Advertisment

மாநிலம்-தேசியம்-சர்வதேசியம்!

news

ரு புகைப்படம் என்னவெல்லாம் செய்யும்? புகைப்படத்தில் இருப்பது எல் நெஸலும் அவரது மகன் முஸ்தபாவும். சிரியாவின் போர் நடவடிக்கைகளால் நெர்வ் கேஸ் தாக்குதலுக்குள்ளான முஸ்தபாவின் தாய், அதன் பின்விளைவால் இடுப்புக்குக்கீழ் உடலேயில்லாத முஸ்தபாவைப் பெற்றெடுத்தார். போரில் குண்டுவெடிப்புக்கு உள்ளான நெஸலின் கால் சிகிச்சையின்போது வெட்டியெடுக்கப்பட்டது.

Advertisment

nn

தந்தையும் மகனும் கொஞ்சிக்கொள்ளும் ஒரு அரிய தருணத்தை மெஹ்மத் அஸ்லன் எனும் புகைப்படக் கலைஞர் பதிவுசெய்ய, சியன்னா புகைப்பட போட்டியில் விருதுவென்றது. கூடவே முஸ்தபாவுக்கும் அவரது குடும்பத்துக்கும் வாழ்க்கையை ஈட்டித்தந்திருக்கிறது. மனிதாபிமான அடிப்படையில் இத்தாலியில் முஸ்தபா குடும்பத்துக்கு புகலிடம் வழங்க கத்தோலிக் டயோசஸ் ஏற்பாடு செய்திருக்கிறது.

Adve

ஒரு க்ளிக்கில் வாழ்க்கையே மாறியிருக்கிறது!

nn

திருச்சி சென்னை நெடுஞ்சாலையருகே 24 குரங்குகள் இறந்துகிடந்தது வன இலாகா அதிகாரி களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. திருச்சி மாவட்டம் நெடுங்கூர் கிராமமருகே விவசாய நிலத்துக்கு அருகில் குரங்குகள் கும்பலாக இறந்துகிடந்ததாக தகவல் வந்துள்ளது. இதையடுத்து வன இலாகா அதிகாரி கோபிநாத் தலைமையில் அதிகாரிகள் அங்கு சென்று பார்த்தனர். அங்கே இறந்து கிடந்த குரங்குகள் அதிகபட்சமாக 2 வயதுக்குட்பட்டவை. அவற்றில் 6 குரங்குகள் பெண் எனவும் மற்றவை ஆண் எனவும் தெரியவந் துள்ளன. சிறிய கூண்டில் அளவுக்கதிகமாக அடைக் கப்பட்டு மூச்சுத் திணறல் காரணமாக இறந்திருக்க லாம் என யூகிக்கும் அதி காரிகள், “"தெளிவான கார ணம் போஸ்ட்மார்ட்டத்துக் குப் பின்பே தெரியவரும், குற்றவாளிகளைப் பிடிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது'' என்கிறார்கள்.

இது யார் செஞ்ச குரங்குச் சேட்டையோ?

சைக்கிள் கேப் கிடைத்தால் அதில் பஸ் ஓட்டுவதில் கெட்டிக்காரர்கள் ஊழல் பேர்வழிகள். பீகாரில் அரசுப் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளின் சுகாதாரத்துக்காக, பீகார் அரசு நாப்கின் வாங்க நிதி வழங்கிவருகிறது. இதற்காக பீகார் அரசின் சார்பில் ஆண்டுக்கு 60 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இந்நிலையில் சாரன் மாவட்டத்தில் நாப்கின் செலவுக்கான கணக்கு வழக்குகளைத் தணிக்கை செய்யும்போது, 7 மாண வர்கள் பெயரும் அதில் இடம்பெற்றிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள் ளது. அத்துடன் அனைத்துப் பள்ளிகளிலும் நாப் கினுக்காகப் பணம்பெற்றவர்கள் பட்டியலை எடுத்துக் கொண்டு கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு ஆராயத் தொடங்கியிருக் கிறார்கள் அதிகாரிகள்!

இட்ஸ் வெரி பேடு!

குடியரசு தின விழாவில் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்க மாநிலங்களின் அலங்கார ஊர்திகளில் வேலு நாச்சியார், வ.உ.சி., நாராயண குரு, சுபாஷ் போன்றோரின் உருவங்கள் இடம்பெற்றிருந்த நிலையில் அந்த ஊர்திகள் பல்வேறு காரணங்களைக் கூறி நிராகரிக்கப்பட்டது தேசிய அளவில் சர்ச்சையானது. அந்த சர்ச்சை மறையு முன்னே புதிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறது மத்திய அரசு. குடியரசு தினக் கொண்டாட்டத்தில் படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சியில் பாடப்படும் தேசப்பிதா காந்திக்கு மிகவும் பிடித்த "என்னுடன் இணைந்திருங்கள்'’என்ற பாடலை ராணுவம் நீக்கி யுள்ளது. அதற்குப் பதிலாக "ஓ என் நாட்டு மக்களே'’ என்ற புதிய பாடலை இணைத்துள்ளது. "ஹென்றி பிரான்சிஸால் எழுதப்பட்ட கிறித்துவப் பாடல் என்பதே மத்திய அரசின் பாடல் நீக்கத்துக்கு காரணம்' என விமர்சனம் எழுந்துள்ளது.

தேசப்பிதாவை மாற்றினாலே ஆச்சரியமில்லைங்க!

nn

லகையே வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கிறது ஒமிக்ரான். அதிகரிக்கும் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கையை அடுத்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தனது திருமணத்தை தள்ளிவைத் திருக்கிறார். அந்நாட்டு அமைச்சரான கிரிஸ் ஹிப்கின், "நியூசிலாந்து மக்களில் பலருடைய விடு முறைத் திட்டங்கள் ஒமிக்ரானால் வீணாகி யிருக்கிறது. கொரோனா பரவலைத் தடுக்க நாட்டின் எல்லைகளில் கடுமையான நடவடிக்கைகள் பின்பற்றப் படுகின்றன. வரும் கோடை யில் பிரதமரின் திருமணம் நடைபெறலாம்''”என தெரிவித்துள்ளார்.

கல்யாணம் லேட்டா னாலும் நோயாளிகள் தான் "லேட்". ஆகக்கூடாது.

-நாடோடி

nkn290122
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe