Advertisment

மாநிலம் தேசம் சர்வதேசம்!

dd

து மத்தியப்பிரதேச விவகாரம். சாகர் மாவட்டத்தின் கிராமமொன்றில் மின்சாரக் கடன் நிலுவைக்காக பட்டியலினத்தைச் சேர்ந்த, வயதான தம்பதியொன்றின் கட்டிலைப் பறித்துச்சென்றிருக் கிறார்கள் மின்துறையைச் சேர்ந்த பணியாளர்கள். இதில் கொடுமை என்னவெனில், மின்கட்டண பாக்கி வைத்திருந்தது அந்த மூத்த தம்பதியின் மருமகள்.

Advertisment

dd

அவர் வீட்டிலில்லாத நிலையில், பக்கத்து வீட்டில் முதிய பெண்மணி குளித்துக்கொண்டிருக்கையில் திடீரென நுழைந்து கட்டிலை எடுத்துக்கொண்டு போயிருக்கின்றனர் பாக்கியை வசூலிக்க வந்தவர்கள். அவசர அவசரமாக உடையை அரைகுறையாக உடுத்தபடி, கட்டிலைக் கொடுக்கும்படி அந்த வயதான பெண்ணும் அவரது கணவரும் கெஞ்சியபடியே பாக்கியை வசூலிக்க வந்த நபர்களின் பின் செல்ல, இதைப் படம்பிடித்து சமூக ஊடகங்களில் ஒருவர் இட வைரலாகிவிட்டது. இதனால் ம.பி. பா.ஜ.க.வுக்கு அவப்பெயர் ஏற்பட, பாக்கியை வசூ

து மத்தியப்பிரதேச விவகாரம். சாகர் மாவட்டத்தின் கிராமமொன்றில் மின்சாரக் கடன் நிலுவைக்காக பட்டியலினத்தைச் சேர்ந்த, வயதான தம்பதியொன்றின் கட்டிலைப் பறித்துச்சென்றிருக் கிறார்கள் மின்துறையைச் சேர்ந்த பணியாளர்கள். இதில் கொடுமை என்னவெனில், மின்கட்டண பாக்கி வைத்திருந்தது அந்த மூத்த தம்பதியின் மருமகள்.

Advertisment

dd

அவர் வீட்டிலில்லாத நிலையில், பக்கத்து வீட்டில் முதிய பெண்மணி குளித்துக்கொண்டிருக்கையில் திடீரென நுழைந்து கட்டிலை எடுத்துக்கொண்டு போயிருக்கின்றனர் பாக்கியை வசூலிக்க வந்தவர்கள். அவசர அவசரமாக உடையை அரைகுறையாக உடுத்தபடி, கட்டிலைக் கொடுக்கும்படி அந்த வயதான பெண்ணும் அவரது கணவரும் கெஞ்சியபடியே பாக்கியை வசூலிக்க வந்த நபர்களின் பின் செல்ல, இதைப் படம்பிடித்து சமூக ஊடகங்களில் ஒருவர் இட வைரலாகிவிட்டது. இதனால் ம.பி. பா.ஜ.க.வுக்கு அவப்பெயர் ஏற்பட, பாக்கியை வசூலிக்கச் சென்ற மின் பணி யாளர்கள் அவசர அவசரமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கூடவே, அரசுக்கு அவப்பெயர் ஏற்படக் காரணமான, வீடியோவை வெளியிட்ட நபர்மீதும் வழக்குப் பதியப்பட்டு கைதுசெய்யப் பட்டுள்ளார். கோடிக் கணக்குல பாக்கிவெச்ச வனை விட்டுடுங்க!

Advertisment

யிரைக் கட்டி மலையை இழு… வந்தா மலை! போனா மசிரு! என வேடிக்கையாகச் சொல்வார்கள். அதேபோல சத்தீஸ்கர் அரசியல்வாதிகள் ஒரு சவாலில் இறங்கியிருக்கிறார்கள். இம்மாநிலத்தின் மூத்த பா.ஜ.க. தலைவர் நந்தகுமார் சாய். இவருக்கு ஏற்கெனவே நீண்ட முடி. இத்தோடு, "சத்தீஸ்கரில் காங்கிரஸ் அரசு மாறும் வரை முடியே வெட்டமாட்டேன்' என சபதம் எடுத்திருக்கிறார் நந்தகுமார். இதைக் கேள்விப்பட்ட காங்கிரஸ் அமைச்சர் அமர்ஜித் பகத், "வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸே மீண்டும் வெல்லும். அப்படி வெல்லாவிட்டால் தனது மீசையை மழித்துக்கொள்வதாக' சபதம் போட்டிருக்கிறார். இவர் களுக்காகத்தான் வள்ளுவர் பின்வரும் குறளை எழுதியிருக்கவேண்டும். மழித்தலும் நீட்டலும் வேண்டாம்!

dewe

து கேரள சமாச்சாரம். கேரளா, கொல்லம் மாவட்டம் -கொட்டம்குளக்கரா ஸ்ரீதேவி கோவில் திருவிழா அப்பகுதியில் பிரசித்தம். இந்தக் கோவில் திருவிழா ஏன் பிரசித்தம் என்றால், சமய விளக்குத் திருவிழாவில் கேரளா முழுவதிலுமிருந்து வரும் பக்தர்கள் பெண் வேடமிட்டுக்கொண்டு வந்து தங்கள் வேண்டுதலை நிறைவுசெய்வார்கள். சமயம் என்பதற்கு ஒப்பனை என்றுபொருள். பெண் போல் ஒப்பனை செய்துகொண்டு விளக்கேந்திச் செல்லவேண்டும். வேண்டுதல் பலித்தால் மொட்டை போடுவோம் என நாம் வேண்டுவதுபோல, கேரளாவில் தேவியிடம் வேண்டுதல் பலித்தால் பெண் வேடம் புனைகிறேன் என்று வேண்டியிருப்பார்கள். அதை நிறைவேற்றுவதற்காக இங்கு வருவார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கெடுபிடியால் வராமலிருந்த பக்தர்கள் இந்த வருடம் வந்து குவிந்துவிட்டார்கள். இந்த விளக்குத் திருவிழாவில் வந்து கலந்துகொண்டு பெண் வேடமிட்டவர்கள் நடுவே போட்டியும் நடத்தி முதல்பரிசு பெற்றவரையும் தேர்ந்தெடுக்கிறார்கள். “"ஐயையோ வேண்டுதல் பண்ணுனேன்…. எனக்கு பெண் வேடம் கட்டத் தெரியாதே'” என்பவர்கள் கவலையைப் போக்க, நிறைய ஒப்பனைக் கலைஞர்களும் கோவில் வாசலில் இருப்பார்களாம். அதுதவிர மாற்றுப் பாலினத்தவர்களும் இந்தத் திருவிழாவில் பெருமளவில் வந்து கலந்துகொள்கிறார்களாம். சேட்டன், சேச்சியாவே மாறி நிற்கிறாரே!

dd

டக வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார்கள் சுக்பீர்சிங் சந்துவும் அவரது மனைவியும். பாராட்டைப் பெறுமளவுக்கு இருவரும் என்ன செய்தார்கள்? அது ஒரு துயரக்கதை. 2020, அக்டோபரில் இந்தத் தம்பதிக்கு இரண்டாவதாக ஒரு குழந்தை பிறந்தது. பெண் குழந்தை. அபாபத்கௌர் எனப் பெயரிடப்பட்ட குழந்தைக்கு, சில நாட்களிலே "வெய்ன் ஆப் காலன் மால்பார்மேஷன்' என்ற இதயக்கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. இருபது நாட்கள் கடந்த கௌருக்கு இதயத் தாக்குதல் ஏற்பட்டது. பிறந்து இருபத்துநான்கே நாட்களான குழந்தை என்பதால் அறுவைச் சிகிச்சையும் செய்யமுடியவில்லை. இறுதியில் இந்த உலகைவிட்டு 39 நாட்களிலேயே பிரிந்தாள் கௌர். தாங்கமுடியாத துயரம்… இருந்தபோதும், அபாபத்கௌரின் உடலுறுப்புகளை தானம் செய்வதென அந்தத் தம்பதி முடிவுசெய்தனர். அக்குழந்தை சிறு குழந்தை என்பதால் சிறுநீரகங்களை மட்டும் பயன்படுத்திக்கொள்ள முடியுமென மருத்துவர்கள் தெரிவித்தனர். அப்படிப் பெறப்பட்ட சிறுநீரகங்கள், பாட்டியாலா கிராமத்தைச் சேர்ந்த தொடர் டயாலிஸிஸ் சிகிச்சை மேற்கொண்டுவந்த சிறுவனுக்கு அளிக்கப்பட்டு மறுவாழ்வு பெற்றிருக்கிறான். இத்தனை பெரிய இதயமுள்ள தம்பதிக்கு ஏன், இதய வலுவில்லாத குழந்தையை இறைவன் கொடுத்தான்? படிக்கும்போதே நெஞ்சு கனக்குதே!

-நாடோடி

nkn050423
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe