துரையைச் சேர்ந்த செந்தில்குமரனுக்கு வேர்ல்டுபிரஸ் போட்டோ விருது கிடைத்துள்ளது. 130 நாடுகளைச் சேர்ந்த 4066 பேர் பங் கேற்றதில் இவருக்கும் விருது கிடைத் துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆவணப் படங்கள், வனவிலங்குகள் குறித்த புகைப் படங்களில் ஆர்வமுள்ள இவர், புவியியல் புகைப்படக் கலைஞர் விருது, நேஷனல் ஜியோக்ராபி இதழ் போட்டியில் விருது என 13-க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வென்றுள்ளார்.

Advertisment

ff

மனிதனுக்கும் புலி களுக்குமான மோதல், யானைகள்- பாகன்கள் என பல்வேறு தலைப் பில் நீண்ட காலமும் உழைப்பும் எடுக்கும் புகைப்பட ஆல்பங் களை உருவாக்கியவர். அவரது வெற்றிமகுடத்தில் வேர்ல்டுபிரஸ் விருது இன்னொரு வைரக்கல்! விருது முயற்சி "க்ளிக்" ஆயிடுச்சு!

ம்தா குர்ஜாரைத் தெரியுமா? இந்திய பெண்கள் கால்பந்து அணியின் விளையாட்டு வீரர்களுள் ஒருவர். அவரிடம் அப்படி என்ன சிறப்பு என்கிறீர்களா? ஆறு வருடங்களுக்கு முன் கால்பந்து ஆட்டத்தைப் பற்றியே மம்தாவுக்குத் தெரியாது. குழந்தைத் திருமணம் என்னும் சிக்கலில் சிக்கவிருந்த மம்தா, அதிலிருந்து அதிர்ஷ்டவசமாகத் தப்பித்தார்.

Advertisment

ff

அப்போதிருந்து கால்பந்து ஆட்டத்தில் கவனத்தைத் திருப்பிய மம்தா, இந்திய அணியில் இடம்பிடிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார். ராஜஸ்தானைச் சேர்ந்த மம்தா, கூகுளின் போஸ்டர் கேர்ள் ஆக இடம்பிடிக்கும் அளவுக்கு வளர்ந்ததுடன் நின்றுவிடா மல், சர்வதேச அளவிலும் சாதனை படைக்க வாழ்த்துவோம்! மம்தானாலே போராட்ட உணர்வுதான் போல!

ரண்டாண்டு கால கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பொருளாதார பாதிப்பை மட்டும் ஏற்படுத்த வில்லை. வேறுசில பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. அவற்றுள் முக்கியமானது காசநோய் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை அதிகரிப்பு. இந்தியாவில் 2020-ஆம் ஆண்டைவிடவும், 2021-ல் 19 சதவிகிதம்பேர் கூடுதலாக காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2020-ல் 16,28,161 பேர் காசநோய்த் தொற்றுக்கு ஆளாகியிருந்த நிலையில், 2021-ல் 19,33,381 பேர் காசநோய்த் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். அதேபோல காசநோயால் ஏற்படும் மரணத்தை எடுத்துக்கொண்டாலும், 2019-ஐ விட 2020-ல் 13 சதவிகிதம் பேர் அதிகமாக இறந்துள்ளனர். 2020-ல் மட்டும் இந்தியாவில் 5 லட்சம் பேருக்கு நெருக்கமாக காசநோயால் இறந்துள்ளனர். ஆரம்பத்திலே கண்டறிந்தால் குணப்படுத்தும் நோய்தான் இது. காசநோயாளர்கள் கவனம்!

Advertisment

ss

ங்கணாவின் தலையில் குட்டுவைத்திருக்கிறது மும்பை மெட்ரோபாலிட்டன் நீதிமன்றம். 2020-ல் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் குறித்து இழிவாகப் பேச வழக்குத் தொடுத்துவிட்டார் அவர். கடந்த இரண்டு வருடமாக நீதிமன்றத்திலிருக்கும் அந்த வழக்கில், தான் பிரபலமான நடிகை. பல்வேறு இடங்களுக் கும் வெளிநாடுகளுக்கும் ஷூட் போகவேண்டியிருக்கிறது. எனவே நீதிமன்றத்தில் ஆஜ ராவதிலிருந்து நிரந்தர விலக்களிக்கவேண்டு மெனக் கோரினார். கங்கணா செலிபி ரிட்டியாக இருக்க லாம். ஆனால் இந்த வழக்கில் பிணையில்தான் வெளியிலிருக் கிறார். அவர் இஷ்டப்படி நடந்து கொள்ளமுடி யாது. சட்டப்படி தான் நடந்து கொள்ளவேண்டும் என குட்டு வைத்திருக்கிறார் நீதிபதி. ஓணானை மடியில விடுமுன்னே யோசிச்சிருக்கணும்!

ப்கனில் ஏழு மாதங்களாக 6-ஆம் வகுப்புக்கு மேலுள்ள மகளிர் பள்ளிகள் மூடப்பட்டு இருக்கின்றன. இஸ்லாமிய சட்டப்படியும் ஆப்கன் கலாச்சாரப்படியும் திட்டங்கள் வரையறுக்கப்படும்வரை பள்ளிகள் மூடியே இருக்கும் என தலிபான் அரசு அறிவித்துள்ளது. ஆண்-பெண் இணைந்து படிக்கும் பள்ளியில் பெண்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கெதிராக பல பெண்கள் கதறியழ, இன்னும் பலர் போராடிவருகின்றனர். ஆப்கன் அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக 16 நாடுகளைச் சேர்ந்த அயலுறவுத் துறை அமைச்சர்கள் (அனைவருமே பெண்கள்), தலிபான் கள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்து பள்ளிகளைத் திறக்கவும் பெண்களை அனுமதிக்கவும் வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். ஐ.நா.விலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களால் இந்தக் கோரிக்கை வலியுறுத்தப் பட்டுள்ளது. பெண் என்றால் த-பான் இரங்குமா!

யிராபத்து மிக்க, அதேசமயம் உலகமெங்கும் பரவலாகக் காணப்படும் நோய்களைக் கணக்கெடுத்தால் அதில் புற்றுநோய்க்கும் முதன்மை இடம் உண்டு. புற்றுநோயை முதிர்ந்த நிலையில் குணப்படுத்துவது கடினம். ஆரம்பகட்டத்திலே புற்றுநோயைக் கண்டறிய விஞ் ஞானிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்ற னர். புற்றுநோய் செல்களை அவற்றின் வாசனை மூலம் கண்டறிய, நாய்களைப் பயன்படுத்திப் பார்த்தனர். கிட்டத் தட்ட 91 சதவிகிதம் வெற்றி! இதைவிட மேம்பட்ட வெற்றி கிடைக்குமா என பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சி மையம் முயன்றதில் வெற்றி கிடைத்துள்ளது. பட்டு எறும்புகள் எனும் ஒருவகை எறும்புகள் புற்றுசெல் களை எளிதில் அடையாளம் கண்டுள்ளன. இது ஆராய்ச்சியின் ஆரம்பகட்ட நிலைதான். இருந்தாலும் இந்த நல்ல செய்தியை உலக விஞ்ஞானிகள் வரவேற் றுள்ளனர். நாயைவிட எறும்புக்கு மோப்பசக்தி அதிகம்போல!

-நாடோடி