் கோமதியின் நிலை மோசமாகவே, அவரை ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டுசென்றுள்ளனர். இதை யடுத்து வேலூர் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவ மனைக்கு கோமதி மாற்றப் பட்டுள்ளார். லோகநாதனை போலீசார் கைதுசெய்து விசாரணை செய்துவருகின்றனர்.
யூடியூப்பிலேயே குடும்பம் நடத்துறாங்க
கொரோனோ தடுப்பூசி பயம் ஏதோ இந்தியாவில் மட்டும்தான் இருக்கிறது என்று நினைக்காதீர்கள். உலகம் முழுக்க இதே கதைதான். இத்தாலியில் கொரோனா தடுப்பூசி போடா தவர்களுக்கு சூப்பர் பாஸ் கிடை யாது. அதாவது உணவகம், திரை யரங்கு, பூங்காக்களுக்கு இந்த பாஸ் இல்லாமல் போகமுடியாது. இத்தாலிய பல் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி போட விருப்பம் இல்லை. ஆனால் பாஸ் வேண்டும். அவருக்கு விபத்தொன்றில் சிலிக்கானால் ஆன கை பொருத்தப்பட்டுள்ளது. நேராக முகாமுக்கு வந்து நர்ஸிடம் நல்ல கைக்குப் பதில், சிலிக்கான் கையை நீட்டியிருக் கிறார். நர்ஸ் விஷயத்தைக் கண்டுபிடித்துவிட்டார். அதிகாரிகளிடம் புகார் செய்ய, அவர்மீது ஏமாற்ற முயன்றதாக வழக்குப் பதிந்துவிட்டார்கள். இன்னும் 35 லட்சம் பேர் இத்தாலியில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வில்லையாம்.
காமெடிதான்... டாக்டருக்கே ஊசி பயம்!
-நாடோடி