Advertisment

மாநிலம் தேசம் சர்வதேசம்!

nn

திக் அகமது படுகொலைக்குப் பின், யோகியின் ஆட்சி குண்டர் களுக்கு சிம்மசொப்பன மாகத் திகழ்வதாகவும், சட்டத்தின் ஆட்சி திகழ்வ தாகவும் கூறுகிறார்கள் அவரின் ஆதரவாளர்கள். ஏளனச் சிரிப்பு சிரிக்கும் மறுதரப்போ சமீபத்திய நிகழ்வொன்றைச் சுட்டிக்காட்டி ஒரு கேள்வி எழுப்புகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவோ மாவட்டம் மௌர்வான் பகுதியைச் சேர்ந்த 14 வயதுப் பெண், பிப்ரவரி 13, 2022-ல் கூட்டுப் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானார். அத்தனை எளிதில் ஜாமீன் தரக்கூடாத இக்குற்றவாளிகள் அடுத்த மாதமே ஜாமீனில் வெளிவந்தனர். வந்தது முதலே பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பம் வழக்கை திரும்பப்பெற, குற்றவாளிகள் நெருக்கிவந்தனர்.

Advertisment

ee

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பம் அசைந்துகொடுக்காததால், பலாத்காரத்துக்கு ஆளான பெண்ணின் தந்தையை சில நாட்களுக்கு முன் இரும

திக் அகமது படுகொலைக்குப் பின், யோகியின் ஆட்சி குண்டர் களுக்கு சிம்மசொப்பன மாகத் திகழ்வதாகவும், சட்டத்தின் ஆட்சி திகழ்வ தாகவும் கூறுகிறார்கள் அவரின் ஆதரவாளர்கள். ஏளனச் சிரிப்பு சிரிக்கும் மறுதரப்போ சமீபத்திய நிகழ்வொன்றைச் சுட்டிக்காட்டி ஒரு கேள்வி எழுப்புகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவோ மாவட்டம் மௌர்வான் பகுதியைச் சேர்ந்த 14 வயதுப் பெண், பிப்ரவரி 13, 2022-ல் கூட்டுப் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானார். அத்தனை எளிதில் ஜாமீன் தரக்கூடாத இக்குற்றவாளிகள் அடுத்த மாதமே ஜாமீனில் வெளிவந்தனர். வந்தது முதலே பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பம் வழக்கை திரும்பப்பெற, குற்றவாளிகள் நெருக்கிவந்தனர்.

Advertisment

ee

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பம் அசைந்துகொடுக்காததால், பலாத்காரத்துக்கு ஆளான பெண்ணின் தந்தையை சில நாட்களுக்கு முன் இரும்புக் கோடாரியால் தாக்கியிருக்கின்றனர். அவர் இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி பலாத்காரத்துக்கு உள்ளான பெண் ணும் அவளது தாயும் வீட்டிலிருக்கையில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் வந்து மிரட்டியிருக்கின்றனர். அப்போதும் அப்பெண் வழக்கை திரும்பப் பெற மறுக்க, வீட்டையே கொளுத்திவிட்டனர். இதில் இரு குழந்தைகள் தீக்காயங்களுக்கு உள்ளாகியிருக்கின் றனர். அதில் ஒரு குழந்தை, பாலியல் பலாத்காரத் துக்கு உள்ளான பெண்ணின் குழந்தை. இதே உன்னாவோ மாவட்டத்தில் தான் கூட்டுப் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான மற்றொரு பெண், நீதிமன்றத்துக்கு வரும் வழியில் பலாத்காரம் செய்தவர்களால் தீவைத்துக் கொளுத்தப்பட்டாள். இதுபோல் ஆயிரம் உதாரணங்களைச் சொல்ல முடியும். இதுதான் யோகி ஆட்சியின் சட்டம் ஒழுங்கு லட்சணம். இத்தகைய வல்லுறவுக் கேடிகளை என்கவுண்டரில் சுடுவாரா யோகி?'' என் கின்றனர். நியாயமான கேள்விதான்!

ee

Advertisment

ன்பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தை பலரும் நாடிய நிலையில், இந்த வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்கிறது. இதுதொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்ய ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், எஸ்.கே.கவுல், எஸ்.கே. பட், ஹிமா கோலி, பி.எஸ். நரசிம்மா ஆகியோர் முன்பு அரசுத் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜராகி, “"தன்பாலினத்தவர் திருமணத்தை அங்கீகரிப்பது தொடர்பாக நாடாளுமன்றம் பரிசீலிக்கும் முன்பே மனுதாரர்கள் நீதிமன்றத்தை அணுகியது ஏன்? இந்த விவகாரத்தில் கற்றறிந்த 5 அறிவுஜீவிகள் முடிவெடுக்க முடியாது. இதனை நாடாளுமன்றக் குழுவிடம் விடுவது நல்லது''’எனக் கூற, பதிலுக்கு தலைமை நீதிபதி சந்திரசூட், “"நீதிமன்ற வழக்கு விசாரணையை எப்படி நடத்துவது என எங்களுக்கு நீங்கள் சொல்லித்தர தேவையில்லை''’என்றார். “இந்த வழக்கில் பங்கேற்பதில் அரசுக்குத் தயக்கமிருக்கிறது” என துஷார் தெரிவித்தார். இதற்கு நீதிபதிகள் ஆட்சேபனை தெரிவிக்க, நீதித்துறையுடனான அரசின் மோதல் போக்கும் மீண்டும் ஒருமுறை வெட்ட வெளிச்சமாகி யுள்ளது. நானா- நீயா?னு நீதியைக் கொன்னுடாதீங்க!

news

விமர்சனக் குரலை அதிகாரம் எப்போதும் விரும்பியதே இல்லை. அதிகாரம் எத்தனை பெரிதாக இருக்கிறதோ, விமர்சனக் குரலுக்கு எதிரான தண்டனையும் அதற்கேற்ப இருக்கும். ரஷ்யா, உக்ரைனுக்கு எதிராகப் போரிட்டு வருகிறது. இதனை தொடக்கம் முதலே எதிர்த்துவந்தவர் விளாடிமிர் காரா முர்ஸா. 41 வயதான காராவுக்கு ரஷ்ய நீதிமன்றம் தேசத்துரோக குற்றச்சாட்டில் 25 வருடம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. ரஷ்யாவின் போரின் நோக்கத்தை ஆரம்பம் முதலே கேள்வியெழுப்பிவந்தார் காரா முர்ஸா. ஆகஸ்ட் 2022-ல் இவர் மீது ரஷ்ய அரசு குற்றம்சாட்டியது. ரஷ்யாவுக்கு வெளியே மாஸ்கோவைக் குற்றம்சாட்டிப் பேசியதாக புகாரெழுந்தது. காரா மீதான விசாரணை வெளிப்படையானதாக இல்லாமல் மூடிய நீதிமன்றத்துக்குள் நடத்தப்பட்டது. அதாவது, நீதிமன்ற நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தப்படாது. அவர் என்ன விசாரிக்கப்பட்டார், என்ன பதிலளித்தார் என யாருக்குமே தெரியாது. இருந்தபோதும் காரா அசாதாரண துணிச்சலுடன், “"நான் சொன்ன ஒவ்வொரு வார்த்தைக்கும் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். அவற்றைச் சொன்னதற்காக இப்போதும் நான் வருந்தவில்லை. பெருமிதமேபடுகிறேன்''’என்றிருக்கிறார். சுதந்திரத்தின் விலை ஆயுள்தண்டனை!

nkn260423
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe