Advertisment

மாநிலம் தேசியம் சர்வதேசியம்!

dd

சாதித்தேவிட்டார் ரிஷிசுனக். 2022 ஜூலையில் இங்கிலாந்தின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன், சொந்தக் கட்சியினரின் அதிருப்தியால் பதவி விலக, அடுத்த பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் வர வாய்ப்பிருப்பதாக பேச்செழுந்தது. ஆனால், இங்கிலாந்தைச் சேர்ந்த லிஸ் ட்ரஸ், பிரதமர் பதவிக்கான போட்டியில் கடைசி 2 சுற்று களில் முன்னிலை பெற்று சுனக்கைப் பின்னுக்குத் தள்ளினார்.

Advertisment

nn

எனினும் பதவியேற்று வெகு விரைவிலேயே இங்கிலாந்தின் பொருளாதார நெருக்கடி காரணமாகவும், கட்சியினரின் அதிருப்தி காரணமாகவும், அக்டோபர் 20-ஆம் தேதி பதவிவிலகினார். இதையடுத்து இந்த முறை போட்டியிருந்தபோதும், பிரதமர் தேர்வில் வெற்றிபெற்றிருக்கிறார் ரிஷி சுனக். சுனக் இப்போது பிரதமராகியிருப்பது, சூரியன் மறையாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு என்றபோதி லும

சாதித்தேவிட்டார் ரிஷிசுனக். 2022 ஜூலையில் இங்கிலாந்தின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன், சொந்தக் கட்சியினரின் அதிருப்தியால் பதவி விலக, அடுத்த பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் வர வாய்ப்பிருப்பதாக பேச்செழுந்தது. ஆனால், இங்கிலாந்தைச் சேர்ந்த லிஸ் ட்ரஸ், பிரதமர் பதவிக்கான போட்டியில் கடைசி 2 சுற்று களில் முன்னிலை பெற்று சுனக்கைப் பின்னுக்குத் தள்ளினார்.

Advertisment

nn

எனினும் பதவியேற்று வெகு விரைவிலேயே இங்கிலாந்தின் பொருளாதார நெருக்கடி காரணமாகவும், கட்சியினரின் அதிருப்தி காரணமாகவும், அக்டோபர் 20-ஆம் தேதி பதவிவிலகினார். இதையடுத்து இந்த முறை போட்டியிருந்தபோதும், பிரதமர் தேர்வில் வெற்றிபெற்றிருக்கிறார் ரிஷி சுனக். சுனக் இப்போது பிரதமராகியிருப்பது, சூரியன் மறையாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு என்றபோதி லும், இந்தியர்கள் பலர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதற்கு வேட்டு வைப்பதுபோல, ரிஷி சுனக்கின் தாத்தா ராம்தாஸின் பூர்விகம் குஜ்ரன்வாலா. இது பாகிஸ்தான் வசம் உள்ளது. அதனால் ரிஷி பாகிஸ்தானியர் என்று பாகிஸ்தான் சமூக ஊடகங்கள் குரலெழுப்பத் தொடங்கியுள்ளன. ஜெயிச்ச வனை கழுதைகூட சொந்தம் பாராட்டும்!

Advertisment

dd

ஸ்ரீகௌரி சாவந்தைத் தெரியுமா? மும்பையைச் சேர்ந்த கணேஷ்தான் ஸ்ரீகௌரி. வாழ்வின் ஒரு கட்டத்தில் தான் மாற்றுப் பாலினத்தவர் என கண்டுகொண்ட கணேஷ், ஸ்ரீகௌரி சாவந்தாக மாறி புனேவில் வளர்ந்தார். 2014-ல் திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக உச்சநீதிமன்றம் அங்கீகரித்ததில் இவருடைய தளராத முயற்சிகளும் அடங்கும். இந்த ஸ்ரீகௌரி சாவந்தின் கதையை பாலிவுட் திரையுலகம் திரைப்பட மாக எடுக்கத் திட்ட மிட்டுள்ளது. ரவி ஜாதவ் இயக்கியுள்ள இப்படத்தின் பெயர் தாலி- பஜாவுங்கி நஹி, பஜ்வாங்கி. இப் படத்தில் ஸ்ரீகௌரியின் வேடத்தில் நடிக்க சுஷ்மிதா முன்வந்திருப்பதுதான் பரபரப்பாக பேசப்படுகிறது. “வெகுசில மாற்றுப் பாலினத்தவர்களே வாழ்க்கையில் நான் கடந்துவந்த சிரமங்களை எதிர்கொண்டிருப்பர். ஒரு பெண், மாற்றுப் பாலினப் பெண் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதே எங்கள் சமூகத்துக்கு பெரிய வெற்றி. இந்த சவாலை ஏற்றிருக்கும் சுஷ்மிதாவுக்கு வாழ்த்துகள்” என்றிருக்கிறார் ஸ்ரீகௌரி. நல்ல முயற்சிதான்!

ருகாலத்தில் வேலைக்காக மும்பை, டில்லி போன்ற வடமாநிலங்களுக்கு இடம்பெயர்ந்த காலம் மாறி, வட இந்தியத் தொழிலாளர்களின் அடைக்கல பூமியாகிவிட்டன தென்னிந்திய மாநிலங்கள். கட்டட, உணவகத் தொழிலாளர்களே இவர்களில் பலர் என இருந்த நிலை மாறி, விவசாயத் தொழிலாளர்களிலும் இவர்களது எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. திருச்சி, கரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை பகுதிகளில் நடவு உள்ளிட்ட விவசாயப் பணிகளுக்காக வட இந்தியர்களை, அதிலும் குறிப்பாக மேற்கு வங்கத்தவர்களை பெரும்பாலும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். தமிழகத் தொழிலாளர்கள் போதுமான அளவு கிடைப்பதில்லை, கிடைத்தாலும் கூலி அதிகம் என்பதால் இவர்களுக்கு வேலைவாய்ப்பும் கணிசமாகிவருகிறது. இவர்களைப் பயன்படுத்துவதால் நில உரிமையாளர்களுக்கு 30 சதவிகிதம் வரை கூலி மிச்சமாகிறதாம். சொல் பேச்சு கேட்பது, மிச்சம் வைக்காமல் வேலையை முடிப்பது என நில உரிமையாளர்கள் பாராட்டும்வண்ணம் நடந்துகொள் கிறார்களாம். ஆதாயம் கிடைக்குன்னா ஆஹா ஓஹோதான்!

தராபாத்தில் தீபாவளிக்கு மறுநாள் கொண்டாடப்படும் விழா சதர். முக்கியமாக இது ஆந்திர மாநில யாதவர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் எருமை மாடுகளின் கண்காட்சி நடக்கும். யாதவர்களின் பிரதான தொழில் கால்நடை வளர்ப்பு, பால் வியாபாரம் என்பதால், சிறப்பான கால்நடைகள் இந்த திருவிழாவுக்கு அழைத்துவரப்படும். இந்த வருடமும் மது யாதவ் தலைமையில் நடைபெற்ற இந்தத் திருவிழாவில் கண்காட்சிக்கு மாடுகள் அழைத்துவரப்பட்டன. இதில் கருடன் என்ற எருமை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதன் உரிமையாளர் அரியானாவிலிருந்து இந்த எருமையை 35 கோடி ரூபாய் கொடுத்து ஐதராபாத்துக்கு வாங்கிவந்திருக்கிறாராம். இந்த எருமைகளின் விலை அதன் விந்தணுக்களின் தரத்துக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படுகிறதாம். தன் வாழ்நாள் காலத்துக்குள் கருடன், செலவிட்டதைவிட அதிகமாகச் சம்பாதித்துத் தந்துவிடும் என அதன் உரிமையாளர் நம்பு கிறாராம். இந்த எருமைக்கு பிஸ்தா, ஆப்பிள், கொண்டக் கடலை, வேர்க்கடலை என ஸ்பெஷல் கவ னிப்பாம். எருமைக்கு வந்த வாழ்வைப் பாரு!

-நாடோடி

nkn021122
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe