த்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடந்த தொடர் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர் பாரதிய கிசான் யூனியன் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத்.

Advertisment

இந்திய அளவில் தொடர்ந்து விவசாயப் போராட்டங் களை முன்னின்று நடத்திவரும் இவர், அதன் ஒரு பகுதியாக மே 30-ஆம் தேதி பெங்களூரு வந்திருந்தார். அப்போது அவர் பத்திரிகையாளர் சங்கத்தில், “விவசாயி களின் போராட்டத்தை நிறுத்துவதற்காக, கர்நாடக விவசாய சங்கத் தலைவர் கோடி யள்ளி சந்திரசேகர் அரசியல்வாதிகளிடம் பேரம் பேசிய ஆடியோ கசிந்திருக்கிறது. இதன் மூலம் அவர் நிஜமுகம் வெளிப்பட்டிருக்கிறது’ என்றார். அப்போது சந்திரசேகரின் ஆதர வாளர்கள் திகாயத் மீது கறுப்பு மையை வீசியதுடன், மைக்கைப் பிடுங்கி தாக்கவும் செய்தனர். தனக்கு பாதுகாப்பு வழங்குவதில் கர்நாடக பா.ஜ. அரசு தோற்று விட்டதாக திகாயத் குற்றம்சாட்டி யுள்ளார். பிரித்தாளுவதுதானே ராஜதந்திரம்!

கொரோனா பீதியே இன்னும் மாறாத நிலையில், உலக மக்களை புதிய கவலை பிடித் தாட்டத் தொடங்கியுள்ளது. அம்மை வகையைச் சேர்ந்த குரங்கு அம்மை வைரஸ் ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. உலக சுகாதார நிறுவனம் மே 26 வரை உலகில் 257 பேருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது எனத் தெரிவித்துள்ளது. மேலும் 26 நாடுகளில் இந்த நோய் தாக்கம் செலுத்துகிறது எனத் தெரியவந்துள்ளது. நைஜீரியாவில் 21 பேருக்கு குரங்கு அம்மை கண்டிருந்த நிலையில், முதன்முதலாக 40 வயது நபர் குரங்கு அம்மை யால் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது. கொரோனா போய் குரங்கு அம்மை வந்தது டும்…டும்…டும்…!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் ஆதனூரில் பேருந்து வசதிகள் குறைவு. மக்களின் வசதிக்குறைவைப் பார்த்த ஆதனூர் ஊராட்சி நிர்வாகம் ஏழு ஆட்டோக்களை வாங்கி நிறுத்தியுள்ளது. பேட்டரி மூலம் இயங்கும் இந்த ஆட்டோக்கள் காலையில் நான்கு மணி நேரமும் மாலையில் நான்கு மணி நேரமும் இயக்கப்படுகின் றன. ஆதனூர் ஊராட்சிக்காரர் கள் தங்கள் ஆதார், வாக்காளர் அட்டையைக் காண்பித்து ஆட்டோ பயண அட்டை வாங்கிக்கொண்டால் சவாரி இலவசமாம். ஒருசமயத்தில் நான்கைந்து பேர் வரை பயணிக்கமுடியும். போக்குவரத்து வசதியில் லாத கிராம நிர்வாகங்கள் இதுபோன்ற யோசனையைப் பின்பற்றலாமே! மனதிருந்தால் மார்க்கமுண்டு!

Advertisment

உத்தரப்பிரதேச மாநிலம் மந்த்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்குமாரி. இவரது மகன் ஜூகலுக்கு உடல்நிலை சரியில்லாததால் மாவட்ட அரசு மருத்துவ மனைக்கு அழைத்துவந்தார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பலவீன மாக இருப்பதாகச் சொல்லி ரத்தம் ஏற்ற பரிந்துரைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜூகலுக்கு ரத்தம் ஏற்ற 5000 ரூபாய் கேட்டுள்ளார் சுகாதாரப் பணியாளர். கையில் பணமில்லாத ராம்குமாரி, தன்னிடம் மிச்சம் மீதியிருந்த தங்கத்தை விற்று 5000 ரூபாய் ஏற்பாடு செய்துதர, சுகாதாரப் பணியாளர் ரத்தம் என்ற பெயரில் ஒன்றை ஜூகலின் உடலில் ஏற்றியுள்ளார். இதை யடுத்து ஜூகலின் உடல்நிலை மேலும் மோசமாக, வேறு பெரிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அறிவுறுத்தினர். இதையடுத்தே சுகாதாரப் பணியாளர் குளுகோஸில் சிவப்பு நிற நிறமியைக் கலந்து ஏமாற்றியது அம்பலமாகி யிருக்கிறது. நல்லவேளை பெயிண்டை ஏத்தாம விட்டாங்களே!

dd

லியனார்டோ டாவின்சியின் உலகப் புகழ்பெற்ற ஓவியங்களில் ஒன்று புன்னகைக்கும் மோனலிசா. இது பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் லூவ்ரே அருங் காட்சியகத்தில் உள்ளது. மே 29-ஆம் தேதி மூதாட்டிபோல சக்கர நாற்காலியில் வந்த நபர், தனது விக்கைத் தூக்கி மோனலிசா ஓவியத்தின்மீது வீசினார். ஆனால் 1956-ல் இந்த ஓவியம் மீது ஒருவர் அமிலம் வீச முயற்சி செய்தார். அதில் இந்த ஓவியம் லேசான பாதிப்பை அடைந்தது. அதுமுதற்கொண்டு குண்டுதுளைக்காத கண்ணாடியால் பாது காக்கப்பட்டு வருகிறது. தனது விக்கால் ஓவியம் பாதிக்கப்படாததைக் கண்ட நபர் தான் கொண்டுவந்திருந்த கேக்கை குறிபார்த்து வீசினார். அதுவும் கண்ணாடியில் மோதி விழ, இந்த தாக்குதல் முயற்சியை சிலர் படம் பிடித்தனர். இந்தப் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மோனலிசா மேல என்ன ஆத்திரம்?

Advertisment

hh

சாதிப் பாகுபாடு குறித்த ஓர் உரையை சாதி ஆதரவாளர்கள் எதிர்த்ததன் காரணமாக, கூகுள் நிறுவனம் ரத்து செய்துள்ளது. அமெரிக்காவில் செயல்படும் சமத்துவத்துக் கான ஆய்வகம் எனும் தலித் அமைப் பின் செயற்பாட்டாளர் தேன்மொழி சௌந்திரராஜன். கடந்த மாதம் கூகுளில் தேன்மொழி பேச ஏற்பாடு செய்யப்பட் டிருந்த உரையை, அதற்கு ஏற்பாடு செய்த தனுஜா குப்தா மீது கூகுளில் பணியாற்றும் இந்தியப் பணியாளர்கள் அவதூறுகளைப் பரப்பி நிகழ்ச்சியை ரத்து செய்ததோடு, தனுஜா வேலையை விட்டு விலகவேண்டிய நெருக்கடிகளுக்கும் உள்ளாக்கியிருக்கின்றனர். இது சர்வதேச அளவில் சர்ச்சையாகியுள்ள நிலையில், தமது நிறுவனத்தில் எந்தவித சாதிப் பாகுபாடும் நிலவவில்லை என கூகுள் மறுத்துள்ளது. ஜாதிக்கும் பாஸ்போர்ட், விசா எடுக்கிறவங்க திருந்தணும்!

-நாடோடி