ஜ் பயணத்துக்கான தென் மாநிலங்களின் விமான முனையமாக சென்னை விமான நிலையம் இருந்ததை மாற்றி, கொச்சியை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிராக பாராளு மன்றத்தில் பேசிய டி.ஆர். பாலு, “"எந்த முன்னறிவிப்பு மின்றி இந்த மாற்றத்தை மத்திய அரசு செய்திருக் கிறது. தமிழக பயணிகள் தேவையின்றி 700 கி.மீ சென்று விமானம் பிடிக்க வேண்டியுள்ளது''’என்று எதிர்ப்பை வெளிப் படுத்தினார்.

trbalu

Advertisment

இதற்குப் பதிலளித்த முக்தார் அப்பாஸ் நக்வி, “"முன்பு 21 இடங் களிலிருந்து ஹஜ் பயணம் கிளம்பிச் சென்றனர். கொரோனா தடை உத்தரவு காரண மாக 10 இடங்களாக அது மாற்றப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கு சவுதி அரேபிய அதிகாரிகளும் காரணம்'' என பதிலளித்தார். இந்த பதிலை ஏற்கமுடியாதென்ற டி.ஆர்.பாலு, மீண்டும் சென்னையை முனையமாக்கவேண்டுமென மறுப்புத் தெரிவித்தார். சென்னைக்கு என்ன குறைச்சல்!

லகின் 173 நகரங்களை உள்ளடக்கி "மிகவும் செலவு பிடிக்கும் நகரம்' என்ற தலைப்பில் ஐரோப்பாவின் பொருளாதார புலனாய்வுப் பிரிவு ஆய்வொன்றை நடத்தியது. என்னதான் பெரியண்ணனாக அமெரிக்கா இருந்தாலும், உலகின் மிகவும் செலவு பிடிக்கும் நகரங்கள் வரிசையில் அமெரிக்காவால் முதல் மூன்று இடங்களுக்குள் வர முடியவில்லை. இஸ்ரேலின் டெல் அவிவ் முதலிடத்தையும், பாரீஸும் சிங்கப்பூரும் இரண்டாமிடத்தையும், மூன்றாமிடத்தை ஜூரிச்சும் பிடித்துள்ளன. இதில் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் டாப் டென்னுக்குள் வராவிட்டாலும் அதிகம் செலவு வைக்காத நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் அகமதாபாத் ஏழாவது இடம் பிடித்துள்ளது. ஆசியாவே ஏழைக் கண்டம்தானே!

ii

Advertisment

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கூடி ஓராண்டாக விவசாயிகள் போராடிவந்ததால், சுங்கச் சாவடி வருவாயில் ரூ.2731 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் சுமார் 65 சுங்கச்சாவடிகளில் சுங்கம் வசூலிக்க முடியாததால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். விரைவில் இந்த சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதற்கான முயற்சி களைத் தொடர மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. சட்டம் போட்டு இந்த அரசு நட்டத்தைத்தான் சம்பாதிச்சுதாக்கும்!

திவுத்துறையில், சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவித்த அதே தினத்தில் அ.தி.மு.க. அரசு 116 சார்பதிவாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கியிருந்தது. தற்போது இதனை பதிவுத்துறை ஐ.ஜி. சிவன்அருள் அதிரடியாக ரத்துசெய்து உத்தரவு பிறப் பித்துள்ளார். கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி இப்படி பதவி உயர்வு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், எவ்விதமான நடைமுறையைப் பின்பற்றலாமென ஆலோ சனை செய்தது. இதனடிப் படையில் ஐ.ஜி. இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். துயரத்தைப் பதிவு செஞ்சுட்டு சந்தோஷத்தை கேன்சல் செஞ்சுட்டாங்களே!

j

கொரோனா விதிமுறைகளைக் காரணம் காட்டி நாடாளுமன்றத்தில் நுழைவதற்கு செய்தியாளர் களுக்கும் புகைப்பட பத்திரிகையாளர்களுக்கும் கட்டுப்பாடுகள் அதிகரிக் கப்பட்டிருப்பதற்கு பல்வேறு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் எதிர்ப்புத் தெரிவித்து டெல்லியில் போராட்டம் நடைபெற்றது. வருங்காலத்தில் நாடாளுமன்றச் செய்திகளை செய்தி யாளர்கள் நேரடியாக வழங்குவதற்கு முழுமையாகத் தடை விதிப்பதற்கான முன்னோட்டமாக இந்தக் கட்டுப்பாடு தெரிகிறதென சங்கத்தின் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. சுய சிந்தனை ஒரு பெருங்குற்றம் -சுதந்திரம் ஒரு பாவச்செயல் -அரசுக்கு அடிபணியாமை- மனித நேயமற்றதுனு சொன் னாலும் சொல்வாங்க.

cc

ம்மு-காஷ்மீரில் மனித உரிமைகள் ஆர்வலர் குர்ரம் பர்வேஸ் உபா சட்டத்தின்கீழ் கைது செய்யப் பட்டமைக்கு ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ரூபெர்ட் கால்வில் கவலை தெரிவித்ததோடு இது தொடர்பாக விரிவான, வெளிப் படையான விசாரணை நடத்தப்படவேண்டும் என தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்தியத் தரப்பில் இது ஆதாரமற்ற கருத்து. சட்டவிதிகளுக்கு உட்பட்டே குர்ரம் கைது செய்யப் பட்டுள்ளதாக இந்தியாவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆதாரமா? ஜம்மு- காஷ்மீர்ல நடக்கிற சேதாரம் போதாதா?!

ff

"கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் சாவு' என்பது பழமொழி. மார்கஸ் லாம்பின் மரணம் அதை மெய்ப்பித்துள்ளது. மார்கஸ் யார் என்கிறீர்களா? அமெரிக்காவில் கிறிஸ்டியன் டெலிவிஷன் நெட்வொர்க் சேனலின் உரிமையாளர். உலகம் முழுவதற்கும் அச்சுறுத்தலாகத் திகழும் கொரோனாவுக்கு தடுப்பூசி போடுவதை விமர்சித்து தனது சேனல் மூலம் பிரச்சாரம் செய்துவந்தார். அவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளான மார்கஸ், சிகிச்சை பலனின்றி பலியானார். தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் இன்னொரு முறை யோசிங்க!

-நாடோடி