Advertisment

மாநிலம் தேசம் சர்வதேசம்!

nws

"தி கேரளா ஸ்டோரி' என்ற பெயரில் 32,000 பெண்கள் மதம் மாற்றப்பட்டு, மூளைச் சலவை செய்யப்பட்டு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்ததாக ஒரு படம் வெளியாகியுள்ளது. கர்நாடகப் பிரச்சாரத்தின்போது அந்தப் படத்தை மோடி குறிப்பிட்டுப் பேசுமளவுக்கு அது இந்துத்துவ ஆதரவுப் படமாக உள்ளது. இந்தப் படத்தை அடிப்படை ஆதாரமற்ற படம் என கேரளாவில் காங்கிரஸும் கம்யூனிஸ்டுகளும் விமர்சித்து வருகின்றனர்.

Advertisment

news

இது ஒருபுறமிருக்க, கேரளாவின் 32,000 பெண்களைப் பற்றி பேசும் பிரதமர், தமது சொந்த மாநிலத்தில் காணாமல்போன பெண்களைப் பற்றிப் பேச மறுப்பதேன்? என சர்ச்சை எழுந்துள்ளது. 2016 முதல் 2020 வரையிலான ஐந்தாண்டு காலகட்டத்தில் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் மதிப்பீட்டின்படி குஜராத்தில் 40,000 பேர் காணாமல் போயுள்ளனர். 2016-ல் 7105, 2017-ல் 7712, 2018-ல் 9246, 2019-ல் 9268, 2020-ல் 8290 பேர் காணாமல் போயுள்ளனர். இந்தப் பெ

"தி கேரளா ஸ்டோரி' என்ற பெயரில் 32,000 பெண்கள் மதம் மாற்றப்பட்டு, மூளைச் சலவை செய்யப்பட்டு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்ததாக ஒரு படம் வெளியாகியுள்ளது. கர்நாடகப் பிரச்சாரத்தின்போது அந்தப் படத்தை மோடி குறிப்பிட்டுப் பேசுமளவுக்கு அது இந்துத்துவ ஆதரவுப் படமாக உள்ளது. இந்தப் படத்தை அடிப்படை ஆதாரமற்ற படம் என கேரளாவில் காங்கிரஸும் கம்யூனிஸ்டுகளும் விமர்சித்து வருகின்றனர்.

Advertisment

news

இது ஒருபுறமிருக்க, கேரளாவின் 32,000 பெண்களைப் பற்றி பேசும் பிரதமர், தமது சொந்த மாநிலத்தில் காணாமல்போன பெண்களைப் பற்றிப் பேச மறுப்பதேன்? என சர்ச்சை எழுந்துள்ளது. 2016 முதல் 2020 வரையிலான ஐந்தாண்டு காலகட்டத்தில் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் மதிப்பீட்டின்படி குஜராத்தில் 40,000 பேர் காணாமல் போயுள்ளனர். 2016-ல் 7105, 2017-ல் 7712, 2018-ல் 9246, 2019-ல் 9268, 2020-ல் 8290 பேர் காணாமல் போயுள்ளனர். இந்தப் பெண்கள் பெரும்பாலும் மாநிலத்துக்கு வெளியில் கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஒருவர் கொலையாகும்போது அந்த வழக்கில் காட்டும் தீவிரத்தை, காணாமல் போனவர்களின் வழக்கில் காட்டுவதில்லை காவல்துறை. கேரளாவில் காட்டும் அக்கறையில் கொஞ்சத்தை சொந்த மாநிலத்திலும் காட்டுவாரா பிரதமர்? ஒரு மாநிலத்திலேயே இத்தனை பெண்கள்னா?

Advertisment

சிகரெட் குடிப்பது உடல் நலனுக்குக் கேடு. அது பழைய ஆராய்ச்சி. சிகரெட் குடிப்பவர்கள் விட்டுச்செல்லும் சிகரெட் பட்ஸ்கூட சுற்றுச்சூழலுக்குக் கேடு இது புதிய ஆராய்ச்சி. சிகரெட் பட்ஸின் முனையில், சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கு தீங்கு பயக்கும் ஆயிரக்கணக்கான வேதிப்பொருட்கள், பிளாஸ்டிக் நாரிழைகள் உள்ளனவாம். ஸ்வீடனின் கோதன்பர்க் பல்கலைக்கழகம், சிகரெட்டின் பின்முனையிலுள்ள டாக்ஸின்களை வைத்து, நீரிலுள்ள கொசு லார்வாக்களின் மேல் ஒரு ஆய்வை மேற்கொண்டதாம். இந்த டாக்ஸின்களால் சூழப்பட்ட லார்வாக்கள் சாதாரண லார்வாக்களைவிட 20% உயிரிழப்புக்கு ஆளாகினவாம். ஒரு லிட்டர் நீரில் இரண்டு சிகரெட் பட்ஸின் முனையிலுள்ள டாக்ஸின்கள் நான்கு நாட்கள் கிடக்க நேர்ந்தால், அதில் வாழும் மீன் இறந்துபோகுமாம். மேலும் இதிலுள்ள மைக்ரோபிளாஸ்டிக்கும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கிறதாம். பில்டர் சிகரெட் குடிக்கிற பெருமான்கள் கவனத்துக்கு!

nn

ர்நாடகாவில் தேர்தல் நெருங்க நெருங்க வாக்காளர்கள் கவலையடைந் துள்ளனர். யெலஹங்கா தொகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு வந்த அழைப்பை, அவரது காலர் ஐடென்டிபிகேஷன் செயலி இந்திய தேர்தல் ஆணையம் என்ற பெயரில் காட்டியுள்ளது. தானியங்கிக் குரல் "நீங்கள் யாருக்கு வாக்களிக்க விரும்புகிறீர்கள்' எனக் கேட்டுள்ளது. அவருக்கு மட்டுமல்லாமல் பலருக்கும் இதேபோன்ற அழைப்பு வந்துள் ளது. இதுமட்டுமல்ல, ஒவ்வொரு கட்சியும் இந்தச் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என விளம்பரச் செய்தியை மொபைலுக்கு அனுப்பு கின்றன, எந்தக் கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என ஊடகங்கள் செல்போன்களுக்கு கேள்வியனுப்பி வாக்காளர்களைப் போட்டுப் படுத்தியெடுக்கின்றனவாம். இதுபோன்ற அத்துமீறல்கள் வாக்காளர்களைக் கவலை யடையச் செய்துள்ளது. உங்கள் தொகுதியின் பிரச்சனை என்ன என பதிவுசெய்யுங்கள், அதனை பிரதமர் கவனத்துக்கு அனுப்பிவைக்கிறோம் என்றும் பல அழைப்புகள் வந்துள்ளன. தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்தால், எங்களுக்கும் இப்படி நடப்பது தெரியவந்துள்ளது. சைபர் க்ரைமுக்கு புகார் செய்திருக்கிறோம் என சாவ காசமாகப் பதிலளிக்கிறார்களாம். சேஷன் செத்து ரொம்பநாளாச்சு!

ர்நாடகத் தேர்தல் அறிக்கையில் காங்கிரஸின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று ஆட்சிக்கு வந்தால் பஜ்ரங் தள் அமைப்பைத் தடைசெய்வோம் என்பதாகும். காங்கிர ஸின் இத்தகைய வாக்குறுதிக்குக் காரணம், பஜ்ரங் தள் அமைப்பு கர்நாடகத்தில் சட்டவிரோத வன்முறைகளில் இறங்குவதாகும். இந்த வாக்குறுதியால் கோபமடைந்த பஜ்ரங் தள் அமைப்பு, மத்தியப்பிரதேசத்தின் ஜபல்பூர் காங் கிரஸ் அலுவலகத்தைச் சூறையாடியுள்ளது. மத்தியப்பிர தேசத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. ம.பி. முதல்வர் சிவராஜ்சிங் சௌகான், சட்டவிரோத நட வடிக்கையில் ஈடுபட்ட சிலரது வீடுகளை உ.பி. பாணியில் புல்டோசரால் இடித்தார். காங்கிரஸ் அலுவலகம் தாக்கப்பட் டது குறித்து விமர்சித்த அம்மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் தினேஷ் யாதவ், “"இவர்களது வீட்டையும் புல்டோ சரால் இடிப்பாரா முதல்வர்?'’ என கேள்வியெழுப்பியுள்ளார். உள்ளூர் பஜ்ரங்தள் தலைவர் சம்மிட் தாக்கூர் தலைமையில் நூறுபேர் காவிக் கொடி, ஆயுதங்களுடன் வந்து தாக்கும் வீடியோ இருக்கும் நிலையிலும், வெறுமனே வழக்கு மட்டுமே பதிந்துள்ளது ஜபல்பூர் காவல் நிலையம். அச்சுறுத்தல் அரசியலா இருக்கே!

-நாடோடி

nkn130523
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe