சமீபத்திய தரவொன்று பலரையும் ஒரேநேரத்தில் ஆச்சரியப்படவும் வேதனைப்படவும் வைத்துள்ளது. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மனநல மையங்களில் குணமானவர்கள் என அறிவிக்கப்பட்ட 3,100 பேர் இன்னும் திரும்ப அனுப்பப்படாமலே வைக்கப்பட்டுள்ளனராம். இதில் பெண்கள் 1827 பேர், ஆண்கள் 1298 பேர். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்தியா முழுவதும் மனநல மையங்களின் வசதிகள், எத்தனை பேர
சமீபத்திய தரவொன்று பலரையும் ஒரேநேரத்தில் ஆச்சரியப்படவும் வேதனைப்படவும் வைத்துள்ளது. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மனநல மையங்களில் குணமானவர்கள் என அறிவிக்கப்பட்ட 3,100 பேர் இன்னும் திரும்ப அனுப்பப்படாமலே வைக்கப்பட்டுள்ளனராம். இதில் பெண்கள் 1827 பேர், ஆண்கள் 1298 பேர். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்தியா முழுவதும் மனநல மையங்களின் வசதிகள், எத்தனை பேருக்கு சிகிச்சையளிக்க முடியும், அதில் தற்சமயம் சிகிச்சை பெறுபவர்கள் விவரம் போன்றவற்றை கணக்கிட டேஷ்போர்டு என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்தியாவில் 407 மனநல மையங்கள் உள்ளன. இவற்றில் 26,443 பேருக்கு சிகிச்சை தரலாம். தற்போதைய நவீன தரவுகளின்படி இந்த மையங்களில் தற்போது 13,615 பெண்களும், 8,971 ஆண்களும் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களை முழுமையாக அனுப்பிவைப்பது குறித்தும், அல்லது மனநல மையத்திலிருந்து மாற்றி ஓரளவு குணமானவர்களை வேறொரு இடத்தில் சிகிச்சை தருவது குறித்துமான ஆலோசனைகள் நடைபெற்றுவருகிறது. குணமானபிறகும் உள்ள வெச்சிருக்கிறது கொடுமைதான்!
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே அமைந்திருக் கிறது துலுக்கர்பட்டி. இதனருகே கண்ணநல்லூர் கிராமத்தின் அருகே நம்பியாற்றுப் பகுதியில் வாழ்வியல் மேடு காணப்படுகிறது. இதற்கு விளாங்காடு என்றும் பெயர். இப்பகுதியில் 2021-ல் அகழாய்வுப் பணி தொடங்கிவைக்கப்பட்டது. முதற்கட்ட அகழாய்வில் செவ்வண்ணம், கருப்பு- சிவப்பு நிறத்திலான மட்கல பானை ஓடுகள், இரும்பு ஆபரணங்கள், கண்ணாடி அணிகலன்கள் உள்ளிட்ட 1009 தொல்லியல் பொருட்கள் கிடைத்தன. அடுத்த கட்டமாக இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. அதில் ஈமத்தாழிகள், ஈட்டி, மோதிரம் உள்ளிட்ட 450 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தனித்தனியாக இப்பொருட்கள் சேகரிக்கப்பட்டு தில்லியிலுள்ள தொல்லியல் துறையின் ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளன. இரண்டு கட்ட அகழாய்விலும் நிறைய பொருட்கள் கிடைத்துள்ளதால், மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடக்க வாய்ப்புள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வரலாற்றையே தோண்டியெடுக் கிறாங்க!