Advertisment

மாநிலம் தேசம் சர்வதேசம்!

news

ள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைத்துவிட்டு நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி யுள்ளது இலங்கை. ஏப்ரல் 25-ஆம் தேதி இலங்கையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடியின் தாக்கம் இன்னும் அந்நாட்டில் அகலவில்லை. அதிபர், பிரதமர் பதவி விலகுமளவுக்கு மக்கள் போராட்டம் தீவிரமடைந்தது. பின்னர் அதிபர் ரனில் விக்ரமசிங்க பதவியேற்றார். பின் உலக வங்கியின் கடனும் கிடைத்த நிலையில் ஓரளவு நிலைமை கட்டுக்குள் வந்தது. இந்த நிலையில்தான், நாட்டின் 340 உள்ளாட்சி அமைப்புகளுக்கான புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து தபால் வாக்குப் பதிவு, வாக்குப் பதிவுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் தபால் வாக்குப் பதிவு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது உள் ளாட்சித் தேர்தலே காலவரைய

ள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைத்துவிட்டு நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி யுள்ளது இலங்கை. ஏப்ரல் 25-ஆம் தேதி இலங்கையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடியின் தாக்கம் இன்னும் அந்நாட்டில் அகலவில்லை. அதிபர், பிரதமர் பதவி விலகுமளவுக்கு மக்கள் போராட்டம் தீவிரமடைந்தது. பின்னர் அதிபர் ரனில் விக்ரமசிங்க பதவியேற்றார். பின் உலக வங்கியின் கடனும் கிடைத்த நிலையில் ஓரளவு நிலைமை கட்டுக்குள் வந்தது. இந்த நிலையில்தான், நாட்டின் 340 உள்ளாட்சி அமைப்புகளுக்கான புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து தபால் வாக்குப் பதிவு, வாக்குப் பதிவுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் தபால் வாக்குப் பதிவு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது உள் ளாட்சித் தேர்தலே காலவரையறை யின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய அரசு அதிகாரிகள், தேர்தலுக்கு ரூ.50 கோடி செலவாகுமென மதிப்பிடப்பட்டது. ஆனால் அரசு கருவூலத்திலிருந்து வெறும் 4 கோடியே ஒதுக்கப்பட்டது. இதில் வாக்குச்சீட்டுகளைக் கூட அச்சிடமுடியாது என தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணங்களைப் போட்டுடைத்திருக்கின்றனர். அதிபர், பிரதமர் தேர்தலாச்சும் நடக்குமா?

Advertisment

news

லத்திட்டங்களைத் தொடங்கிவைக்க தமிழகம் வந்த பிரதமர் மோடி, அடுத்த நாள் கர்நாடகம் சென்று பந்திப்பூர் புலிகள் காப்பக வனப்பகுதியில் 22 கிலோமீட்டர் பயணம் செய்தார். அவரது பயணத்தின்போது புலிகள் எதுவும் கண்ணில் தட்டுப்படவில்லை. இதை கையிலெடுத்துக்கொண்டு கர்நாடக பா.ஜ. தலைவர்கள், பிரதமருக்கு புலியைக் காட்டாத டிரைவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிவருகிறார்களாம். இதுகுறித்து விளக்கமளித்துள்ள கர்நாடக வனத்துறை அதிகாரிகள், “"எப்படி புலி தட்டுப்படும்? பிரதமரின் பாதுகாப்பைக் காரணம் காட்டி, முந்தைய நாள் முதலே பாதுகாப்பு அதிகாரிகள் பல முறை சென்றுவந்த பாதையில்தான் பிரதமர் சென்றார். அப்பாதையில் பலமுறை வாகனங்கள் அங்கும் இங்கும் சென்றுவந்ததால், அங்கிருந்த புலிகள்கூட வேறிடத்துக்கு நகர்ந்திருக்கும். தவிரவும், பாதுகாப்பு வாகனங்கள் முன்னும்பின்னும் வர நடுவில்தான் பிரதமரின் வாகனம் வந்தது. பிறகெப்படி அவர் புலியைப் பார்க்கமுடியு? அதற்கு அந்த பாவப்பட்ட ஓட்டுநர் என்ன செய்ய முடியும்?''’என்கிறார்கள். அதானே! தேசிய விலங்கை மாத்திடமாட்டாரே?

Advertisment

ee

ந்தியாவில் பசுவை தாயாக எண்ணிப் போற்றுபவர்கள் அதிகம். தாய்ப்பாலுக்கு வழியில்லாத எத்தனையோ குழந்தைகளுக்கு மாட்டுப் பால் உணவாக அமைவதால் அதனை ஏற்றுக்கொள்ளலாம். எதிலும் அதீதமாகச் செல்லும் சிலர் பசுவின் கோமியத்தை புனிதப் பொருளாக எண்ணுவதோடு, கோமியத்துக்கு எத்தனையோ நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் உண்டு என்று அதீதமாகச் செல்வார்கள். வட இந்தியாவில் கோமியம் பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்பனையாவதுண்டு. கோமியம் புற்றுநோயைக் குணப்படுத்தும் என பா.ஜ.க. எம்.பி.யான ஷங்கர் பாய் பாராளுமன்றத்திலே பேசி அதிரவைத்தார். இந்த நிலையில்தான் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம், போஜ்ராஜ்சிங் தலைமையில் கோமியத்தை ஆராய்ச்சி செய்தது. இந்த ஆராய்ச்சியில் "பசுவின் கோமியத்தில் மனிதனுக்குத் தீங்கு விளைவிக்கும் 14 வகையான பாக்டீரியாக்கள் உள்ளன. இதனைக் குடிப்பது மனித ஆரோக்கியத்துக்குக் கேடு' என உறுதிப்படுத்தியுள்ளது. ஓ! கோமியம் இஸ் இன்ஜூரியஸ் டு ஹெல்த்!

கிளி வளர்த்தது குத்தமாய்யா எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார் தைவா னைச் சேர்ந்த ஹூவாங். அப்படி அவர் கேட்கு மளவுக்கு என்ன நடந்தது என்கிறீர்களா? கிட்டத்தட்ட 2 மாத சிறைத்தண்டனை யும், 1 லட்சம் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு அபராதமும் கட்டும்படி ஆயிருக்கிறது. ஹூவாங் அளவில் பெரிய தன் கிளியுடன் வெளியே சென்றிருக்கிறார். அப்போது டாக்டர் லின், ஜாகிங் வந்திருக்கிறார். எதிர்பாராத விதமாக கிளி பறந்துபோய் டாக்டர் லின்னின் முதுகில் அமர்ந்து படபடவென தன் இறக்கைகளை அடித்திருக்கிறது. பயந்துபோய் ஓட்டமெடுத்த லின் விழுந்து அடிபட்டுக்கொண்டார். விஷயத்தை நீதிமன்றத்துக்குக் கொண்டுவந்த லின்னின் வழக்கறிஞர், “"டாக்டர் லின் ஒரு அறுவைச் சிகிச்சை மருத்துவர். ஹூவாங்கின் அலட்சியத்தால் டாக்டர் அடிபட்டு எழுந்து நடக்கவே மாதக்கணக்கில் ஆகி விட்டது. மருத்துவச் செலவோடு, இந்த காலகட்டத்தில் மருத்துவப் பணிகளுக்குச் செல்லாததால் வரவேண்டிய பணமும் இழப்பாகிவிட்டது. இப்போதும் மருத் துவர் லின்னால் நீண்ட நேரம் நிற்கமுடிய வில்லை. எனவே உரிய இழப்பீடு தரவேண்டும்''” என வாதாட, அதை நீதி பதியும் ஏற்றுக் கொண்டார். தன் வளர்ப்புக் கிளிமேல் செம காண்டில் இருக்கிறா ராம் ஹூவாங். கிளி கூண் டுல,…ஓனர் ஜெயிலுல!

-நாடோடி

nkn190423
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe