Advertisment

மாநிலம் தேசியம் சர்வதேசியம்!

ss

ன உயிர்களின் இயற்கையான வசிப்பிடத்தைத் தவிர்த்து, இந்தியாவிலுள்ள பெரிய உயிரியல் பூங்காக்களில், விலங்குகளை சிறப்பாக வைத்து பராமரிக்கும் உயிரியல் பூங்காவாக சென்னை வண்டலூர் மிருககாட்சிச் சாலை முத-டம் பெற்றுள்ளது. இதனைக் கணிப்பதற்கு நிர்வாகச் செயல்திறன் மதிப்பீடு செய்யப் படும். இதில் 82 சதவிகித மதிப்பெண்ணை வண்டலூர் பூங்கா பெற்றுள்ளது.

Advertisment

dd

502 ஹெக்டேரில் அமைந்துள்ள இந்த உயிரியல் பூங்காவில் 2,300 விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன. விலங்குகளின் நலனைக் கண்காணிக்க 200-க்கும் அதிகமான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கண்காணிப்பு, உணவிடுதல், நடத்தைச் சோதனைகள், இனப்பெருக்கத் தேவைகள் என பலவும் இந்த மதிப்பீட்டில் கவனிக்கவேண்டும். அவற்றைச் சிறப்புறச் செய்துள்ளது வண்டலூர் உயிரியல் பூங்கா. வொன்டர்புல் வண்டலூர் பூங்கா!

Advertisment

dd

சுருக்கமாக, சுருக்கென்று மனதில் தைக்கும்விதத்தில் சொல்வதில் விளம்பரங்கள் திறமையானவை. போரிஸ் ஜா

ன உயிர்களின் இயற்கையான வசிப்பிடத்தைத் தவிர்த்து, இந்தியாவிலுள்ள பெரிய உயிரியல் பூங்காக்களில், விலங்குகளை சிறப்பாக வைத்து பராமரிக்கும் உயிரியல் பூங்காவாக சென்னை வண்டலூர் மிருககாட்சிச் சாலை முத-டம் பெற்றுள்ளது. இதனைக் கணிப்பதற்கு நிர்வாகச் செயல்திறன் மதிப்பீடு செய்யப் படும். இதில் 82 சதவிகித மதிப்பெண்ணை வண்டலூர் பூங்கா பெற்றுள்ளது.

Advertisment

dd

502 ஹெக்டேரில் அமைந்துள்ள இந்த உயிரியல் பூங்காவில் 2,300 விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன. விலங்குகளின் நலனைக் கண்காணிக்க 200-க்கும் அதிகமான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கண்காணிப்பு, உணவிடுதல், நடத்தைச் சோதனைகள், இனப்பெருக்கத் தேவைகள் என பலவும் இந்த மதிப்பீட்டில் கவனிக்கவேண்டும். அவற்றைச் சிறப்புறச் செய்துள்ளது வண்டலூர் உயிரியல் பூங்கா. வொன்டர்புல் வண்டலூர் பூங்கா!

Advertisment

dd

சுருக்கமாக, சுருக்கென்று மனதில் தைக்கும்விதத்தில் சொல்வதில் விளம்பரங்கள் திறமையானவை. போரிஸ் ஜான்சன் மீது அதிருப்தி அதிகரித்ததையடுத்து, கன்சர்வேடிவ் கட்சியில் பிரதமர் பதவிக்கு போட்டி எழுந்தது. இதில் முதல் ஐந்து சுற்றுகளில் ரிஷியின் கை ஓங்கிய நிலையில், கடைசி இரண்டு சுற்றுகளில் லிஸ் செல்வாக்குச் செலுத்தி இங்கிலாந்தின் பிரதமராகத் தேர்வானார். இந்த நிகழ்வுகளை மனதில் வைத்துக்கொண்டு சி.வி. லைப்ரரி எனும் வேலைவாய்ப்பு நிறுவனம் “"வேலை கிடைக்க வில்லையா? அனைவருக்கு மான வேலை எங்களிடம் இருக்கிறது'” என்ற ஆங்கில வாசகத்துடன், ரிஷி சுனக்கின் படத் தைப் போட்டு விளம்பரம் செய்துள்ளது. இந்த விளம்பரம் ட்ரண்டான அளவுக்கு விமர்சனங் களையும் சந்தித்து வருகிறது. இதே நிறுவனம் போரிஸ் ஜான்சன் பதவியை ராஜினாமா செய்தபோதும், "இன்றைக்குத்தான் ராஜினாமா செய்தீர்களா?…புதிய தொடக்கத்துக்கான வாய்ப் பிருக்கிறது' என்ற வாசகத் துடன் விளம்பரம் வெளியிட்டது. நல்லா பண்றாங்கையா விளம்பரம்!

ழுதைக்கும் மனிதனுக்குமான உறவு தொடங்கி 7000 வருடங்கள் ஆகிறதாம். அதாவது, காட்டு விலங்காக இருந்த கழுதையை மனிதன் பழக்கி பயன்பாட்டுக்குக் கொண்டுவந்து 7000 வருடங்கள் ஆகிறது என்கிறது புதியதொரு ஆய்வு. அதுவும் கிழக்கு ஆப்பிரிக்காவில் தான் இது தொடங்கியதாம். குதிரைக்கும் முன்பே மனிதன் கழுதையைப் பழக்கிவிட்டான். 31 நாடுகளைச் சேர்ந்த 207 கழுதை களின் டி.என்.ஏ.க்களை ஆராய்ந்து இந்த முடிவுக்கு வந்தி ருக்கிறார்கள் அறிவியல் அறிஞர் கள். பிறகு அங்கிருந்து ஐரோப்பா, ஆசியாவுக்கு பழக்கப்படுத்தப் பட்ட கழுதைகள் வந்திருக்கலாம் என்கிறார்கள். பொருட்களைச் சுமப்பதற்கும், பாலைவனத்தின் ஊடாகப் பயணம் செய்வதற் கும் தொடக்க காலகட்டத் தில் மனிதனுக்கு கழுதைகள் உதவியிருக்கின்றன. சுருக்கமாக, மனித நாகரிகத்தின் வெற்றிப் பயணத்தில் கழுதைகளுக்கும் பங்குண்டு என்கிறார்கள் அறிவியல் அறி ஞர்கள். பங்கே வேண்டாம், காட் டுக்குத் துரத்துங் கனு நினைக்குமோ!

வேதாந்தா லிஃபாக்ஸ்கான் கூட்டணியில் கிட்டத்தட்ட ரூ 1.5 லட்சம் கோடியில் செமிகண்டக்டர் சிப் தயாரிக்கும் நிறுவனம் மகாராஷ்டிர மாநிலத்தில் அமையவிருந்தது. கடைசி நேர திருப்பமாக அந்த நிறுவனம் குஜராத்தில் அமையவிருப்பதாக அதன் நிறுவனர்கள் அறிவித்துள்ள னர். ஏற்கெனவே தன் கட்சி யைச் சேர்ந்த ஷிண்டேவிடம் கட்சியையும் ஆட்சியையும் பறிகொடுத்து அமர்ந்திருக்கும் தாக்கரே, ஷிண்டேயும் பா.ஜ.க.வும் தான் இதற்குப் பொறுப்பு என விமர்சித்துள்ளார். சிவசேனாவின் முன்னாள் அமைச்சர் சுபாஷ் தேசாய், இடம், ஒப்பந்தம், நிபந்தனை கள் என அனைத்தையும் பேசி இறுதி செய்திருந்தோம். அதற் கிடையில்தான் ஆட்சிமாற் றம் நடந்தது. ஷிண்டேவும் பட்நாவிஸும் இந்த ஒப்பந்தத்தைத் தக்கவைக்க எதுவும் செய்யவில்லை. மத்திய அரசின் தலையீடில்லாமல், குஜராத்துக்கு மாறுவது என்ற முடிவு எடுத்திருக்கப்படாது'’ என பா.ஜ.க.வையும் ஷிண்டேவையும் விமர்சித்துள்ளார். பெரிய திட்டங்கள் மகாராஷ்டி ராவிடமிருந்து கைநழுவுவது நல்ல அறிகுறியல்ல என ராஜ் தாக்கரே விமர்சித்துள்ளார். வடை போச்சே!

dd

2012-ல் டெல்லி ரயில் நிலையத்தில் நடந்த ஒரு விபத்து பூஜாவின் ஒரு கை-காலை பறித்துக்கொண்டது. கூட்ட நெரிசலில் தண்டவாளத்தில் விழுந்த பூஜா, கை-காலோடு தன்னம்பிக்கையையும் இழந்து நின்றார். கை, கால் போனா லென்ன… வாழ்க்கை முடிந்துவிட வில்லை என அவரது தந்தை அவரை ஊக்குவிக்க, துப்பாக்கி சுடும் பயிற்சியில் கவனம் செலுத் தினார். சொந்தமாக துப்பாக்கி வாங்கக்கூட வசதியில்லை. நண் பர்களிடம் இரவல் வாங்கிய துப்பாக்கியில்தான் பயிற்சிசெய் தார், போட்டிகளுக்கும் சென் றார். தேசிய அளவில் கவனம் பெற்ற பூஜா, சர்வதேச போட்டி களில் கால்பதிக்க ஆரம்பித்தார். 2017-ல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த சர்வதேச உலகக் கோப்பை போட்டியில் தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம், 2021 பெருவில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் இரு வெள்ளிப் பதக்கம் என முன்னேறிவருகிறார். தேசிய அளவிலான பாராலிம்பிக் போட்டிகளில் வென்றுள்ள பூஜா, சர்வதேச போட்டிகளிலும் தங்கம் வெல்வதே லட்சியம் என்கிறார். தோல்விக்குதான் சாக்குப்போக்குத் தேவை! வெல்வதற்கல்ல!

-நாடோடி

nkn210922
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe