மாநிலம் தேசியம் சர்வதேசம்!

dd

தேசிய மனித உரிமை ஆணையம் இந்தியாவின் ஆறு மாநிலங்களைச் சேர்ந்த தலைமைச் செயலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிர மாநிலங்களில் பல கோயில்களில் தேவதாசி முறை தொடர்வதாக பத்திரிகை ஒன்றில் செய்தி வந்துள்ளது. இதுவே ஆணையம் நோட்டீஸ் அனுப்புவதற்கான காரணம். தேவதாசி முறையைத் தடுக்கவும், பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் பற்றி அந்த நோட்டீஸிஸ் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாம். வெறும் சம்பிரதாய நடவடிக்கையாக இல்லாமல், உண்மையிலேயே இந்த மாநிலங்களில் தேவதாசி நடைமுறை நடப்பிலிருந்தால், அவற்றைத் தடுப்பதற்கு தேசிய மனித உரிமை ஆணையம் தீவிர நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இன்னும் எத்தனை முத்துலெட்சுமி அம்மையார் பிறக்கணுமோ!

dd

டெல்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா உள்பட ஆறு பேர் நக்சல்களுடன் தொடர்பு வைத்திர

தேசிய மனித உரிமை ஆணையம் இந்தியாவின் ஆறு மாநிலங்களைச் சேர்ந்த தலைமைச் செயலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிர மாநிலங்களில் பல கோயில்களில் தேவதாசி முறை தொடர்வதாக பத்திரிகை ஒன்றில் செய்தி வந்துள்ளது. இதுவே ஆணையம் நோட்டீஸ் அனுப்புவதற்கான காரணம். தேவதாசி முறையைத் தடுக்கவும், பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் பற்றி அந்த நோட்டீஸிஸ் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாம். வெறும் சம்பிரதாய நடவடிக்கையாக இல்லாமல், உண்மையிலேயே இந்த மாநிலங்களில் தேவதாசி நடைமுறை நடப்பிலிருந்தால், அவற்றைத் தடுப்பதற்கு தேசிய மனித உரிமை ஆணையம் தீவிர நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இன்னும் எத்தனை முத்துலெட்சுமி அம்மையார் பிறக்கணுமோ!

dd

டெல்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா உள்பட ஆறு பேர் நக்சல்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி 2014-ஆம் ஆண்டு உபா சட்டத்தில் கைதுசெய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த கட்சிரோலி மாவட்ட நீதிமன்றம் 6 பேருக்கும் ஆயுட்தண்டனை விதித்தது. இதை எதிர்த்து 6 பேரும் மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த ரோகித் தியோ, அனில் பன்சாரே அமர்வு, ஆறு ஆண்டுகளாக சிறையிலிருக்கும் அனைவரையும் விடுதலை செய்வதாக அறிவித்தது. கைதுசெய்யப்பட்டவர்களில் நரோட்டா, சிறையிலேயே உடல்நலக் குறைவால் இறந்தார். சாய்பாபாவும் உடல்நலக் குறைவால் அவதியுறுவதாகவும், சரியான சிகிச்சை கிடைக்கவில்லை எனவும் புகார் எழுந்தது. இந்நிலையில் அரசுத் தரப்பில் அவசர வழக்காக அணுகியதால், உயர்நீதிமன்ற உத்தரவை நிறுத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இனி எப்ப ரிலீஸோ!

ff

ணத்துக்கு மட்டும்தான் ஏ.டி.எம். வரவேண்டுமா என்ன? பெங்களூரு நகரில் தொழிலதிபர்கள் ஷரன் ஹிரேமத், சுரேஷ் சந்திரசேகரன், இட்லிக்கும் ஏ.டி.எம். மிஷினை அறிமுகம் செய்துள்ளார்கள். அதாவது, 24 மணி நேரமும் இயங்கும் இந்த எந்திரத்தில் இட்லி, சட்னி, சாம்பார், பொடி அத்தனையும் கிடைக்கும். தேவையான இட்லி, சட்னி வகைகளை தேர்வுசெய்து க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் செலுத்திவிட்டால் ஒரே நிமிடத்தில் சுடச் சுட இட்லி கிடைத்துவிடும். எல்லாவற்றுக்கும் ஒரு முன்கதைச் சுருக்கம் இருப்பதுபோல, இந்த இட்லி இயந்திரத்துக்கும் ஒரு முன்கதைச் சுருக்கம் உண்டாம். ஹிரேமத்தின் மகள் உடல்நலமில்லாமல் இருந்த இரவில் கடைகடையாக அலைந்தும் இட்லி கிடைக்கவில்லையாம். அதன் தாக்கத்தில் இந்த இட்லி எந்திரத்தைக் கண்டுபிடித் திருக்கிறார். இட்லிப் புரட்சி!

ssசுபாஷ் கபூரை நினைவிருக்கிறதா? சிலைக் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக ஜெர்மனி அரசால் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டவர். உடையார்பாளையம் சிலைக் கடத்தல் வழக்கு உட்பட இவர்மீது ஐந்து சிலைக் கடத்தல் வழக்குகள் உள்ளன. இந்தியரானாலும் சுபாஷ் கபூர் ஜெர்மனிய குடியுரிமை உடையவர். உடையார்பாளையம் வழக்குக்காக குற்றவாளிகளைப் பரிமாறிக்கொள்ளும் சர்வதேச ஒப்பந்தத்தின்கீழ் ஜெர்மனியிலிருந்து சுபாஷ்கபூர் இந்தியா கொண்டுவரப்பட்டார். 2011-ல் ஒப்படைக்கப்பட்டவர் மேல் 2017-ல்தான் குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், வழக்கு நிலுவையில் உள்ளதையும், சுபாஷ் சிறையில் 10 வருடங்கள் இருப்பதையும் சுட்டிக்காட்டி, சுபாஷை திருப்பியனுப்பக் கோருகிறது. இதையடுத்து உடையார்பாளையம் சிலைக் கடத்தல் வழக்கைத் துரிதப்படுத்த தமிழக தலைமைச் செயலாளர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் தண்டனை பெற்றாலும், 10 வருடம் சிறையில் இருந்ததைக் காரணம் காட்டி விடுதலையாகவே வாய்ப்பு அதிகம். அப்போ மற்ற நான்கு சிலைக் கடத்தல் வழக்குகள்? அடுத்த நாட்டு குடியுரிமையால இத்தனை ஆதாயமிருக்குதா?

2022-ஆம் ஆண்டுக்கான க்ளோபல் ஹங்கர் இன்டெக்ஸ் மதிப்பீட்டில் இந்தியா 107-வது இடம்பிடித்துள்ளது பலரையும் அதிரவைத்துள்ளது. 2020-ல் 94-வது இடத்திலிருந்த இந்தியா, 2021-ல் 101-வது இடத்துக்கு உயர்ந்தது. மொத்தத்திலே 120 நாடுகள் வரையே பங்கேற்கும் இந்தப் பட்டியலில் 107-வது இடம் என்பது மோசமான பின்னடைவாகும். இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளையும் பிந்தியுள்ளது. இந்தப் பட்டியலில் நம் அண்டை நாடுகளில் ஆப்கானிஸ்தான் மட்டுமே இந்தியாவைவிட மோசமான நிலையில் உள்ளது. தவிரவும் போஷாக்கில்லாத குழந்தைகளின் விகிதமும் 16.3 விகிதத்திலிருந்து 19.3 விகிதமாக உயர்ந்துள்ளது. உக்ரைன் போரால் உலகளவில் பல நாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் சில பிரச்சனைகள் உலக அளவில் எழுமானால், இந்தியா உள்பட பல நாடுகளில் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 94--ருந்து 107-வது இடம்கிறது முன்னேற்றம்தானே!

-நாடோடி

nkn221022
இதையும் படியுங்கள்
Subscribe