Advertisment

மாநிலம் தேசியம் சர்வதேசியம்!

ff

ஸ்திரேலியா கடந்த சில வாரங்களில் தோராயமாக ஆறு லட்சம் தேனீக்களைக் கொன்றுகுவித்திருக்கிறது. எதற்கு என்கிறீர்களா? எல்லாம் பொருளாதார நட்டத்துக்குப் பயந்துதான். தேனீயைக் கொல்வதற்கும் பொருளாதார நட்டத்துக்கும் என்ன தொடர்பு? தேன் விற்பனையில் முன்னணியில் இருக்கும் நாடுகளில் ஒன்று ஆஸ்திரேலியா.

Advertisment

ee

பல லட்சக்கணக்கான டாலர் வருவாயை ஆஸ்திரேலியா தேன் விற்பனையில் ஈட்டுகிறது. இந்த நிலையில்தான், வரோவா மைட் என்னும் ஒட்டுண்ணி ஆஸ்திரேலிய தேனீக்களிடையே பரவியிருக்கிறது. இந்த ஒட்டுண்ணி, தேனீ சமூகத்தையே பலவீனமடையச் செய்யும். ஊனமான தேனீக்கள், இனப்பெருக்க பாதிப்பு என பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். சிட்னி பகுதி தேனீக்களிடையே இந்த ஒட்டுண்ணியைக் கண்டதும் பதறிப்போய், அது பரவாமல் தடுக்கத்தான் கொலைபாதகத்தில் இறங்கி யிருக்கிறது ஆஸ்திரேலியா. மனிதனுக்கு கொரோனா தேனீக்கு வரோவா!

rr

Advertisment

94 வயதில் நடமாட்டத்துடன் இருந்தாலே ஆச்சரியம்தான்! ஹரியானாவைச் சேர்ந

ஸ்திரேலியா கடந்த சில வாரங்களில் தோராயமாக ஆறு லட்சம் தேனீக்களைக் கொன்றுகுவித்திருக்கிறது. எதற்கு என்கிறீர்களா? எல்லாம் பொருளாதார நட்டத்துக்குப் பயந்துதான். தேனீயைக் கொல்வதற்கும் பொருளாதார நட்டத்துக்கும் என்ன தொடர்பு? தேன் விற்பனையில் முன்னணியில் இருக்கும் நாடுகளில் ஒன்று ஆஸ்திரேலியா.

Advertisment

ee

பல லட்சக்கணக்கான டாலர் வருவாயை ஆஸ்திரேலியா தேன் விற்பனையில் ஈட்டுகிறது. இந்த நிலையில்தான், வரோவா மைட் என்னும் ஒட்டுண்ணி ஆஸ்திரேலிய தேனீக்களிடையே பரவியிருக்கிறது. இந்த ஒட்டுண்ணி, தேனீ சமூகத்தையே பலவீனமடையச் செய்யும். ஊனமான தேனீக்கள், இனப்பெருக்க பாதிப்பு என பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். சிட்னி பகுதி தேனீக்களிடையே இந்த ஒட்டுண்ணியைக் கண்டதும் பதறிப்போய், அது பரவாமல் தடுக்கத்தான் கொலைபாதகத்தில் இறங்கி யிருக்கிறது ஆஸ்திரேலியா. மனிதனுக்கு கொரோனா தேனீக்கு வரோவா!

rr

Advertisment

94 வயதில் நடமாட்டத்துடன் இருந்தாலே ஆச்சரியம்தான்! ஹரியானாவைச் சேர்ந்த பகவானிதேவி தாகர், உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 1 தங்கமும் 2 வெண்கலமும் வென்று அசத்தியிருக்கிறார். 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்பதற்கு எனவே நடத்தப்படுவது உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி. பின்லாந்தின் தம்பேரில் ஜூலை 10-ஆம் தேதி நடைபெற்ற போட்டி யில் 100 மீட்டர் ஸ்பிரிண்ட் போட்டி யில் தங்கப் பதக்க மும், குண்டு எறிதல், வட்டு எறிதல் போட்டி யில் தலா ஒரு வெண்கலமும் வென்று அசத்தி யிருக்கிறார். இதே பகவானி தேவி, டெல்லியில் மாநில அளவில் நடந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்கப் பதக்கங்கள் வென்றிருந்தார். இத்தனைக்கும் தன் பேரன் மூலம் கடந்த டிசம்பரில்தான் இந்த மாஸ்டர் சாம்பியன்ஷிப் போட்டிகளைப் பற்றிக் கேள்விப்பட்டு, பயிற்சிகளை ஆரம்பித்தார். உலகமே இப்போது பகவானிதேவியை ஆச்சர்யமாகப் பார்க்கிறது! ஓல்டு இஸ் கோல்டுங்கிறது இதுதானா!

டோலோ 650-ஐ தயாரிக்கும் மைக்ரோ லேப்ஸ் நிறுவனத்தின் மீதான வரி ஏய்ப்பு புகாரைத் தொடர்ந்து பெங்களூருவிலுள்ள தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் அதிர்ச்சிகரமான ஒரு தகவல் அம்பலமாகியுள்ளது. கொரோனா காலத்தில் மட்டும் டோலோ 650 மாத்திரைகள், 400 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. தவிரவும் அரசின் விதிமுறைகளுக்குப் புறம்பாக பல கோடி மாத்திரைகளை குறிப்பிட்ட காலத்தில் தயாரித்ததும் அம்பலமானது. இதுகுறித்த விசாரணையில், தலைமை அலுவலகத்திலிருந்து எடுக்கப்பட்ட ஆவணங்களில் டோலோ 650 மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்க, அவர்களுக்கு 1000 கோடி ரூபாய் பரிசாக செலவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. தவிரவும், இப்படி அதிகளவில் விற்ற மாத்திரைகளுக்கு உரிய வரி செலுத்தாமல் ஏமாற்றியதும் அம்பல மாயிருக்கிறது! பணக்காய்ச்சல்ல விதிமுறை மீறி நடந்திருக்காங்க!

கிணறு காணாமல் போகும்போது கோவில் காணாமலாகாதா? சோழர் காலத்தில் கர்நாடகாவில் கட்டப் பட்ட கோவிலையே காணவில்லை என, தமிழ்நாடு சிலை திருட்டுத் தடுப்புக்கான முன்னாள் ஐ.ஜி. பொன் .மாணிக்கவேல் புகார் கூறுகிறார். தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தில், ராஜராஜசோழனின் பேரனான ராஜாதிராஜத் தேவர் எனும் உடையார், ராஜேந்திரசோழபுரம் எனும் நகரை உருவாக்கினார். மேலும் அங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் தனது தந்தை நினைவாக கோத்தகிரி கிராமத்தில் ராஜேந்திர சோழீஸ்வரம் எனும் கோவிலை 949 வருடங்களுக்குமுன் கட்டி, ஒரு அரிய வெண்கல நடராஜர் சிலையையும் பரிசளித்தார். தற்போது அந்தக் கோவிலையே காணவில்லை என்றும், அந்தக் கோவிலின் கல்வெட்டுகள் அருகிலுள்ள கோவிலின் அருகே கவனிப்பாரின்றிக் கிடப்பதாகவும், வெண்கல நடராஜர் சிலை, கற்சிலைகள் காணாமல் போயுள்ளதாக அவருக்குக் தகவல் கிடைத் துள்ளதாம். அதை தமிழக அரசு அக்கறையெடுத்து விசாரித்து, சிலைகளையும், கல்வெட்டுகளையும் மீட்கவேண்டுமென்று தெரிவித்துள்ளார். அக்கறை காட்டவேண்டிய விஷயம்தான்!

ணி நெருக்கடி, விடுமுறை குறைவு, உயரதிகாரிகளுக்குப் பதிலளிக்கவேண்டிய நிர்பந்தம் இவற்றோடு மன அழுத்தமும் சேரும்போது வேண்டாத முடிவை எடுத்துவிடுகிறார்கள் சில காவலர்கள். இத்தகைய மனரீதியான பிரச்சினை உள்ளோருக்காக, தமிழ்நாட்டின் முன்னணி உளவியல் நிபுணர்கள் அடங்கிய குழுவால் நடத்தப்படும் ஆலோ சனை மையத்தில் 400-க்கும் அதிகமான காவலர்கள் சிகிச்சை பெற்றிருக்கிறார்களாம். மூன்றாண்டுகளுக்கு முன்பே இத்திட்டம் தொடங்கியது. அப்போதைய போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், தனியார் உளவியல் மருத்துவமனைகளில் கவுன்சிலிங்குக்கு நேரம் அதிகம் எடுப்பதாலும், செலவு அதிகம் என்பதாலும் குருநானக் கல்லூரியில் இந்த மையத்தை அமைத்தார். இதில் தற்போது வரை 400 பேர் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள். எனினும் உண்மையில் மன அழுத்தம், மனரீதியான பிரச்சனை உள்ள காவலர்கள் 1000-க்கும் அதிகமென கணித் திருக்கிறார்கள் மருத்துவர்கள். தற்போதைய அரசு இத்திட்டத்தை விரிவுபடுத்தி, ரூ 50 லட்சம் நிதியளித்திருக்கிறது. இத் திட்டத்துக்கு மகிழ்ச்சி என பெயர் வைத்திருக்கிறார்கள். காவலர்களுக்கு அத்தியாவசியமான திட்டம்தான்!

-நாடோடி

nkn230722
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe