Advertisment

மாநிலம் தேசியம் சர்வதேசியம்!

ds

ஹாங்காங், பிரிட்டிஹ் குடியேற்ற நாடுகளில் ஒன்று. ஆரம்பத்தில் சீனப் பேரரசின் கீழிருந்த இந்நாடு, அபின் போர்களின்போது பிரிட்டிஹ் வசமானது. காலனிய ஆட்சியிலிருந்து சீனா விடுதலை பெற்றபின்னும் ஹாங்காங் இங்கிலாந்தின் வசமே இருந்தது. பின் சீனா- இங்கிலாந்து செய்துகொண்ட ஒப்பந்தப்படி ஹாங்காங், 1997-ல் சீன நிர்வாகத்தின்கீழ் வந்தது. இருந்தாலும், இங்கு நிலவும் சிறப்பு ஒப்பந்தங்களின்படி ஓரளவு தன்னாட்சி அதிகாரம் ஹாங்காங் குக்கு உண்டு. பொருளாதாரரீதியாக வலுவான பகுதியான ஹாங்காங், பிரிட்டிஹ் வசமிருந்து சீனாவுக்கு மாறியபோது எழுந்த உரசல்களாலும், பின் கொரோனா தாக்குதலின்போது கொரோனா தொற்றைத் தடுக்க சீனா கடைப்பிடித்த கடுமையான விதிமுறைகளாலும், ஹாங்காங்கின் பொருளாதாரம் பெரிதும் சீர்கேட்டுக்கு உள்ளாகியிருக்கிறது.

Advertisment

dd

பொருளா தாரத்தைச் சீர்படுத்த, சுற்றுலாவுக்கு பெயர்போன ஹாங்காங், 5,00,000 இலவச விமான டிக்கெட

ஹாங்காங், பிரிட்டிஹ் குடியேற்ற நாடுகளில் ஒன்று. ஆரம்பத்தில் சீனப் பேரரசின் கீழிருந்த இந்நாடு, அபின் போர்களின்போது பிரிட்டிஹ் வசமானது. காலனிய ஆட்சியிலிருந்து சீனா விடுதலை பெற்றபின்னும் ஹாங்காங் இங்கிலாந்தின் வசமே இருந்தது. பின் சீனா- இங்கிலாந்து செய்துகொண்ட ஒப்பந்தப்படி ஹாங்காங், 1997-ல் சீன நிர்வாகத்தின்கீழ் வந்தது. இருந்தாலும், இங்கு நிலவும் சிறப்பு ஒப்பந்தங்களின்படி ஓரளவு தன்னாட்சி அதிகாரம் ஹாங்காங் குக்கு உண்டு. பொருளாதாரரீதியாக வலுவான பகுதியான ஹாங்காங், பிரிட்டிஹ் வசமிருந்து சீனாவுக்கு மாறியபோது எழுந்த உரசல்களாலும், பின் கொரோனா தாக்குதலின்போது கொரோனா தொற்றைத் தடுக்க சீனா கடைப்பிடித்த கடுமையான விதிமுறைகளாலும், ஹாங்காங்கின் பொருளாதாரம் பெரிதும் சீர்கேட்டுக்கு உள்ளாகியிருக்கிறது.

Advertisment

dd

பொருளா தாரத்தைச் சீர்படுத்த, சுற்றுலாவுக்கு பெயர்போன ஹாங்காங், 5,00,000 இலவச விமான டிக்கெட்டுகளை அளித்து பயணிகளைக் கவரத் திட்டமிட் டுள்ளது. மார்ச் முதல் அமலுக்கு வரும் திட்டத்துக்கான இலவச விமான பயணத்துக்கான டிக்கெட்டுகளை, கேத்தி பஸிபிக், ஹெச்.கே. எக்ஸ்பிரஸ், ஹாங்காங் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் விநியோ கிக்கும். அதேபோல உள்நாட்டில் இருப்பவர்களுக்கும் 80,000 இலவச டிக்கெட்டுகளை அளித்து வெளிநாடுகளுக்கு கோடைச் சுற்றுலா சென்று வர ஊக்குவிக்கத் திட்டமிருக்கிறதாம். இலவச டிக்கெட்டுக்கு யாருக்கு அப்ளி கேஷன் போடணும்ங்க!

Advertisment

ss

த்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸில் தலித் பெண்ணொருவர் கூட்டுப் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இவர் உயிரிழந்த நிலையில் விவகாரம் விஸ்வரூப மெடுப்பதைத் தடுக்க, குடும்பத்தினரின் ஒப்புத லின்றி பெண்ணின் உடலை காவல்துறையினரே எரித்தனர். இதுதொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பானை, ஊபா வழக்கில் கைதுசெய்து சிறையிலடைத்தது அம்மாநில அரசு. இவரது ஜாமீனுக்குத் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்துவந்த உ.பி., கடந்த ஆண்டு டிசம்பரில் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியபிறகும் சட்டவிரோதப் பண பரிவர்த்தனை வழக்கைப் பதிவுசெய்தது. இந்த வழக்கில் லக்னோ சட்ட விரோதப் பண பரிவர்த்தனை சிறப்பு நீதிமன்றம் பிப்ரவரி 1-ஆம் தேதி ஜாமீன் வழங்கியது. இதை யடுத்து ரூ.1 லட்சம் பிணைத்தொகை செலுத்தி விடுதலையானார் சித்திக் கப்பான். “"செய்தி சேக ரிக்கச் சென்றபோது என்னிடம் 2 பேனாக்களும் ஒரு மடிக்கணினியும்தான் இருந்தது. என்னுடன் வந்தவர்கள் மாணவர்கள். உபா வழக்கில் சிக்கவைக்கப்பட்டு 28 மாதங்களுக்குப் பிறகு வெளிவந்திருக்கிறேன். கடும் அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடு வேன்'’எனக் குறிப்பிட்டுள்ளார். கருத்துச் சுதந்திரத்துக்கே காப்பு மாட்டியிருக்காங்க!

டகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில், கிட்டத்தட்ட 31 சதவிகிதமளவுக்கு குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவதாகவும், தாய்- சேய் இறப்பு விகிதத்திலும் அம்மாநிலம் முன்னணியில் இருப்பதாகவும் ஒன்றிய அரசின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதை யடுத்து அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா குழந்தை திருமணத்துக்கு எதிராக கடுமை யான நடவடிக்கை எடுக்க அமைச்சரவையில் முடிவெடுத்தார். மாநிலம் முழுவதும் குழந் தைத் திருமணத்துக்கு எதிராக 4004 வழக்குகள் பதியப்பட்டன. இவ்வழக்குகளில் 2,044 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், திருமணம் செய்துகொண்டவர்கள், குழந்தைத் திருமணத்துக்கு கட்டாயப் படுத்திய உறவினர்கள் ஆகியோர் அடக்கம். 14 வயதுக்குக் குறைவான பெண்களைத் திருமணம் செய்தவர்கள் மீது போக்சோ சட்டமும், 14-க்கும் 18க்கு உட்பட்ட பெண் களைத் திருமணம் செய்தவர்கள் மீது குழந் தை திருமணச் சட்டம் 2006-ன் கீழும் வழக் குப் பதிவு செய்யப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. ஆரம்ப ஜோரோடு நிறுத்திடாதீங்க!

dd

சென்னை மாநகராட்சியில் வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் முதற்கட்டமாக 18 சாலைகளை குப்பையில்லாத சாலைகளாக மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னையில் வணிகர்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து தினமும் 5,200 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. சாலை களில் குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட்டு லாரிகள் மூலம் இவை அகற்றப்படுகின்றன. இந்த 18 சாலைகளில் சிறிய வகை குப்பைத் தொட்டிகள் வைக்கப்படும். மிதிவண்டிகளில் குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை வரும் தூய்மைப் பணியாளர் அதை அகற்றுவார். மேலும், சாலைகளில் குப்பைகளைக் கொட்டு பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இதன் மூலம் 74.3 கிலோமீட்டர் சாலையும், 196 பேருந்துநிறுத்தங்களும் எந்நேரமும் குப்பை யின்றி பராமரிக்கப்படும். இதற்காக இச்சாலை களில் 442 குப்பைத் தொட்டிகள் அமைக்கப் பட உள்ளன என மேயர் தெரிவித்துள்ளார். திட்டம் போட்டபடி செயல்படுத்திடு வீங்களா!

-நாடோடி

nkn110223
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe