"நீர்வாழ் பறவைகள் சரணாலயம்' எனப் பெயர்பெற்ற வேடந்தாங்கலைச் சுற்றியுள்ள 5 கிலோமீட்டர் சுற்றளவு பாது காக்கப்பட்ட பகுதியாகும். இதில் யாரும் லேசில் கைவைக்க முடியாது. கடந்த 2020-ஆம் ஆண்டு முந்தைய அரசு இந்த 5 கிலோமீட்டர் சுற்றளவை 3 கிலோமீட்டராகக் குறைக்க தேசிய வன உயிரினக் கழகத்திடம் கோரிக்கை வைத்தது.

state

Advertisment

இப்பகுதியில் கட்டுமானங்கள் வந்தால் பல்லுயிர்ப் பரவல் முதல் வெளி நாடுகளில் இருந்தெல் லாம் வரும் பறவைகளின் வாழ்விடம் பாதிக்கப்படும் என பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து தற்போதைய அரசின் சார்பாக, தலைமை வன அலுவலர் சேகர் குமார், விண்ணப்பத்தை நிரந்தரமாகத் திரும்பப் பெற்றுக்கொண்டதாக கருதும்படி கடிதம் அனுப்பி யிருக்கிறார்.

மனத்தாங்கல் தீர்ந்து இப்போதான் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கிட்டிருக்காம் பறவைகள்!

பிரபல மைக்ரோ சாப்ட் நிறுவனத் தின் பெயரிலேயே சென்னையில் போலி கால் சென்டர் நடத்திவந்த மூவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ஐட்ராப் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த விவேக், முகமது உமர் மற்றும் ராஜேஷ் திலோமன் ஆகியோர், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சேவையை வழங்குவதாக இணை யத்தில் விளம்பரப்படுத்தி, அந்நிறுவனத்தின் டூப்ளி கேட் மென்பொருள்களைப் பயன்படுத்துவோரை வளைத்துள்ளனர். அவர்களுக்கு குறைந்த விலைக்கு ஒரிஜினல் வெர்ஷன் தருவதாகக்கூறி பணம்பெற்று மென்பொருளை விற்றுள்ளனர். அதன்வழியே ஹேக்கிங் வைரஸ்களை அனுப்பி, கணினிகளைச் செயலிழக்கச் செய்து, அதைச் சரிசெய்வ தாகக்கூறியும் கல்லா கட்டி யுள்ளனர். 2013-ம் ஆண்டி லிருந்தே இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள், தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கண்களில் சிக்க, சிறையில் கம்பியெண்ணுகிறார்கள்!

Advertisment

மைக்ரோசாப்ட்டுக்கே விபூதியடிச்சிருக்காங்க!

டந்த 25 ஆண்டு களோடு ஒப்பிடுகையில், நடப்பாண்டில் உலக அளவில் அதிக எண்ணிக்கையில் பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டும், கொல்லப் பட்டும் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. "ரிப்போர்ட் டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ்' என்ற அமைப்பின் ஆய்வுப்படி, நடப்பாண்டில், உலகமெங்கும் 488 பத்திரிகையாளர்கள் சிறைப்பட்டுள்ளார்கள். சீனாவில்தான் அதிகபட்சமாக 127 பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறையிலடைக் கப்பட்ட பெண் பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை, கடந்த 2020-ம் ஆண்டைவிட அதிகம். இவ்வருடம் 46 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட் டுள்ளனர். அதில் 65% பேர் குறிவைத்துக் கொல்லப்பட்டுள்ளனர். மெக்ஸிகோ வுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் அடுத்த படியாக, இந்தியாவில் 4 பேர் கொல்லப் பட்டுள்ளதால், இந்தியாவும் பத்திரிகை யாளர்களுக்கு அபாயகரமான நாடாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மோடி அரசின் சாதனைப் பட்டியலில் மேலுமொன்று!

state

ந்தியா -பாகிஸ்தான் இடையே 1971-ம் ஆண்டு நடைபெற்ற போர் வெற்றியின் 50-வது ஆண்டு தினம், நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்த போர் நடைபெற்றபோது இந்தியாவின் பிரதமர் இந்திரா காந்தி. ஏற்கனவே ஜவஹர்லால் நேருவின் பெயரையே இருட்டடிப்பு செய்துவரும் ஒன்றிய அரசு, இந்திரா பெயரையும் இந்த விழாவில் குறிப்பிடாமல் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்ய, பிரியங்கா தனது ட்விட்டர் பக்கத்தில், 'நம் நாட்டின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் இந்திரா காந்தி. பெண்கள் விரோத பா.ஜ.க. அரசு, விஜய் திவாஸ் கொண் டாட்டங்களில் இந்திரா காந்தியின் பெயரை திட்டமிட்டு விலக்கி யுள்ளது. நரேந்திர மோடிஜி, உங்களுடைய இந்த அற்பத்தனத்தை பெண்கள் நம்பமாட்டார்கள்' என்று காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

இப்படியொரு நெருக்கடி நிலை வருமென இந்திரா நினைத்திருப்பாரா!

sate

டகொரிய முன்னாள் அதிபர்களான கிம் ஒஒ ஜங், கிம் ஜோங் இல்லின் மறைவுக்காக அவர்கள் நினைவு தினத்தையொட்டி 11 நாட்கள் துயர அனுசரிப்பை வடகொரியா கடைப்பிடிப்பதாக அறிவித்துள்ளார் தற்போதைய, அதிபர் கிம் ஜோங் உன். அதனையொட்டி சிரிப்பதோ, மதுவருந்துவதோ, மளிகைப் பொருட்கள் வாங்குவதோ எதுவும் செய்யக்கூடாது. மீறிச் சிரித்தால் சிறைத் தண்டனைதானாம். இந்தக் காலகட்டத்தில் உங்கள் வீட்டில் யாராவது இறந்தால் சத்தமாக அழக்கூடாது. யாருக்காவது பிறந்தநாள் வந்தால்கூட கொண்டாடக் கூடாதாம். வடகொரியா மக்கள் அதிர்ஷ்டசாலிகள். மலஜலம் கழிப்பதைப் பற்றி அதிபர் எதுவும் சொல்லவில்லை.

அற்பனுக்கு வாழ்வுவந்தால் அர்த்தராத்திரி குடைபிடிப்பான்!

state

ப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரமான காபூலில் கொரோனா தொற்று நோயை எதிர்கொள்ளும் வசதிகளுடன் ஒரேயொரு மருத்துவமனைதான் உள்ளது. ஆனால் அம்மருத்துவமனையிலும் ஆக்ஸிஜன் சிலிண்டர் முதல் கொரோனா சிகிச்சை மருந்துகள் வரை கடும் தட்டுப்பாடு நிலவுகிறதாம். பல மாதங்களாக ஊதியமே வாங்காத மருத்துவர்களும் பணியாளர்களும் தங்கள் சிரமத்தையும் மீறி போராடி வருகிறார்கள். இந்நிலையில் ஒமிக்ரான் அச்சமும் சேர்ந்துகொள்ள தடுமாறிவருகிறது காபூல். தலிபான்கள் ஆட்சிக்குப் பிறகு உலக வங்கி சுகாதாரக் காரணங்களுக்காக புதிய கடன் வழங்க யோசனையில் இருக்கிறதாம். இன்னொரு சுற்று கொரோனா மரணங்கள் அதிகரித்தால், ஆப்கானின் நிலை பரிதாபமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ட காலிலே படுமென்பது இதுதான்போல!

-நாடோடி