Advertisment

மாநிலம் தேசம் சர்வதேசம்!

news

பா.ஜ.க.வும் சங்கிகளும் பரப்பும் "கேரளா ஸ்டோரி' ஒருவிதமாய் இருக்கிறதென்றால், கேரளாவின் காசர்கோடு முஸ்லிம் தம்பதி தாங்கள் வாழ்க்கையின் மூலம் முன்வைக்கும் கேரளா ஸ்டோரி வேறுவிதமாய் இருக்கிறது. அப்துல்லாவும் கதீஜாவும் முஸ்லிம் தம்பதிகள். காசர்கோடுதான் அவர்களது வசிப்பிடம்.

Advertisment

nn

பத்து வயதில் ஒரு இந்துப் பெண் தன் பெற்றோர் இருவரையும் இழந்து அநாதையானபோது அவளை இந்த முஸ்லிம் தம்பதி தத்தெடுத்துக்கொண்டது. பின் அவளை வளர்த்து, படிக்கவைத்து அவளது இருபத்து இரண்டு வயதில் ஒரு இந்து வரனைத் தேடிப்பிடித்து திருமணம் செய்துவைத்து ஆசிர்வதித்து அனுப்பியிருக்கிறது. இது பலரையும் மனம்நெகிழ வைத்திருப்பதுடன் கேரளாவெங்கும் இச்செய்தி வைரலாகிவருகிறது. இதுதானே பரப்பவேண்டிய ஸ்டோரி!

Advertisment

news

த்தரப்பிரதேச மாநிலத்தில் நடை பெ

பா.ஜ.க.வும் சங்கிகளும் பரப்பும் "கேரளா ஸ்டோரி' ஒருவிதமாய் இருக்கிறதென்றால், கேரளாவின் காசர்கோடு முஸ்லிம் தம்பதி தாங்கள் வாழ்க்கையின் மூலம் முன்வைக்கும் கேரளா ஸ்டோரி வேறுவிதமாய் இருக்கிறது. அப்துல்லாவும் கதீஜாவும் முஸ்லிம் தம்பதிகள். காசர்கோடுதான் அவர்களது வசிப்பிடம்.

Advertisment

nn

பத்து வயதில் ஒரு இந்துப் பெண் தன் பெற்றோர் இருவரையும் இழந்து அநாதையானபோது அவளை இந்த முஸ்லிம் தம்பதி தத்தெடுத்துக்கொண்டது. பின் அவளை வளர்த்து, படிக்கவைத்து அவளது இருபத்து இரண்டு வயதில் ஒரு இந்து வரனைத் தேடிப்பிடித்து திருமணம் செய்துவைத்து ஆசிர்வதித்து அனுப்பியிருக்கிறது. இது பலரையும் மனம்நெகிழ வைத்திருப்பதுடன் கேரளாவெங்கும் இச்செய்தி வைரலாகிவருகிறது. இதுதானே பரப்பவேண்டிய ஸ்டோரி!

Advertisment

news

த்தரப்பிரதேச மாநிலத்தில் நடை பெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அம்மாநிலத் தின் 17 மாநகராட்சி களிலும் பா.ஜ.க. பிற கட்சிகளைவிட அதிக வார்டுகளை வென்றுள் ளது. அதாவது 16 மேயர் போஸ்டுகளை யும் பா.ஜ.க. வென்றுள் ளது. பதினேழாவது மேயர் போஸ்டில் மட்டும் கொஞ்சம் சிக்கல். அது வேறெந்த மாநகராட்சியும் அல்ல,… எந்த ராமர் பெயரைச் சொல்லி இந்திய அளவில் பா.ஜ.க. கவனம்பெற்ற தோ அந்த அயோத்தி மாநகராட்சிதான். இங்கு பா.ஜ.க.தான் அதிக வார்டுகளில் வென்றுள்ளது. எனினும் அதற்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதாவது மொத்தமுள்ள 60 வார்டுகளில் 27-ல் மட்டுமே பா.ஜ.க. வென்றுள்ளது. சமாஜ்வாதி 17 இடங்களிலும் சுயேட்சைகள் 10 இடங் களிலும் வென்றுள்ளனர். இதனால் சுயேட்சை வேட்பாளர்களின் காட்டில் மழை கொட்டி வருகிறது. அதிலும் அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ள குறிப்பிட்ட வார்டில் சுல்தான் அன்சாரி என்ற இஸ்லாமிய இளைஞர் வெற்றிபெற்றுள்ளார். இந்த தொகுதியில் பா.ஜ.க. மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. ராமரோட சோதனை பெரிசா இருக்கே!

newsபிரெஞ்சுக் குடி யரசின் மதிப்புக்குரிய விருதுகளில் ஒன்றான செவாலியே விருது வாங்கிய பெண் கல்வியாளர்களில் ஒருவரான மதன கல்யாணி, தனது 84 வயதில் மறைந்திருக்கிறார். இவர் வெறுமனே பணி ஓய்வு பெற்ற பேராசிரியர் மட்டுமல்ல...… எழுத்தாளர், கவிஞர், மொழி பெயர்ப்பாளரும் கூட. தமிழ்நாடு- புதுச்சேரி இரண்டிலும் செவாலியே விருதுபெற்ற முதல் பெண் இவராவார். தனது பணியில் சிறந்து விளங்கியமைக்காக 2011-ஆம் ஆண்டு பிரெஞ்சு அரசு வழங்கிய செவாலியே விருதை இவர் பெற்றார். தமிழிலும்- பிரெஞ்ச் மொழியிலும் சிறந்து விளங்கிய இவர், பல்வேறு பிரெஞ்ச் நூல்களை தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார். அதேபோல் தமிழிலிருந்து சில நூல்களை பிரெஞ்சுக்கு மொழிபெயர்த்துள்ளார். ஆல்பர் காம்யூவின் கொள்ளை நோய் அவர் மொழிபெயர்த்த முக்கிய நூல்களில் ஒன்றாகும். செவாலியே மதன கல்யாணிக்கு அஞ்சலி!

கேரள மாநிலத்தின் "முழுக்க காப்பீடு செய்யப்பட்ட வார்டு' என்ற பெருமையைத் தட்டிச் செல்கிறது கலங்கும்முகல் newsவார்டு. கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த வார்டு, வறுமையில் வாடும் மக்களைக் கொண்டது. இருந்தும் தேசத்தின் முழுக்க காப்பீடு செய்யப்பட்ட முதல் வார்டு என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது. 5 முதல் 70 வயது வரையிலான அந்த வார்டின் 1,382 உறுப்பினர்களும் காப்பீடு வசதி பெற்றிருக்கிறார்கள். இதற்கான முயற்சியை மேற்கொண்டது அந்த வார்டு கவுன்சிலர் ஜி.ஜெயப்பிரகாஷ், "யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தின் ரூ 13.82 கோடி வரையிலான காப்பீட்டுப் பலனை இந்த வார்டைச் சேர்ந்தவர்கள் பெறுகிறார்கள். இவர்கள் எதிர்பாராத விபத்தில் இறந்தாலோ, உடல் ஊனத்துக்கு ஆளானாலோ இவர்களுக்கு காப்பீட்டின் பலன் கிடைக்கும். “அன்றாட வாழ்க்கை நடத்தப் போராடும் குடும்பங்கள் பெரும்பாலும் காப்பீடு எதுவும் எடுப்பதில்லை. ஏதாவது துயரம் நடக்கும்போது அவர்களுக்கு நிதி திரட்டுவதோ, நன்கொடை திரட்டுவதோ சிரமமாகிப் போகிறது. சமீபத்தில் நகராட்சி அலுவலகத்துக்கு வேலையாய் வந்த பெண் எலும்பு முறிவுக்கு உள்ளானார். அவரால் கொஞ்ச காலம் வேலைசெய்ய முடியாது. இத்தகைய சூழலில் காப்பீட்டுத் திட்டத்தின் பலனை நினைத்தபோதுதான் இந்தத் திட்டம் உருவானது''’என்கிறார் ஜெயப்பிரகாஷ். காப்பீட்டுக்கான பணத்தில் பாதியை கவுன்சிலரும் மீதியை புனலூரிலுள்ள புனித தாமஸ் மேல்நிலைப்பள்ளியும் வழங்கியிருக்கிறதாம். பலே கவுன்சிலர்!

-நாடோடி

nkn200523
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe